Monday, December 10, 2012

week end enjoy Photography-Part-1-குழந்தைகள் -புகைப்படம்


Thursday, November 29, 2012

“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?

அண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)

http://www.giriblog.com/2012/11/brahmin-cafe-controversy.html


          இது கொஞ்சம்!! தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே!
          செய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.
          திராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.
          எனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!! இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே! மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.
          தருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.
          இதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.
          எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்! “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!! “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.
            எனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்கள் நடந்து கொள்வது!
          பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.
          சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்? இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே! டேய்! என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க! என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.
          லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள்!! இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன?… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே! இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!
          இது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.
          தான் உயர்ந்த சாதி!!! என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.


.

Thursday, November 22, 2012

நான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்தது)

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர். 

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது." 

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது." 

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன." 

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.
நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்." 

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.
மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.
-கலீல் ஜிப்ரான் 

( மொழிப்பெயர்ப்பு  யாரென்று தெரியவில்லை ,இணையத்தில் எப்போவோ படித்தது ..)


.பிரியமுடன் பிரபு 

Wednesday, November 14, 2012

தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் Deepavali - little india - Singapore)

தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள் 
பிரியமுடன் பிரபு ..
.

Tuesday, November 06, 2012

மதுபானக்கடை -"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா"

          அது ஒரு  தீபாவளிக்கு முந்தைய இரவு , அந்த அரசு பள்ளிக்கு எதிரில் இருந்த அகல்யா ரெஸ்டாரென்ட் வாசலில் வண்டியை நிறுத்தியதுமே "ஏன்டா லேட்டு" என்றான் கோபி. அவனுடன் திரு, சேகர், மணி, குமார் எல்லோரும் இருந்தார்கள்.

"என்னடா அவசரம் கை நடுங்குதோ"

"டேய் அப்புறம் பகவதி படத்துக்கு போக லேட் ஆகிடும்டா" என்று அவன் சொல்ல  நானும் சரவணனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றோம்.

          சின்ன சின்ன குடில்கள்  போல அறைகள், கதவுகள் இல்லாமல் துணியால் ஆனா  திரை தொங்கியது. முதல் அறையின் திரை விலகி இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என்று அதனுள் செல்ல முயன்ற என்னை சேகர் தடுத்தான். "நம்முது நாலாவது ரூம்மு" என்றன்,அப்போது எதிரே வந்த அந்த பெரியவரிடம் "நம்ம ரூமு ப்ரீயா இருக்கண்ணே" என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்லிச்சென்றார்.

          மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்த சிறிய அறை ரம்யமாக இருந்தது. அந்த வட்ட மேசையை சுற்றி  5 முதல் 8 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஒரு பணியாள்  வந்து என்ன வேண்டும் என கேட்டார். உணவும் மதுவகைகளும் சொல்ல கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த திரவத்தில் அப்படி என்ன இருக்கோ .. பார்த்தவுடனேயே அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. மிகச்சரியான அளவில் மது கோப்பையில் ஊற்றப்பட்டது. மது பழக்கம் இல்லாத நானும் சரவணனும் 7up உதவியுடன் அவர்களின் ஜோதியில் கலந்துகொண்டோம் .

          ஒவ்வொருவரும் ஒருமாதிரி அதைக் குடித்தார்கள்,ஒருவன் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்,ஒருவன் மெல்ல மெல்லக் குடித்தான், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாட்டுவைத்தியன் கொடுத்த கசாயத்தை குடிப்பதுபோல குடித்தான் ஒருவன். இப்படியாக குடித்தபடியே அன்று நடந்த கிரிகெட் போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அறைக்கு வெளியே இருந்து கேட்ட பேச்சுக்குரல் அனைவரின் கவனத்தையும் திருப்பியது .
" *** பெரிய இவனாட அவ(ன் ),நா இருக்கேன்டா நீ  கவல படாத, நண்ப(ன்) காதலுக்காக நா உயிரையும் கொடுப்பேன்" - என்று ஒரு குடிகாரனின் குரல் கேட்டது .

"அது குமரேசன் தானே " -என்றான் சரவணன்

"ஆமாண்டா.."

" *** அவரு நண்பே(ன் ) காதலுக்கு  உசுர கொடுப்பாராம்ல , இவனோட தங்கச்சிய அவ(ன்) நண்பன் காதலிச்ச கட்டிக்கொடுப்பானான்னு கேளுடா " என்று சரவணன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .

"சும்மா சரக்கடிச்சுட்டு உளர்றது " என்று சரவணன் மேலும் பேச
-
"டேய் , சரக்க தப்பு சொல்லாதடா  நீயெல்லாம் 7up குடிச்சு பேசுரதவிடவா நாங்க பேசிட்டோம் , நீயே சொல்லு பிரவு இவ்வளோ நேரமா இவன்தானே அதிகம்  பேசிட்டிருக்கன் ,அரைலிட்டர் 7up குடிச்சுட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு..." -என்றன் திரு .

