Thursday, November 12, 2020

ஹிந்தியை எதிர்கிறதா தமிழகம் ? ஹிந்தி சர்ச்சை கேள்விகளும் பதில்களும் / Is Tamil Nadu against Hindi? Hindi Controversy Questions and Answers / English subtitles


YOUTUBE LINK 

https://www.youtube.com/watch?v=-MFgDsXELSk



ஹிந்தி ஒரு மொழி அப்படிங்கறத தாண்டி தொடர்ந்து அரசியல் சர்ச்சையில் இருக்கக் கூடிய ஒரு டாபிக் . அந்த சர்ச்சைகள் தொடர்பா நிறைய கேள்விகள் கேட்கப்படும் அதற்கான பதில்கள் கொடுக்கப்பட்டது வந்து இருக்கு . ஆனாலும் கேள்வி கேட்கிறவன் கேட்டுக்கிட்டே இருக்கான் , காரணம் புதிதாக அரசியலை கவனிக்க துவங்கியிருக்கும் புதிய தலைமுறை ஆட்களை இந்தக் கேள்வியின் மூலம் திசைதிருப்பி தங்கள் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தான் 

சில கேள்விகளையும் அது தொடர்பாக  ரொம்ப ஈசியா புரிந்துகொள்ளக்கூடிய பதில்களையும் இப்ப நம்ம பார்ப்போம்

1. ஹிந்தி மொழியை எதிற்கிறதா  தமிழகம் ?

முதலில் கேள்வியே தப்பு ,  

யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய ஒரு மண்ணிலிருந்து ஒரு மொழிக்கு எதிராக எப்படி போராட்டம் நடக்கும்

இங்கு நடந்து எல்லாம் ஹிந்தி என்ற மொழிக்கு எதிரான போராட்டம் அல்ல ஹிந்தி திணிப்பு என்ற அரசியலுக்கு எதிரான போராட்டம் , அதை தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று பேசி வருவதை ஒரு வகையான அரசியல் தான்

இங்க ஹிந்தி கத்துக்க  நிறைய பிரச்சார சபாக்களும்  , கோச்சிங் சென்டர் களும் , ஏ தனியார் பள்ளிக்கூடங்கள் ஒரு மொழிப்பாடமாக கூட ஹிந்தி கத்துக்க எல்லா வாய்ப்புகளும் இங்கு இருந்துகிட்டு தான் இருக்கு . இதையெல்லாம் மீறி இது மொழிக்கு எதிரான போராட்டம் அப்படின்னு சொல்றது வெறும் அரசியல் தான்ச்சத்தில் இருந்த காலத்தில்

அறிஞர் அண்ணாவிடம்  ஓரு நண்பர் கேடடாராம் , "கொஞ்சம் முயற்சி செய்தல் சில மாதங்களில் ஹிந்தியை நீங்கள் கற்க முடியும் எனும் பொது அதை ஏன் எதிர்க்கணும் ?" என்று , அதற்க்கு அண்ணா சொன்ன பதில் "ஆமாம் சில மாதத்தில் கற்கலாம் அதற்க்கு மேல் கற்க அதில் என்ன இருக்கு ? என்று
அப்படிப்பட்ட ஒரு  மொழியை பார்த்து ; மிகவும் பழமையான, தொன்மையான , செம்மொழியான தமிழ் பயப்படும் என்று சொல்வதே வேடிக்கையானது .ஒரு மொழி மற்றொரு மொழியை வளர்க்கவே செய்யும் , அழிக்காது

ஒரு மொழிக்கு இன்னொரு மொழியை அழிக்க கூடிய சக்தி இல்லாமல் இருக்கலாம் ஆனால் அரசியலுக்கு அந்த சக்தி உண்டு . எந்த ஒரு இனம் ,மொழி , கலாச்சாரத்தையும் அழித்து ஒழிக்கும் சக்தி இந்த அரசியலுக்கு உண்டு. இதற்கான உதாரணங்கள் உலகம் முழுக்க உண்டு, குறிப்பா இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு  காரணம் இனமோ மொழியோ அல்ல அரசியல் என்பதே உண்மையான காரணம் அதேபோல , குஜராத் கலவரங்களுக்கு காரணம் மதன் என்று சொல்லப்படடாலும் , நிஜமான காரணம் அரசியல் தான் .அப்படிப்படட அரசியலை பார்த்து பயப்படவும் எதிர்க்கவும் வேண்டிய அவசியம் இருக்கு

அடுத்து , அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்கும் நீங்கள் , இந்திய மொழியான ஹிந்தியை எதிர்க்க காரணம் என்ன ? என்ற கேள்வியும் கேட்க்கப்படுத்து .


இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்னாடி , மொழி என்பதன் பயன்பாடுகள் என்னனு பார்க்கலாம்

எந்த ஒரு விஷயத்தையும் ஒருவன் தனது தாய் மொழியை கற்கும்போது வேகமாகவும் ஆழமாகவும் கற்றுக் கொள்கிறான் என்கிறது அறிவியல். அதன்படி ஒருவனுக்கு தன் தாய் மொழி கல்வி என்பது மிகவும் அவசியம் அதுவே முதல் மொழியாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு மேல் கற்கும் எல்லா மொழிகளும்  வெறும் கம்யூனிகேஷன் டூல் மட்டுமே. அது எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம்.

