Wednesday, December 24, 2008

அடியே கண்ணம்மா.................24/12/2008

.அடியே கண்ணம்மா
தூக்கத்த விட்டுப்புட்டு
துள்ளி எழுந்து படிபுள்ள..........


“ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
அரவணைச்சு பாத்துக்குவா(ன்)
பொட்டைய பெத்துட்டியே......
போதாத காலம்தான் இனி உனக்கு” - என்று
பேசிய வாய்க்கெல்லம்
டார்ச் அடிச்சு பாக்கவேணும்
டாக்டராகி நீயும் வா!

பெத்தவ(ன்) போயிட்டான்
சாமியின்னு ஆயிட்டான்
ஒத்தையில் நாநின்னு
ஒருவேல சோறுதின்னு

ஒவ்வொண்னா சேத்துவச்சே(ன்)
மெத்த வீடுவேண்டாம்
மேணிகொழுக்கதீணி வேண்டாம்-இந்த
கட்ட வேகுமுன்னே-நீ
டாக்டராகி காட்டிபுடு.....
பக்கத்துவீட்டு பார்வதியின்
சொத்த பல்லுக்கும்
மூலவீட்டு மாலதியின்
மாலகண்ணூக்கும்
நீதான்டீ காவலு
கண்விழிச்சு எழுந்துவா.......

கான்மெண்டே பாக்காத
காட்டுபய ஊருக்குள்ளே
காலேஜு போறபுள்ள
மாட்ட மேய்க்கிற மனுசனுக்கும்
மனுசன எய்க்கிற மாட்டுக்கும்
மருத்துவச்சி நீதான்டீ
மணியாச்சு எழுந்துவா.............


...................................................................
படிச்சீங்களா...........
அப்படியே ஓட்டுபோட்டுட்டு போங்க
...................................................................


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1531Monday, December 15, 2008

சுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008

..............................

கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................


பல்லவி :


சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் அவன் துறவி
இவளை
காணாவிட்டால் அவன் துறவி
உண் கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........ (உன்னாலே ......)


(சிட்டு..............)


சரணம் 1 :

வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........

இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........

தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்......... (பாவை.......)

(சிட்டு சிட்டு குருவி..)சரணம் 2 :

கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தென்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......

பூப்போல் தேகம் கண்டேன்
புயல் போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........

அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க
யாருமின்றிசுற்றி திரியுதே!! ( கேட்க.......)
(சிட்டு சிட்டு...)
........................................................


Sunday, December 07, 2008

கூவமும் குளியலறை நீரும்


பெண்ணே
உன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்
................................................................................................................
சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ
.................................................................................................................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530 

 

Wednesday, November 26, 2008

கதைசொல்லப்போறேன்


அமைதியான இரவு
ஆழ்ந்த உறக்கம் கலைந்தப்பின்
உறங்க மனமின்றி
மொட்டைமாடிக்குச் சென்றேன்
வறுமையில் வாடியவன்
வயிறு போல – வானம்
வெறுமையாய் இருந்தது


கடையடைப்பு செய்யப்பட்ட
கடைவீதி போல – வானம்
கலகலப்பின்றி இருந்தது
தெருமுனையில் ஏதோ
சப்தம் கேட்க
தேடிப்போனேன்


என்ன ஆச்சர்யம்!!!
வானில் காணாததை
வழியில் கண்டேன்!


நிலவதன் தலைமையில்
நட்சத்திரங்கள் பேரணியாய்
வந்தன......
எங்கே செல்கின்றன???


தொலைந்த நட்சத்திரங்களை
மீட்ககோரி - மனுகொடுக்க
மாவட்ட அலுவலகம் செல்கிறதோ??


ஓசோன்படல ஓட்டையை
அடைக்கக்கோரி - மனுகொடுக்க
தலைமைச் செயலகம் செல்கிறதோ??


எங்குதான் செல்கின்றன??
பின்தொடர்ந்தேன்
ஒரு வீட்டினருகில்
பேரணி நிறுத்தப்பட்டது!
கதவு தட்டப்பட்டது!!


நீ வந்து கதவு திறந்தாய்!!!


நிலவும் நட்சத்திரங்களும்
ஒருசேர பாடின
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

..................................................................