"அரைலிட்டர் குடிச்சது போத அதிகமாகிடுச்சு போல"-என்று சரவணனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். அப்போது அவசரமாக தள்ளாடியபடியே வெளியே ஓடிய சேகர் அருகே இருந்த வாஸ் பெசனில் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது . "இப்ப தெரியுதா ஏன் நமக்கு 4 வது ரூம்னு..இங்கதான் பக்கதுலையே வாஸ் பேசன் இருக்கு " என்றன் கோபி .திரு எழுந்து சேகருக்கு உதவிக்கு போனான் .இப்படி ஒரு வழியாக குடித்து/சாப்பிட்டு முடித்து வாயில் சிலர் சிகரட்டோடும் சிலர் பீடாவோடும் வெளியேறினோம்.

          கொஞ்சம் துரத்தில் இருந்த அபிராமி தியேட்டரில் வண்டியை நிறுத்தியவுடன் டோக்கன் கொடுப்பவரிடம்

"அண்ணே படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு "

"5 நிமிசம்தான் ஆச்சு தம்பி" என்றார் அவர்

சரவணன் சிரித்தபடியே சொன்னான் "ம்கும் இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்தாலும் இதே வசனம்தா  சொல்லுவாரு இவர் ".

          டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை , நான்  7 டிக்கெட் என்று சொல்லும் போது  தியேட்டர் உள்ளே இருந்து டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்த எங்கள் ஊர் நண்பர்கள் சிலர்

"அண்ணே உள்ள பால்கேநில உட்கார இடம் இல்லை " என்றர்கள்

"இல்லாட்டி முன்வரிசைல போய் உட்காருப்பா"

"முன்வரிசைக்கா டிக்கெட் கொடுத்திங்க ? காசு அதிகம் வாங்கிட்டு முன்னடி உட்கார சொன்ன எப்படி ? மேலே எக்ஸ்ட்ரா சேர் போட்டு கொடுங்க "

"ஆமா இவருக்கு கட்டில் போட்டு கொடுப்பாங்க " என்று அவர் கடுப்பாக பதில் சொன்னார்,அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது ,அதற்குள் எங்களுக்கும் டிக்கெட் கொடுத்து இருந்தார்.

"மேலத்தான் இடம் இல்லையே ,நாங்க எங்க போக ?- என்றேன்

"முன்னாடி இடம் இருக்கு தம்பி " என்று பதில் வந்தது

"டேய் விஜய் மூஞ்சிய  மேல இருந்து பார்த்தாலே சகிக்காது , இதுல முன்வரிசைல இருந்து பார்த்த அவ்ளோதான் ,படமே பார்க்க வேணாம் டிக்கெட்ட திருப்பி கொடு" என்று என்னிடம் சொன்னான்  என் பின்னல் நின்ற சேகர் .

நான் டிக்கெட்டை திருப்பிக்கொடுத்தேன், அவர் என்னை முறைத்தார் என்னை நகர்த்திவிட்டு சரவணன் கவுண்டர் முன் நின்றன்.அவர் பதில் சொல்லாமல் காசை திருப்பிக் கொடுத்தார். "உம் முஞ்சிய பார்த்து வெளி ஊருன்னு நினைச்சுட்டான் போல" என்று என்னிடம் சொல்லியபடியே காசை சரவணன் வாங்கிக்கொள்ள எல்லோரும் வெளியேறினோம்.

"சரிடா அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா " என்றேன்

"ம்ம் உனக்கென்ன நீ குடிக்கல  உங்கப்பா கதவ திறந்து விடுவாரு ,எங்கபே ஓதப்பா(ன்)"

"அதுக்கு என்ன பண்ண ?"

"2 ஹவர்ஸ் இருந்துட்டு அப்புறம் போகலாம்.." என்று சொல்லியபடி பழமுதிர் சோலைக்கு அருகில் இருந்த டீக்கடை நோக்கி சென்றார்கள் .திரு-வை தவிர எல்லோருக்கும் போதை தலைகேறி இருந்தது .ஒரு எலும்பிச்சம் பழம் வாங்கி அவர்களின் வாயில் பிழிந்து விட்டான் சரவணன் ,போதை தெளியட்டும் என்று.திரு ஒரு சிகரெட்டை ஊதியபடி இருந்தான்

"நீயும்தானே குடிச்ச ,இவனுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ?" என்றேன் திரு-விடம் .

"ஒரு அளவு வேணாமா ?..குடிங்கடான்னா குளிக்கிரானுங்க..அப்புறம் இப்படித்தான்" என்றான்

          சேகர் மீண்டும் வாந்தி எடுத்தான் ,கண்கள் கலங்கி சிவப்பாகி இருந்தது .நேரம் செல்லச்செல்ல கொஞ்சம் போதை இறங்கியது ,தலையில் கைவைத்தபடி இருந்த சேகர் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா " என்றான், சரவணன் லேசாக சிரித்தான். பின்பு ஒருவழியாக அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குச்சென்றோம்.