அப்படி , நாம் இரண்டாவதாக கற்கும் மொழியை தேர்ந்தெடுக்கும் போது அந்த மொழியானது உலகின் பெரும்பான்மை மக்களை தொடர்புகொள்ளக்கூடிய மொழியாகவும் ,அதிகமான தகவல்களை பெற உதவக்கூடிய ஒரு மொழியாகவும் இருக்க வேண்டும் , அப்படி ஒரு மொழியை தேர்வு செய்வதே அறிவுள்ள தேர்வாக இருக்க முடியும்.

அந்தவகையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதே சிறப்பானதாக இருக்க முடியும் காரணம் ஆங்கிலம் என்பது உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் பரவி இருக்கு .

சூரியன் மறையா சாம்ராஜ்யம் எங்களுடையது என்று அவர்கள் பெருமைபட்டுக்கொள்ளும் அளவிற்கு பரந்து விரிந்திருந்தது ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் .  அப்படி தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதி மக்களின் கலாச்சாரம், மொழி , கலை இலக்கியம் மற்றும் அறிவியல் என எல்லாவற்றையும் தங்கள் மொழியில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

இன்றைய நவீன காலத்துலயும் , உலகின் எந்த பகுதியில் எந்த ஒரு தொழில்நுட்பம் வெளியானாலும், அதைப்பற்றிய அத்தனை தகவல்களும் அதே நாளில் ஆங்கிலத்தில் கிடைக்கும் படியாக தனது கட்டமைப்பை வைத்துள்ளது அந்த மொழி

அப்படிப்படட ஒரு மொழியை கற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, உங்களால் அந்த மக்களை தொடர்புகொள்ளவும்  , அந்த தகவல்களை பெறவோ முடியும்

இதனால் தான் , இரண்டாவது மொழி என்று வரும் போது ஹிந்தியை விட்டு ஆங்கிலத்தை தேர்வு செய்தது தமிழகம் . அதுவே அறிவுப்பூர்வமான தேர்வாக நிரூபிக்கப்பட்டும் இருக்கு

அடுத்ததாக , மும்மொழி கொள்கையை எதிர்க்க என்ன காரணம் ?


 மும்மொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் , இரண்டு தேன் தடவிய வாக்குறுதிகளை சொல்லுவார்கள்  . ஓன்று , தமிழ் மொழி மற்ற  மாநிலங்களிலும் கற்றுக்கொடுக்கப்படும் மேலும் எந்த இந்திய மொழியும் தமிழகத்தில் கற்றுக்கொடுக்கப்படும் . இரண்டுமே பொய்யானது

மொழி பாடம் நடத்தும்  ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் நிறைய நிரப்ப படாமல் இருக்கு .  இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் தமிழ்  கற்றுக்கொடுக்கப்படும் என்பதும் , தமிழகத்தில் மற்ற மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும் என்பதும் பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன .

ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களில் கூட அதை சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறைகள் இருக்கும் போது ,  அந்த மொழியை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக  சொல்லிக் கொடுப்பதாக சொல்வது அரசியல் மட்டுமே அன்றி மொழி மீதான அக்கறை அல்ல

ஹிந்திக்கு மட்டும் ஆசிரியரை நியமித்து விட்டு , ஹிந்தி  மொழியை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உருவாகும் . எனவே மும்மொழி கொள்கை என்பதே ஹிந்தி என்ற மொழியை திணிப்பதற்கான மற்றும் ஒரு முயற்சிதான்

அப்போ மூன்றாவது மொழியா எந்த மொழியை கற்றுக்கொள்ளலாம் ?என்று  கேடடால்

மூன்றாவது மொழி என்பது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களின் தேவையில்லாத ஓன்று
 
ஆங்கிலம் மற்றும் தமிழை சரியாக கற்றுக்கொண்ட ஒருவனால் , படித்து முடித்து பின்னர் வேலை செல்லும் இடத்தில் தேவைப்படும் மொழியை தேவைப்படும் நேரத்தில் எளிதாக கற்றுக்கொள்ள முடியும் .

அதிகபட்ச்சம் ஓன்று அல்லது 3 மாதத்தில் கற்றுக்கொள்ள முடியும்

கற்றுக்கொள்ளும் திறன் அதிகம் உள்ள குழந்தை பருவத்தில் , வெறும் தொடர்பு கருவியான மொழியை மட்டுமே கற்றுக்கொள்ள நேரத்தை செலவிடுவது என்பது அவர்கள் மீது நாம் செலுத்தும் வன்முறை .

கலை மற்றும் அறிவியலை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன்  மூலம் அவன் வாழ்வை பயனுள்ளதாகவும் அழகானதாகவும் மற்ற முடியும்

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...