பூவை கிள்ளிப் பறித்தேன்
அழாமல் சிரித்தது
பூ உன் கூந்தலுக்கு !!
என் கவிதைக்கான
பரிசு பணம் - முகவரி மாறி
சரியாக உன் வீட்டில்
என்னவளே நீ பவணி வரும்
எல்லாத் தெருவுமே
தேரடித் தெருதான் !
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்


எல்லோரும் "கண்பட்டுவிடுமோ" 
உன் தோட்டத்து ரோஜாவில்
கண்களால் திருடும் ராட்சசி
கடலின் ஆழமோ உன்பசி?
காகிதத்தில் பட்டதும்
கசிந்துருகும் பேனா
மை போல – உன்
கண்களில் பட்டதும்
மெல்ல மெல்ல
உருகுது என் உயிர்
கவிதையாய் …..
காதலாய் ……..
அப்படி பாக்காதே
உன் பார்வையை விட
கொடிய ஆயுதம் இதுவரை
கண்டுபிடிக்கபடவில்லை
கொலையுண்டவனே விரும்பும்
ஆயுதம் அது !!
கண்கள் இரண்டிலும்
கத்தியை வைத்துக்கொண்டு
“கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்”
என்று நீ சொல்வதை
எப்படி நம்புவது ?!