         பலவருசம் கழித்து அதே போன்ற ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு ,இந்த நினைவுகளை பேசியபடி சரவணனுடன் அதே சாலையில் வண்டியில் சென்றேன்.

"அவனுங்க இன்னும் அப்படித்தாண்டா இருக்கனுங்க..அதுவும் அந்த சேகர் ரொம்ப மோசம்டா ,சம்பாரிக்கிறத எல்லாம் குடிச்சே காலியாக்கிடுறான், பாவம்டா அவே அப்பா அம்மா ,எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து பயிர்ல (வெற்றிலை கொடிக்கால்) மாடா உழைச்சு படிக்கவச்சாங்க , வயசான காலத்துல பையன் காஞ்சி ஊத்துவான்னு ம்ம்ம்ம் எங்க இன்னும் அவங்க சொத்துக்கு அவங்க வேலசெஞ்ச்சாத்தான் வழி,ஒரு தங்கச்சி வேற இருக்கு என்ன பண்ண போறனோ ம்ம்ம் " என்று சொல்லியபடி வந்தான். அந்த பழமுதிர்ச் சோலை இருந்த இடம் இப்போ அரசு நடத்து "டாஸ்மாக்" இருந்தது, அருகில் இருக்கும் அந்த கடையின்  வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு "இருடா ஒரு பால் பாக்கெட் வாங்கி வாரே " என்று சொல்லிவிட்டு சென்றான் .

          கடை கொஞ்சம் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது ,கடையின் முன் இருந்த பெஞ்ச்க்கு பதிலாக வட்ட மேசைகள் போடப்பட்டு அதைச் சுற்றி பிளாஸ்டிக்  சேர்கள் இருந்தன அதில் நான்கு ஐந்து பேர்  அமர்ந்து இருந்தார்கள், லேசாக மீசை  எட்டிப்பார்க்கும் வயசு அவர்களுக்கு. அதில் தலையில் கைவைத்தபடி இருந்தவன் அப்போதுதான் வாந்தி எடுத்து இருப்பான் போல ,கண்கள் சிவந்து இருந்தது. பால் பக்கெட் வாங்கிவிட்டு சரவணன் வந்ததும் நான் வண்டியை எடுத்தேன் .அப்போது தலையில் கைவைத்து இருந்த அந்த பையன் சொன்னான் "*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா,,..

பின் குறிப்பு 
1.  *** - ஒரு ஆபாசமான சொல்..)
2. இது புனைவு...:)

பிரியமுடன் பிரபு..

Monday, November 05, 2012

ஒரு இல்லம்... அதில் வாரத்திற்கு 5 மரணம்

FROM         
 
 
          அது ஒரு கருணை இல்லம். விடிந்தால் அங்கு அத்தனை பேரும் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக அங்கு வாரத்திற்கு 5 பேர் வீதம் இறந்து வருகின்றனர். இருப்பினும் இறப்பு குறித்த பயமோ, துக்கமோ அவர்களிடம் இல்லை. அழுகை, துக்கம் எதுவுமின்றி அருகிலேயே அடக்கம் செய்து விட்டு அன்றாட வாழ்வை தொடர்கின்றனர். மறுநாள் அக்குழுவில் யாரோ ஒருவருக்கு மரணம் நிச்சயம். இருப்பினும் எவ்வித சலனமும் அவர்களிடம் இல்லை. ரத்தத்தை உறைய வைக்கும் திகில் கதை போலிருந்தாலும் இந்த நிகழ்வுகள் நித்தமும் நிகழ்ந்து கொண்டிருப்பது அக்மார்க் நிஜம். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில்....
 
st_joseph_hospice_640
 
          பேராசை, இரக்கமின்மை, மறைந்து போன மனிதநேயம் என்று ஆறாவது அறிவு ஜீவிகளின் தடம்மாறுதலின் உச்சக்கட்ட கொடூர நிகழ்வு அது. நெஞ்சத்தை பதற வைக்கும் அந்த இல்லவாசிகளின் ‘கடைசித் தருணம்’ நெஞ்சத்தை பிழிய வைப்பன. வாசகர்கள் இந்த எழுத்தின் வழித்தடம் வழியே அந்த இல்லத்திற்கு நுழைந்தால் இதயம் பதறித் துடிக்கும். கண்ணீர் பெருக்கெடுக்கும்....
 