Wednesday, October 15, 2008

நிலா?பேத்திக்கு உணவூட்டும்
பக்கத்து வீட்டு பாட்டி
நிலா நிலா ஓடிவா......- என்றுபாட
எதிர்வீட்டு கதவுதிறந்து
என்னவள் நீ வெளியேவர
லேசாய் புன்னகைத்தேன்
ஏனோ என்று
எல்லோரும் பார்த்தனர்
அவர்கட்கு எப்படி தெரியும்
என்வானின் நிலா நீதானென்று..

...................................................................................................................................
எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
..................................................................................................................................

Tuesday, September 23, 2008

பார்த்த முதல் நாளே--சினிமா மெட்டுக்கு என் பாட்டு - 2


"வேட்டையாடு விளையாடு " படத்தில் இருந்து "பார்த்த முதல் நாளே" பாடல் மெட்டுக்கு என் வரிகள்


பல்லவி :
காதல் வந்ததாலே..
என் நெஞ்சில்
காதல் வந்ததாலே..

யாவும் இனிக்கிறதே..
இவ்வுலகில்
வாழப் பிடிக்கிறதே..

உனைப்போல் ஒருத்தி கிடைத்தவுடன்
இந்த உலகம்தானே பிடித்த இடம்
சொர்க்கங்கள் வேண்டாம்
நீ மட்டும் போதும்
(காதல் வந்ததாலே........)

சரணம் 1 :


மயிலிறகு கூந்தல்
வருடிக் கொண்டேதான் - உன்
மார்பில் முகம்சாய்க்க வேண்டும்

வாழும் காலமெல்லாம்
உன் கண்ணின் இமைக்குள்
நான் கைதியாகிவிட வேண்டும்

எனை கொத்திக் கொல்லும்
கழுகென்று - உந்தன் விழிரெண்டை
நானும் அன்று கண்டேன்

எனை கொன்றுத் தின்ன
என்னுயிரை உனக்கே உயிலெழுதி
நானும் மின்று தந்தேன்

உன்னோடு ஒர்நாள்
வாழ்ந்தாலும் போதும் - என்
வாழ்வு வளமாகும் பெண்ணெ......
நீயின்றி வாழ்ந்தாலே
ஜென்மங்கள் யாவும்
சாபமாகிப்போகுமடி கண்ணே..
(காதல் வந்ததாலே..)
சரணம் 2 :
 
பெண்;
கடற்கரை மணலில்
உன்பாதச் சுவடில்
கால்பதித்து நடந்திட ஆச(சை)

காற்றில் கலந்துவிட்ட
உன் சுவாசக் காற்றை
கண்டேடுத்து சுவாசிக்க ஆச(சை)ஆண் ;

உன்கண்கள் இரண்டும்
என்கண்கள் இரண்டும்
ஓர்கானவு கானும்வரம் வேண்டும்

கானும் கனவிலும்
கண்மனியே உனைநான்
பிரியாமல் வாழ்ந்திட வேண்டும்

கடவுள்கள் கூடி
உனைகேட்டால் கூட
நான் திருப்பித்தரமாட்டேன் பெண்ணே..
எமனே என் எதிரே
வந்தாலும் கூட
போரிட்டு உனைகாப்பேன் கண்ணே
..
(காதல் வந்ததாலே..)


Saturday, September 13, 2008

இதே நாள், இதே மண்டபம் - ஒரு காதல்(லின்) கதை ..பல வருடம் கழித்து இப்பொதுதான் என் சொந்த ஊருக்கு வருகிறேன்.அதுவும் என் உயிர்த்தோழன் வீட்டு திருமணத்திர்க்காக. மண்டபத்தை பார்க்கும் போதே வசந்தகாலத்தைபோல மனசு இதமாய் பூத்தது

"வாடா வா,இதுதான் வர்ர நேரமா? பத்திரிக்கை கொடுக்கும்போதே சொல்லிக் கொடுத்தேன் அப்ப சரின்னு சொன்ன,நேற்று உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு நீ இப்பத்தான்வர்ர...." - என்று சற்று கோபித்துக் கொண்டே வர்வேற்றான் என் நன்பன் . குளிப்பதற்க்காக அறைக்குச் சென்றேன், வழியில்தான் அவளை பார்த்தேன் . முதலில் ஏதோ சிலைதானோ என்று தோன்றியது அருகில் வரவரவே அது பெண்ணென்று புரிந்தது

சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது. அருகில் வந்தவள் ஒரு துண்டை என்னிடம் கொடுத்து "அந்த அறையில் சென்று குளித்துவிட்டு சீக்கிரம வாங்க" என்று கூறினாள்.பேசினாளா? பூவெடுத்து வீசினாளா?நிரம்பிய கோப்பையில் மேலும் நீரூற்ற வழிந்தோடும் நீரைப்போல வழியெங்கும் வழிந்தோடுகிறது அவள் அழகு.
அவள் மெல்ல நடக்கிறாள்.இது என்ன வகையான நடை? முதன் முதலில் நடக்க துவங்கும் குழந்தை இருபக்கமும் கைகளையும் நீட்டி பேலன்ஸ் செய்தபடி தத்திதத்தி வரும் போது தெரியுமே ஒரு அழகு அதுவும் உடல் தளர்ந்து சுருங்கிய சருமத்துடன் பாட்டியோ தத்தாவோ நடந்து வரும்போது தெரியுமே ஒரு அழகு அதையும் சேர்த்த அழகு.நடக்க நடக்க பூமி தன் கைகளையேந்தி அவள் பாதத்தை பதியம் போட்டு கொண்ட்து.நாளை அங்கே பூக்கள் முளைத்திருக்ககூடும்குளித்து முடித்து கூடத்திற்க்கு வந்தேன்.பலவருடமாய் பாராத நன்பர்கள் ஒவ்வொருவராய் நலம் விசாரித்து பேசிக்கொண்டே இருந்தார்கள் என் கண்கள் மட்டும் அவளையே தேடியது. அதோ ! அங்கே நிற்க்கிறாள்,யாருடனோ கையைப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறாள் அது அவளின் தோழியாக இருக்கவேண்டும்.சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..

மணநேரம் நெருங்க மணமக்கள் மணவறையில் அமர்ந்திருந்தனர், மணமக்களின் உறவுமுறை கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவள் மணமேடையில் சற்றே தள்ளித்தான் நின்றாள்.ஆனால் எனக்கோ "எங்கே தன் அழகில் மயங்கி மணமகன் தன் கழுத்தில் தாலி கட்டிவிடுவானோ "என்று எண்ணி தள்ளி நிற்ப்பது போல தோன்றியது
ஐயர் மந்திரம் சொல்ல மேளம் முழங்க கல்யாணம் முடிந்தது.அனைவரும் அர்ச்சதை தூவினார்கள் முதல் வரிசையில் இருந்ததால் என்மீதும்,மேடையில் இருந்ததால் அவள்மீதும் சிலபல விழுந்தன
அடுத்து என்ன கூட்டம் மெல்ல மெல்ல சாப்பாட்டு அறை பக்கம் சென்றது.நான் என் நன்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் அவனை யாரோ அழைக்க அவனும் எழுந்து சென்றான்.அப்பொது அவள் அருகில் வந்தாள் "வாங்க சாப்பிட போகலாம்" என்றாள் அரசன் உத்தரவுக்கு அடிபணியும் பணியாளனைப் போல எழுந்து அவளுடன் சென்றேன்
இரண்டடி தூரத்தில் அவள் நடக்க நான் பின்தொடர்ந்தேன். திடீரென நின்ற அவள் என் பக்கம் திரும்பி "அந்த மணவறையை பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று கேட்டாள்,ஒருமுறை மணவறையை பார்த்தேன் பின் அவள் கண்களை உற்று பார்த்து சொன்னேன் " 40 வருசத்துக்கு முன்னாடி இதே நாள், இதே மண்டபம்,அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.


குறிப்பு : (ஏதுக்கு நடிகை பாவணா படம் போட்டேன்னு கேட்க கூடாது)


Monday, September 08, 2008

கல்லூரியில் காதல்


காலைச்சூரியன் என்ணை
தட்டி எழுப்பினான்
இன்று கல்லூரியின்
கடைசிநாள்


பேருந்து நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்
என் தேவதைக்காக


அதோ!
அவள் வருவது தெரிகிறது


ஆம்!
நேற்றைய அம்மாவாசை இரவில்
நான் வானில் தேடிய
நிலவு - இன்று
தரையில் தவழ்ந்து
வருவது போல் வந்தாள்


இந்த தங்கதாமரை - இன்று
மஞ்சள் தாவனியில்
மலர்திருந்தது
புடவை கட்டிய பூவாய்!
கல்லூரியை வலம்வரும் தேராய்!
கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது


காலை நேர ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிகள் போல - அவள்
முகத்தில் முத்துமுத்தாய்
வியர்வை துளிகள்!


