Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Thursday, November 29, 2012

“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?

அண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)

http://www.giriblog.com/2012/11/brahmin-cafe-controversy.html


          இது கொஞ்சம்!! தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே!
          செய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.
          திராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.
          எனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!! இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே! மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.
          தருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
          இதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.
          எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்! “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!! “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.
            எனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்கள் நடந்து கொள்வது!
          பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.
          சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்? இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே! டேய்! என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க! என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.
          லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே! இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!
          இது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.
          தான் உயர்ந்த சாதி!!! என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.


.

Friday, September 02, 2011

ஒண்டிக்கட்டையின் "கொழுக்கட்டை புலம்பல்கள்"



விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடுகிறார்களாம் அங்கே ...ம்ம்ம்ம் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு ...





என் புலம்பல்கள் கீழே

***
இனிமேல் கொழுக்கட்டை பற்றி பஸ் விடுபவர்கள் எங்களை போன்ற ஒண்டிக்கட்டைகளுக்கு கொழுக்கட்டை யை அனுப்பி வைக்கவும்....
# கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...

***
கைபேசியில் ஊட்டி விட்டால் கொழுக்கட்டை ருசியும் தெரியாது என் பசியும் ஆராது...

# இதையெல்லாம் காதலி(கள்) புரிந்துகொள்(ல்)வதேப்போது ?
# என்னமோ போ விநாயகா ...
 ...

****

விநாயகர் சதுர்த்தியை புறக்கணிக்கிறோம் ....

இப்படிக்கு
கொலுக்கட்டை கிடைக்காதோர் சங்கம்
சிங்கப்பூர் கிளை

...

from friends

 வைகை வி - Buzz -
ஊரு உலகத்துல பத்து பதினஞ்சு கொழுக்கட்ட தின்கிறவனுங்க எல்லோரும் சந்தோசமா திங்கிறாங்க... ஆனா ஒரு கொழுக்கட்டய ஓசில திங்கிறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே... அய்அய்அய்ய்ய்ய்ய்ய்ய்​யோ.... # இன்னும் ஒண்ணுகூட கிடைக்கல யுவர் ஹானர் :((

****

கந்ததாசன் ப்ளஸ் - Buzz -

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

..

Monday, August 29, 2011

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...



          மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள்  திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல  இடங்களை  சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின்  காலங்க் சமூக மன்றத்தில்  நடைபெற்ற  கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

















அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்
 

Friday, August 26, 2011

மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை



மணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.

வெற்றியாளர்கள்

தமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்
அரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்
தமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி

வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்
குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
*

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்
*

நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
          பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.  அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்


.

Thursday, March 03, 2011

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

      முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு  (கொஞ்சம் கேப்  விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப்  பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .

நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா  இருக்கும்)

பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்


தொடர்புக்கு
 
பிரபு :0065 -91301177
 
கோவிகண்ணன் : 0065 -98767586
 
சோசப் பால்ராஜ் :  0065 -93372775

****

இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட   நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ..  so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...


முன்னோட்டம் 


(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)


 (இந்த பூனையும் பால் குடிக்குமா ??)

முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில 





 ( ஹரி ,முகவை ராம் , கோவியார் )

சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......


பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது

Monday, November 22, 2010

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம்,நிறைய கட்டுரைகள் வந்துகொண்டிருக்கிறது. அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் நவம்பர் 15 என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து  மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.


இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்வலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்


ஒரு வேண்டுகோள்

மணற்கேணி போட்டி பற்றிய தகவல்கள் பலருக்கும் சென்றடைவதையும் பலரும் போட்டியில் கலந்துகொள்வதும் இதன் மூலமான ஆழமான எழுத்துகள் இந்த தமிழ் குமுகாயத்திற்க்கு கிடைக்க வேண்டுமென்பதால் உங்களிடம் ஒரு நன்கொடையை கேட்கிறோம், அந்த நன்கொடை மணற்கேணி பற்றிய போட்டியை உங்களுக்கு அறிந்தவர்களிடம் தெரிவிக்கவும், குழும மின்னஞ்சல்கள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், உங்கள் வலைப்பதிவுகள், இணையதளங்களில் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.
ஊடக அறிக்கை என்ற இந்த அறிக்கையை அச்செடுத்து(Print out) அருகில் உள்ள கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் இணையதள மையங்களுக்கு தந்து அதை அவர்களின் அறிவிப்பு பலகையில் இடச்சொல்லவும். ஊடக அறிக்கைக்கு இங்கே அழுத்துங்கள்

அன்புடன்
மணற்கேணி - 2010



.

Saturday, October 09, 2010

சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)






















 

அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று  நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket

....
நன்றி ஆ.ஞானசேகரன்

(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...

.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...