Thursday, November 17, 2011

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்(ஒரு மீள் பதிவு )

.
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????
:::::

இது ஒரு மீள் பதிவு
இதுக்கும்  படத்துக்கும் தொடர்புகள் கிடையாது..

என்றும்
பிரியமுடன் பிரபு......
.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...