என் அக்கா மகள் தன் பள்ளியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக தன்னை தயார் செய்துகொண்டிருந்தபோது நான் எடுத்த காணொளி . பள்ளி ஆசிரியை எப்படி சொல்லித்தந்தாரோ அதேபோலவும் கூடவே தன குறும்புத் தனத்தோடும் அவள் பாடுவது அவ்வளவு அழகு . கேமராவை வீட்டில் இருக்கும் டீவியோடு இணைத்திருந்தேன் எனவே தன உருவத்தை அதில் பார்த்துக்கொண்டே பாடினாள் , தான் வார்த்தைகளை மறக்கும் பொது டீவியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பள்ளியில் ஆசிரியை மிரட்டுவது போல தன்னை தானே மிரட்டிகொண்டாள். இணைப்பும் பாடலும்..
part-1
part-1
காய்கறிகள் தோட்டத்துக்குக் கத்திரிக்கா ராசாவாம் -அந்தக்
கத்திரிக்காராசாவுக்கு கல்யாணம்தான் பேசாவாம்
பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
அடுத்தத் தெரு மார்கெட்டுல வந்து நின்னாராம்
ராசா வந்து நின்னாராம்
சொகுசா வந்து நின்னாராம்
பச்ச மிளகா பொண்ண பார்த்துபுட்டாராம் -அது
பார்க்க நல்லா அழகுதான்னு நினைச்சுகிட்டாராம்
ராசா நினைச்சுகிட்டாராம்
மனசுல நினைச்சுகிட்டாராம்
கிட்டவந்து தொட்டுப் பார்த்து ஆஹா என்றாராம்
கிட்டவந்து தொட்டுப் பார்த்து ஆஹா என்றாராம்
வாய்வரை வைத்து காரத்தால துடிச்சுபுட்டாராம்
ராஜா துடிச்சு புட்டாராம்
ரொம்பவும் துடிச்சுபுட்டாராம்
பாவம் துடுச்சுபுட்டாராம்
குட்டி குட்டி சுண்டக்கா கூட்டம் கூட்டமா-அது
குமுஞ்சுகெடந்த அழகபார்த்து சொக்கிபுட்டாராம்
ராசா சொக்கி புட்டாராம்
அதுல ஒரு சுண்டக்காய அழைச்சுகிட்டாராம்
ஆவணியில் கலியாணத்த முடிச்சுகிட்டாராம்
ராசா முடிச்சுகிட்டாராம்
ஜோரா முடிச்சுகிட்டாராம்...
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
*பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்
மீண்டும் சிந்திப்போம்
பிரியமுடன் பிரபு ..