          நாம் செல்ல இருப்பது பூட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல். அங்கிருந்து மதுரைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ளது கொடைரோடு. அதற்கு 4 கிமீ. முன்னதாக ஜல்லிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளதுதான் அந்த புனித சூசையப்பர் கருணை இல்லம். முதியோர் இல்லம் என்று வழக்குச் சொல் அதற்குண்டு. அதுவல்ல நிஜம். மனநோய், முதுமை, குணப்படுத்த முடியாத வியாதிகளால் உறவுகளுக்கு சுமையாகி அனாதைகளாக்கப்படும் வாழ்வின் ‘கடைசித் தருணத்தில்’ இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி.
st_josephs_641
 
          2006ல் துவங்கப்பட்ட இந்த இல்லத்தில் இதுவரை 826 பேர் இறந்திருக்கிறார்கள். சிலருக்கு மரணம் சில மாதங்களில்... சிலருக்கு வாரம்... இன்னும் சிலருக்கோ நாள்கணக்கில்.... என்று பாதிப்பின் தன்மைக்கேற்ப மரணத்தின் அளவுகோல் இருந்திருக்கிறது. வந்த சில மணி நேரத்திலே மரணித்தவர்களும் உண்டு. 324 படுக்கைகள் இங்கு உள்ளன. மரணத்திற்கு மிக அருகில் உள்ளவர்கள், மரணத்திற்கு சற்று தூரத்தில் உள்ளவர்கள் என்று கணக்கிட்டு இவர்களுக்கு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. நடக்கவே முடியாதவர்களுக்கு தனி வார்டு.
பறித்து உண்ண ஒரு பழத்தோட்டம்
சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட ஏராளமான மரங்கள் நோயாளிகள் பறித்துத் தின்பதற்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆனால் திருட்டுத்தனமாக இவற்றைப் பறித்து மரங்களுக்கு அடியில் ஒளித்து வைப்பதும், தலையணைக்குள் பதுக்கி வைப்பதும் வயதான குழந்தைகளாகவே பார்வைக்குத் தெரிகின்றனர்.
          இங்குள்ள பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை உறவுகள் ரயிலில் பல நாட்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்டுச் சென்றுள்ளனர். (சொந்த மாநிலம் என்றால் மொழி தெரிந்து வீட்டிற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாம்). மனநலம் பாதித்து, உடல் உபாதையுள்ள இவர்களிடம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று இங்குள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் எல்லாம் பேசியும் இவர்களுடைய விபரத்தை.. ஏன்.. அவர்களின் பெயரைக் கூட கடைசி வரை அறிந்து கொள்ள முடியாமல் போனதும் உண்டு. இது போன்றவர்களுக்கு இந்த இல்லத்தில் புதிய பெயர் சூட்டப்படுகிறது.
 
          இல்லத்திற்கு முதலில் வந்ததுமே மொட்டை போடப்படுகிறது. பின்பு அவர்கள் அணிந்திருக்கும் கிழிந்த, கசங்கலான ஆடைகள் எரிக்கப்படுகின்றன. இவர்களை குளிக்க வைத்து புதிய ஆடை வழங்கி, உடல், மன நலத்தின் தன்மைக்கேற்ப வார்டு ஒதுக்கப்படுகிறது.
 
st_josephs_360குப்பைத் தொட்டி, சாக்கடை, துர்நாற்றம் வீசும் இடங்களில் சுருண்டு கிடந்தவர்களுக்கு இந்த மாற்றம் மாறுதலாக இருக்கிறது. சாப்பாட்டைப் பொறுத்தளவில் காலையில் காபி, டிபன், மதிய சாப்பாடு, மாலையில் காபி, சிற்றுண்டி, இரவுச் சாப்பாடு, வாரத்தில் 2 நாள் இறைச்சி உணவு. 4 நாள் முட்டை என்று என்று சத்தான ஆகாரமாகப் பார்த்து பார்த்து பரிமாறப்படுகிறது. காலை சாப்பாட்டிற்குப் பிறகு இங்குள்ள பூங்காவிற்கு மெல்லமாய் ஊழியர்கள் அழைத்துச் செல்கின்றனர். அருகிலேயே ஓய்வறை. அங்கு பகல் முழுவதும் டிவி.இயங்கிய வண்ணம் உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் பெரிய திரையில் சினிமா.
 
 
          பலரும் படுக்கையையே கழிப்பிடமாக்கும் நிலை அதிகம் இங்குண்டு. எவ்வளவு சுத்தம் செய்தாலும் கைக்குழந்தைகள் போன்றே தொடரும் இந்நிலையினால் துர்நாற்றத்தைப் போக்க காற்றோட்டமாக இருக்கும் வகையில் பல அறைகள் கிரில்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியாட்களைப் பார்த்ததும் சார், ஐயா, வாங்க... ஙஙஙங... என்று அவர்களுக்குத் தோன்றும் வார்த்தைகளால், ஓசைகளால் கையை ஆட்டிக் கொண்டு நம்மை நோக்கி வருகிறார்கள். சிலர் போட்டோ கொடுங்க என்கிறார்கள்.... சிலர் மனநிலை பிறழ்வில் மதிலைப் பார்த்து வாழ்வில் நடந்த விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
 