அவளின் கருப்பு கூந்தலில்
கட்டணமின்றி குடியேறியிருந்தன
மல்லிகைகள்!


பூவால் இவளுக்கு அழகா?
இவளால் பூவுக்கு அழகா?
பட்டிமன்றமே வைக்கலாம்!


மீன் விழிகள் மின்சாரமாய்
தாக்க
அருகில்வந்தவள்
“ஹாய்” என்றாள்


உள்ளத்து காதலை
உதட்டால் சொல்ல
முயன்றேன்..............
ப்பூபூ............ம்ம்ம்ம்ம்


பல்லவன் வந்து
பாதியில் குறுக்கிட்டான்
இருவரும் ஏறினோம்
“பல்லாக்கில் சுமக்க
நானிருக்க - உனக்கு
பல்லவன் எதுக்கடி?” -இத்தோடு
என்கவிதை புத்தகத்தின்
இறுதி பக்கமும் நிரம்பியது


கல்லூரி தேர்வுமுடிந்து
ஒவ்வொருவராய்
வெளியேவர - நானும்
வந்தேன் - அவளும்
வந்தாள்..


மீண்டும் “ஹாய் - ஹாய்”
எல்லோரிடமும் வாங்கிவிட்டேன்
நீங்க..............என்றவாறு
இருவரின் காலப்பதிவேடும்
கைமாறியது


பார்வை சிறையில்
பதுங்கிக் கிடந்தயேன்
காதலை - இந்த
காலப்பதிவேட்டில் கச்சிதமாய் செதுக்கினேன்


மீண்டும் காலப்பதிவேடுகள் கைமாறின..
இறுதியில் தனிமையில்
அதை திறந்து
பாவை பதிந்துவைத்த
பக்கத்தை தேடினேன்


பத்துநாள்
பசித்திருந்தவன்
கையில் கிடைத்த
உணவு பொட்டலம்போல் பிரித்தேன் !


மண்ணில் கலந்த
உணவுக்காக மண்ணை
கிளரும் கோழியின்வேகம் எனக்கு................


தேர்வு முடிவில் - தன்
எண்ணை தேடும்
மாணவனின் பயம் எனக்கு................


இறுதி பந்தில்ஆறு ரன் தேவை
முடிவுக்காக காத்திருக்கும் ரசிகனின்
ஆர்வம் எனக்கு................


கிடைத்துவிட்டது............
பாவையின் பதிவு
கிடைத்துவிட்டது............


மூன்று வருட ஏக்கத்தை
மூன்று வார்த்தையாய்
முருக்கி கட்டியிருந்தாள்......


ஆம்!
“ஐலவ்யூயூயூயூயூயூ..........”
பார்த்தேன்..படித்தேன்.... பறந்தேன்......
உலகையே மறந்தேன்..........
உயரே பறந்த பந்து
உள்ளங்கையில் விழுந்தது போல............


மழைகண்டவிவசாயி போல்........
மடை திறந்தவெள்ளம் போல்.........


எத்தனை மகிழ்ச்சி!?
அளவிட கோலும் இல்லை
அனுபவித்த ஆளும் இல்லை


எம்பிக் குதித்தேன்
தலையில் பலத்த அடி
திடுக்கிட்டு விழித்தேன்


“இன்னும் என்ன தூக்கம்?
காலேஜ்க்கு நேரமாச்சுஎழுந்திரு.. .. ..”
சப்தமிட்டு கொண்டிருந்தார்
என்தாய்!


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1071

Saturday, September 06, 2008

அஞ்சாத சிங்கம் விஜய டி ராஜேந்தர்

1.

2.

கொஞ்சம் பழசு தான் ஆனாலும் ரவுசா இருக்கும்

குறிப்பு : தலைப்பில் "அ" என்ற எழுத்து தட்டச்சு பிழைகாரணமாக இல்லாமல் இருக்கும் எனவே படிப்பவர்கள் தங்களின் விருப்பத்திர்க்கேற்ப்ப "அ" - வை தலைப்பில் பொருத்திக்கொள்ளவும்

Friday, August 29, 2008

என் காதலியே என் காதலியே

மனிதன் சுவாசிக்க
காற்று - அந்த
காற்று சுவாசிக்க
உன் தாவணி வாசம்

.............................................
கோவிலுக்கு சென்றால்
அம்மன் சிலையருகே
நில்லாதே........
எல்லோரும் உன்னை
கும்பிட்டு செல்கின்றனர்!!