          சிறுவயதில், வாலிபவயதில், திருமணவாழ்வில், குழந்தைச் செல்வங்களுடன் என்று அவர்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் ‘தற்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்’ கருதி உறவினர்களின் பெயரையும் அழைப்பதும், அங்கும் இங்கும் சென்று பாவனை செய்வதும் பார்ப்பவர்களை கண்ணீர் மல்கச் செய்கிறது. இந்த இல்லத்திற்குள்ளே முடிந்து போன சோகக்கதைகள் ஏராளம். அதையெல்லாம் கேட்டால் மனம் பதறித் துடிக்கும்.
அவற்றில் சில.... இறக்கும் நிலையில் உள்ள அனாதைகள் மட்டுமே இங்கு சேர்க்கப்படுவார்கள். இதை அறிந்த ஒருவர் மனநிலை பாதிப்புடன் உடல்நிலைமோசமான தனது தந்தையை அனாதை என்றும், ரோட்டோரத்தில் கிடந்தார் என்று கூறி சேர்த்துச் சென்றுள்ளார். தந்தையோ, தனது மகன் வருவான் என்று புலம்பியபடி இருந்தவர் 2வது நாளில் அந்த நினைவுகளுடனே இறந்து போனார்.
 
st_josephs_480
 
          திருச்சிக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர் அந்த பெண். கணவன், 2 குழந்தைகளுடன் இருந்தவருக்கு புத்திபேதலித்தது. துரத்தப்பட்ட அவரை சில சமூக ஆர்வலர்கள் இங்கு சேர்த்தனர். மருந்து, பராமரிப்பு என்ற இருந்த இவருக்கு ஒருகட்டத்தில் பழைய நினைவு திரும்பியது. ஒருகட்டத்தில் தனது சொந்த ஊர், குடும்பம் குறித்து தெளிவாக கடகடவென சொல்லியதைக் கண்டு இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி... இந்த இல்லத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் செல்லும் இடம் கல்லறையாகத்தான் இருந்திருக்கிறது. வித்தியாசமான ஒரு நபரைக் கண்டதும் பாதர் தாமஸ் உதவியுடன் ஒரு குழு தனிவாகனத்தில் திருச்சி நோக்கி பயணித்தது. ஊர், வழியிடை விபரங்களை மிகச் சரியாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். வீட்டை நெருங்கியபோது அந்த மாறுபாடு தெரிந்திருக்கிறது. தனது குழந்தைகள் தாய் வீட்டில் வளர்வதாகவும்... தனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் அருகில் உள்ளவர்கள் தயங்கிக் கொண்டே சொல்ல... அரற்றியபடி விழுந்தவர்தான். மீண்டும் எழுந்தபோது அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இல்லத்தின் ஒர் மூலையில் தனது எஞ்சிய நாட்களை கடத்தி வருகிறார்.
 
வெறித்த பார்வை.. பரிதவிக்கும் மனசு..
ஆண்களைப் பொருத்தளவில் திக்கற்ற தனது கடைசித் தருணத்தைக் கண்டு மனம் இறுகிப்போய் வெறித்த பார்வையுடனே அவர்களின் வாழ்வு முடிகிறது. பாவம் பெண்களால்தான் இந்தநிலையை எதிர்கொள்ள முடியவில்லை. பழைய வாழ்க்கையை, உறவுகளை நினைத்து இறக்கும்வரை புலம்பிக் கொண்டே இருக்கின்றனர் என்கிறார்கள் இங்குள்ள ஊழியர்கள்.
          நிறுவனர் இயக்குனர் தாமஸ் ராத்தபிள்ளில் கூறுகையில், இங்குள்ளவர்களில் 35 சதவீதம் பேர் இயற்கை உபாதையை அடக்க இயலாதவர்கள். இவர்களுக்காக சிறப்பு வார்டு உள்ளது. பகலில் இவர்கள் உலாத்தும் பகுதிகளில் ஆங்காங்கே கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நடமாட முடிபவர்களுக்கு புல் பறித்தல், நீர் பாய்ச்சுதல், ஒட்டடை அடித்தல் உள்ளிட்ட சிறு வேலைகள் தருவோம். இது மருத்துவமனை கிடையாது. அதனால் இங்கு எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. 2 வாரத்திற்கு ஒருமுறை டாக்டர் வந்து சோதித்து மருந்து, மாத்திரை வழங்குகின்றனர். நர்சிங் முடித்த 6 பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்கள்தான் இதரநாட்களில் நோயாளிகளை கவனித்துக் கொள்கின்றனர்.
 
          சாவின் விளிம்பிற்கு வந்தவர்களின் அறிகுறி எங்களுக்குத் தெரிந்து விடும். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கடைசி நேர பணிவிடை செய்வோம். இறந்தது தெரிந்ததும் காடா துணியில் சுற்றி அருகில் உள்ள கல்லறைக்குச் சென்று விடுவோம். அங்கு மும்மத பிரார்த்தனை நடைபெறும். பின்பு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்வோம் என்றார்.
 
          இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை இங்கு வித்தியாசமாக இருக்கிறது. மேலிருந்து கீழாக 3 அடுக்குடனும், படுக்கை வசத்தில் 15 வரிசைகளுடனும் இந்த கல்லறை அமைந்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 45 பேரை தகனம் செய்ய வசதியுள்ள ‘அடுக்கு கல்லறை’ அது. கல்லறையின் தரைமட்டத்திற்கு கீழே 35 அடி ஆழம். ஒவ்வொரு அடுக்கும் 10 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் கீழ்நோக்கி சாய்வாக 6 அடி தளம்(இறந்தவர்களை படுக்க வைக்க) உள்ளது. காற்று, நீர் புக முடியாத வகையில் இவை முற்றிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை இந்த அடுக்கின் சாய்தளத்தில் படுக்க வைத்த நிலையில் வைத்து வெளிப்புறம் பூசிவிடுவார்கள். ஒரு வாரத்திற்குள் உடல் அழுகி சாய்தளத்தில் மெல்ல.. மெல்ல... சரிந்து 35 அடி ஆழத்தில் விழுந்து மக்கி.. எலும்புகளாகி விடுகிறது. அதிகம் இறப்பு ஏற்படும் பகுதி என்பதால் வித்தியாசமான முறையில் இந்த கல்லறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
st_josephs_cemetry_640
 
          இதற்காக சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளனர். இறந்தவர்கள் குறித்த தகவல் கிராம நிர்வாக அலுவலரிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
பாதர் ஜார்ஜ் கூறுகையில், மனிதனின் கடைசி தருணம் வசந்தமாக இருக்க வேண்டும். சாக்கடை, குப்பை, துர்நாற்றத்துடன் அவனின் முடிவு இருக்கக் கூடாது என்பதால் இந்த மையத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த வாட்கின்ஸ் என்ற பெண்மணி துவக்கினார். தற்போது காலை உணவிற்கு ரூ.4 ஆயிரம், மதிய உணவிற்கு ரூ.8 ஆயிரம், இரவு உணவிற்கு ரூ.2 ஆயிரம், மருத்துவ வசதிக்கு நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது. மூலதனமில்லாமல் சமூக ஆர்வலர்களை நம்பியே இந்த மையம் இயங்கி வருகிறது. பிறந்தநாள், திருமணம், விசேஷநாட்களில் ஆடம்பரங்களைத் தவிர்த்து இது போன்றவர்களுக்கு உதவினால் அது இறைவனுக்கே செய்யும் தொண்டு ஆகும். இந்த இல்லம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் 93603 76678, 94420 30354, 99762 11721 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 
          வாரத்திற்கு 5 இறப்பாவது இங்கு நிகழ்கிறது. இறப்பு, அருகில் உள்ளவர்களைப் பாதிக்கும் என்பதால் உடனுக்குடன் சடலத்தை அகற்றிவிடுகின்றனர். இருப்பினும் பக்கத்து படுக்கையில் உடல் செயலற்று, பாதிக் கண் திறந்துள்ள நிலையில் உள்ள நோயாளியின் மனதில் என்னவோ இன்று நீ... நாளை நான்... என்ற எழும் எண்ண ஓட்டம் நம் நெஞ்சைப் பிசைகிறது.
 
          குடும்பத்திற்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள் நோய் வாய்ப்பட்டதும் குப்பையைப் போல அவர்களை ரோட்டில் தூக்கில் வீசும் அவலம் எந்த ஜீவராசிகளிடமும் இல்லாதது.சாவு நெருங்கியவர்களுக்கான அறையை கனத்த மனதுடன் சென்று பார்த்தபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பேதலித்த புத்தியுடன் வெறித்த பார்வையுடன் அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில்தான் ஆயிரமாயிரம் ஈட்டிகள்... மனித சமுதாயத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் தருணம் அது. செவ்வாயை எட்டியாயிற்று... விண்வெளியில் உள்ள ஓடத்தை இங்கிருந்தே பழுது பார்த்தாயிற்று... லட்சக்கணக்கான கிமீ. தூரத்தில் காற்று, தண்ணீர் இல்லாத இடத்தில் மாதக்கணக்கில் இருந்து சாதனை செய்தாயிற்று... ஆனால் மனிதநேயத்தில் ‘கீழ்நோக்கிய’ இந்த அசுர வளர்ச்சி மனித சமுதாயத்தையே தலை குனியவைக்கிறது.
 
st_josephs_515
         
          கட்டுரை முடிவடையும் நேரத்தில் கருணை இல்லத்தில் இருந்து போன். ‘சார்..! நைட்டியோட ஒரு வயசான அம்மா... தடுமாறி தடுமாறி நடந்தாங்களே... வணக்கம் கூட சொன்னாங்களே.. அவங்க இப்போ இறந்திட்டாங்க...!’அந்த பெண்மணி நம்மை நோக்கி ஏதோ சொல்ல வருவதும், தெரியாமல் நாம் விழித்ததும் மெல்ல நினைவிற்கு வருகிறது. ‘இறப்பை உணர்ந்து’ போய் வருகிறேன் என்று சொல்லியிருப்பாரோ.. அடுத்த முறை அங்கு சொல்கையில் யார் யார் இருப்பார்களோ...! என்ன முயன்றும் வழிந்தோடும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை.. வளரட்டும் மனிதநேயம்.. வேண்டாம் இது போன்றதொரு இல்லம்.
+++++++++++++++++++++++++++++
கட்டுரை, படங்கள்: கலிவரதன்
 
 
.