........................................................
மொட்டை மாடியில்
காயவைத்த உன் துணிகளை
முறைத்து பார்க்கிறான்
சூரியன் - அவைகள்
அதிஸ்டம் செய்தவையேன்று!!
...................................................................

Sunday, August 24, 2008

மாமாவுக்கு கல்யாணம்.. திருமண வாழ்த்து..

************************************************************************************

என் அத்தை மகன்,என்னைவிட நான்கு வயது மூத்தவர்,நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருந்த சமயம் அவருக்கு திருமணம் நிச்சயைக்க பட்டது
அந்த செய்தி கிடைத்ததும் நான் அவருக்கு எழுதிய கடிதம்

குறிப்பு:
அவரின் தொழில் வீடுகளுக்கு வர்ணம் பூசுவது(பெயிண்டர்),பட்டி,தின்னர் ஆகியவை வர்ணம்பூசுவபர்கள் பயன்படுத்துவது
மணப்பெண்னின் பெயர் சத்யா
*
மாமா உனக்கு இப்போ
மாங்கனி கசக்குமே?
மாப்பி(ள்)ள எம்பேச்சு
மட்டும் இனிக்குமா???
சத்தியமா சொல்லு
சத்யா பேச்சுபோல
வருமா??   ( இல்லவே இல்லை )அவுங்க அழைப்பு
இல்லாட்டி -
செல்போனும் செங்கல்லாகுமே!

கண்ணை மூடினாலும்
மூடாட்டியும் -
கனவுவந்து கபடியாடுமே!!

உன்வீட்டு கண்ணாடியும்
உன்னை -
அழகாய் காட்டுமே!!! (வேறு வழி)சாப்பிட தோனுமா? -
என்அத்தை அவ(ள்)
சமைத்தால் இனி ருசிக்குமா??
(சீசீ...... உவேவே....)ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவாது -
cell-ல் ஊட்டிவிட்டால்
வயிறு நிறையாது........

5 AM GOOD MORNING
முதல்
10 PM GOOD NIGHT
வரை
எஸ்.எம்.எஸ் அனுப்பியே
எகிறுது பில்லு
அப்பப்போ
அரைமணி நேர
அரட்டை லொல்லு........
(பில்லு யாரு கட்டுவா??)

என்னேன்ன செய்கிறாயோ??

கதவுக்கு வச்ச பெயிண்(ட்)ட
வீட்டுக்காரன்
முதுகுக்கு அடித்தாயோ?
இதை
வெளியே சொல்ல
வெட்கப் பட்டு
மனசுக்குள்ளேயே மறைத்தாயோ???
(யாருக்கு தெரியும்?)

இந்த
கூத்தையேல்லாம்
கூடயிருந்து பார்க்க
குடுத்து வைக்கல............

பா(ர்)த்து மாமா பா(ர்)த்து
சுண்ணாம்பு தண்ணிய
சூப்புன்னு குடிச்சுடாதே............

பெயிண்ட் - யை
fair&lovely - ன்னு
நினச்சுடாதே............
பட்டியை எடுத்து
பல் விளக்கிடாதே.............

Thinner ஒன்றும்
தேனீர் அல்ல............
எமரிசீட் ஒன்றும்
கர்சீப் அல்ல............

பொத்தனூருக்கும்
திருப்பூருக்கும்
50 km இருக்குமா?
இப்ப கேட்டால்
5 inch என்பாய்!!!! (எல்லாம் நேரக் கொடுமை)ஆணியில் தொங்கும்
காலாண்டராய் மனசு
அங்கிட்டும் இங்கிட்டுமா
ஆஆஆஆஆ..............டும்
எவனாச்சும் வந்து
ஏட்ட கிழிங்கடா - ன்னு
எகிறி எகிறி குதிக்கும்

நாள் ஆக.. ஆக..
பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு போகும்
பையன் போல
மனசு துடிக்கும்............

கல்யாண நாளில்
கேள்விதாளை பார்த்தவன்
போல இருப்பாய்..........(பார்க்க சூப்பர இருக்கும்)எப்படியோ
எழுதி முடிச்சாலும்...............
பத்தாவது பரிச்சைக்கு
ரிசல்ட்டு உண்டு
உன் பரிச்சைக்கு
ம்ம்கும்..................