Monday, October 29, 2012

மின்வெட்டு-அரசியல் அடிமைகள்- துப்பாக்கி(விஜய்)

          மின்வெட்டு மெல்ல மெல்ல உயர்ந்து இப்போ 16 மணி நேரம்னு இருக்கு..(நல்ல முன்னேற்றம்டே). எல்லாத் தொழில்களுக்கும் மின்சாரம் முக்கியம் இப்படி மின்வெட்டு இருந்தால் முதலாளிகள் என்ன செய்வார்கள் ? இழுத்து மூடுவார்கள், அவற்றை நம்பி இருந்த மக்களின் கதி ?

          காலகாலமா விவசாயம் செய்துவந்த குடும்பங்களின் இந்த தலைமுறையினர் தண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மெல்ல மெல்ல விவசாயத்தை விட்டுவிட்டு ஈரோடு-கோவை-சிவகாசி-ஒசூர் என தொழில் நகரங்களின் வேலைக்குச் சென்றனர். இப்போது டெக்ஸ்டைல், சாயபட்டரை, அச்சகங்கள், லேமினேசன் தொழில், கட்டிங், ஸ்கோரிங் மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தீபாவளி சீசனுக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு பேக்கிங், கிப்ட் பாக்ஸ்கள் தயாரிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யமுடியாமல் சொந்த ஊரில் இருந்து பிழைக்கபோனவர்கள்  இப்போது அங்கும் பிழைக்க வழியின்றி செய்து வருகிறது அரசாங்கம்.சென்னையில் மட்டும் ஏன் குறைவான (1 மணி நேரம்) மின்வெட்டு என தெரியவில்லை.

          திமுக-அதிமுக என்ற இரண்டு பெரிய கம்பெனிகளின் அடிமைகளாய் தொடர்ந்து இருந்துவரும் தமிழகம் இன்னும் என்ன என்ன சிக்கல்களை சந்திக்க போகிறதோ !.  சினிமாவும் , பேசியே ஏமாற்றும்  ஆற்றலும் கொண்ட அந்த இரண்டு கம்பெனிகளின் தலைவர்களும், அவர்களின் அடிபொடிகளும்  கோடிகளை சேர்த்துக்கொண்டிருக்க எங்கட்சி ஒசத்தி உங்கட்சி ஒசத்தின்னு பேசிக்கிட்டு திரியுதுங்க அவர்களின் அடிமைகள். நாசமா போங்கடே..

()

http://www.youtube.com/watch?v=zXzW11lDtqY


           துப்பாக்கி - டிரைலர் பார்த்தேன்..நல்லாத்தான் இருக்கு. என்ன... எப்பவுமே விஜய்  சீரியசா வசனம் பேசினா  திரையரங்கில் சிரிப்புச்சத்தம்தான் கேட்கும்.. இதுல இங்கிலிபிசு வேற.. (சிரிப்பு [போலிச இருப்பாரோ ?)  எல்லாம் முருகதாஸ் கையில இருக்கு. :)
என்றும் பிரியமுடன் பிரபு..

.

Monday, October 15, 2012

இங்கிலீஷ் விங்க்லிஷ் - மாற்றான் - சச்சின் - புரட்டாசி இன்னும் வரல


()

கடந்த வாரம் கேபிள் சங்கர் சிங்கை வந்து இருந்தார் . நான்,குழலி&கோவி அண்ணன் மூவரும்  அவரை லிட்டில் இந்தியாவில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.  பிறகு எல்லோரும் இங்க்லீஷ்-வின்கிலிஷ் பார்க்க சென்றோம் . தமிழ் தவிர்த்து மாற்று மொழி படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் இணையத்தில் மட்டுமே. ஹிந்தி  தெரியாது என்பதால் சப்டைட்டில்-லே துணை என்று நம்பி புறப்பட்டேன். படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே  சப்டைட்டில்-லோடு பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாத அளவிற்கு படம் பிடிச்சு இருந்துச்சு.கண்டிப்பா பார்க்கலாம். குறைந்த கதாபாத்திரங்கள்தான், பெரிய  திருப்பங்கள் இல்லாத திரைக்கதைதான் ஆனாலும் சலிப்பில்லாமல் பார்க்க முடிந்தது . கடைசி காட்சியில் ஸ்ரீதேவி அதிரடி ஆங்கிலம் பேசி அதிரவைக்காமல் அந்த குறைந்த காலத்தில் கற்றுகொள்ளக் கூடிய ஆங்கிலத்தில் பேசும்படி இருப்பதை பாராட்டலாம்..


()
மாற்றான்

என் நண்பர் "மாற்றான்" போகலாம் வா என்றார், நான் வரலேனுதான் சொன்னேன் ஆனால் "ஏற்கனவே நுழைவுச்சீட்டு எடுத்தாச்சு வேற வழியில்ல வந்துவிடு" என்று சொன்னதால் போனேன். பயபுள்ள எதோ பழைய பகைய மனசுல வச்சு பழிவாங்கிட்டான். வடிவேல் பாணில சொன்னா படம் "ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு ப்பினிசிங் சரியில்லையேப்பா".  முதல் ஒரு மணி நேரம் பரவாயில்லை (சில வசனங்கள் சிரிக்கும் படி  இருந்துச்சு..). இரண்டாம் பாதி "எப்படா முடியும்" என்று இருந்தது.

மனுஷ்யபுத்திரன்  முகநுலில்
Manushya Puthiranநேற்று ’ஒஸ்தி’ படம் திருட்டு டிவிடியில் பார்த்தேன். டைட்டில் கார்டு போடும்போது ‘ இந்தப் படத்தில் நடித்த மிருகங்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஒரு கார்டு வந்தது. நான் ஒரு மிருகமா பிறந்திருக்கக்க் கூடாதா என்று முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை தோன்றிக்கொண்டே இருந்தது.

மாற்றான் படம் துவங்கிய போதும்  ‘ இந்தப் படத்தில் நடித்த மிருகங்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஒரு கார்டு வந்தது. ...:)

கஜல் அகர்வால் :  கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா(பாடல் வரி)
 ஹி ஹி  உங்கவீட்டு எங்கவீட்டு அழகில்ல அம்புட்டும் அழகு... :)


()

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து அடுத்த மாதம் யோசிக்க போவதாக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.-செய்தி

வேண்டாம் தலைவா நீ விளையாடிகிட்டே இரு நாங்க ரசிச்சுகிட்டே இருக்கோம்...:)

ஆனாலும்...

அடுத்த மாதம் நான் பங்கேற்க உள்ள போட்டிகளின் போது, ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்க உள்ளேன். 39 வயதை கடந்துவிட்ட நிலையில் இன்னும் என்னால் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தில் எனது உடல் மற்றும் மனதின் பலத்தை பொறுத்தே, ஓய்வு பெறுவது குறித்த முடிவு எடுக்க உள்ளேன். 

இதுவும் நியாயம்தான்...:)  ரசிகர்கள் மனசுத்தான் ஏற்றக்கொள்ள சிரமப்படும்... இப்போதைக்கு சேம்பியன் லீக் போட்டிகளில் அவர் ஆட்டத்தை ரசிப்போம்...


()

புரட்டாசி முதல் வாரம்..அப்போ அம்மாவிடம் தொலைபேசிக் கொண்டிருந்தேன் .

அம்மா : என்னப்பா சமையல்

நான் : சிக்கன் குழம்பும்மா ..

அம்மா : ஏம்பா புரட்டாசி மாசம்ப்பா ..

நான் : ஓ ! புரட்டாசி வந்திடுச்சா ?

அம்மா : 7 தேதி ஆச்சுப்பா...

நான் : அப்படியா ! இந்தியாவுக்கு சீக்கிரமா  வந்திடுச்சு போல இன்னும் சிங்கப்பூர் -க்கு வரல...:)

Tuesday, September 25, 2012

ஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…?

http://www.aanthaireporter.com/?p=11232

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.


2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?

இல்லை. சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.


3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?
கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.


4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?
கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது – கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்
மூன்றாவது – விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.
நான்காவது – சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
ஐந்தாவது – பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.


5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?
கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)
பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது
ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா

வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.


6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?
கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.


7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?
அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.


8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?
பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்


9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?
ஆமாம். நிச்சயமாக.முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!

11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்
ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.


12. எரிமலைப் பாறைகளா?
ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.மேலும் பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.


14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?
இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.
மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்
இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.


16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா?
சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின் செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?
இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?


17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது. ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.


18. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?
ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள்.
ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.


19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?
நிறைய உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் ரஷ்ய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார். அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.
1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது
சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர். அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.


20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?
அதுதான் வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.


21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?
விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.
கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்


22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?
யார் சொன்னது? ரஷ்யாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது.
மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை ரஷ்ய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.
ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.
சமீபத்தில் ஜப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


23. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?
மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை.எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை.சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.


24. மற்ற நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன. குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?
கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள்
அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.

25. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?
நிச்சயமாக

Monday, September 10, 2012

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...