(வடிவேலு ஸ்டைலில்
“மாட்டிகிட்டாய்யா......
மாட்டிக்கிட்டாய்யா..........”)
Friday, August 22, 2008

பெரியார் பேசுகிறார்..

பெரியார் பேச்சை கேளுங்கள்

************************************************

Saturday, August 16, 2008

சினிமா மெட்டுக்கு என் பாட்டு..- 1


முதலில் "காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக
குறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)
பல்லவி:
கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்டபின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......
என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............
நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகமாகுமே..........
(கனவா...?)

சரணம் 1:
மேகங்கள் ஒன்று கூடியே
மழை பூவைதூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களை போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட


மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்
மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
(கனவா......)
சரணம் 2:


உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......


வசந்தத்தின் பூப்போல வழியெங்கும்
உன்வாசம் - நீ
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்
ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)

***ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கிறீர்களா??? சும்மாதாங்க வேலை (ஓவர் டைம்) அதிகம் இல்ல,அதுதான் காரணம்****...
பிரியமுடன் பிரபு...
...

Monday, August 11, 2008

காதல்....காதல்........ காதல்..........................


உன் கால்கொலுசின்
ஒலிகேட்டேதலையாட்டும் - உன்
வீட்டுக்காளையைப் போல்
மாற்றிவிட்டாய் என்னை
கழனிக்காகக் காத்திருக்கும்
காளையை கவனிக்கும் நீ...........
காதலுக்காகக் காத்திருக்கும்
என்னை கவனிப்பாயா???
.................................................
மடியிலிருந்து பாலைத் திருடும்
பால்காரனிடம் பணிந்து நிற்க்கும்
பசுவைப் போல
ன்னிடமிருந்து இதயத்தைதிருடும்
உன்னிடம் நிற்க்கிறேன் நான் !!

................................................

உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
என் இதயம்அடிக்கடி படித்தும் பார்த்தும்
அலுப்புதட்டாதகவிதை தொகுப்பைப் போல!!


Sunday, August 10, 2008

திருப்பிக்கொடு..


திருப்பிக்கொடு திருப்பிக்கொடு
என்னை திருப்பிக்கொடு
திருத்திக்கொடு திருத்திக்கொடு
என்னை திருத்திக்கொடு

மல்லியோடு சேர்த்து வைத்தயென்
மனதை திருப்பிக்கொடு
மஞ்சளாக்கி பூசிக்கொண்டயென்
மகிழ்ச்சியை திருப்பிக்கொடு

கண்களாளே கடத்திச்சென்றயென்
கண்களை திருப்பிக்கொடு
கைக்குட்டையில் ஒழித்துவைத்தயென்
கனவை திருப்பிக்கொடு

இதழ் சிரிப்பில் சிறையேடுத்தயென்
இதயம் திருப்பிக்கொடு
இருவிழியில் இருக்கிவைத்தயென்
இன்பத்தை திருப்பிக்கொடு

சின்னச்சிணுங்களில் சிக்கிக்கொண்டயென்
சிந்தனையை திருப்பிக்கொடு
சித்திரப் பேரழகில் சிதரிப்போனயென்
செந்தமிழை திருப்பிக்கொடு

மூக்குத்தியில் மூழ்கிவிட்டயென்
மூச்சை திருப்பிக்கொடு
முந்தானையில் முடிந்துவைத்தயென்
முகவரியை திருப்பிக்கொடு

கம்மலாக்கி தொங்கிவிட்டயென்
கற்பனையை திருப்பிக்கொடு
கால்கொலுசில் கட்டிவைத்தயென்
கவிதையை திருப்பிக்கொடு

வளையலோடு வளைத்துபோட்டயென்
வயதை திருப்பிக்கொடு
விரல்நடுவில் வீழ்ந்துவிட்டயென்
விடியலை திருப்பிக்கொடு

திருப்பிக்கொடு திருப்பிக்கொடு
என்னை திருப்பிக்கொடு
திருத்திக்கொடு திருத்திக்கொடு

ன்னை திருத்திக்கோடு


விகடன் விமர்சனம் - குசேலன்

(நன்றி - ஆனந்த விகடன்)

பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேல - கிருஷ்ணனின் கதை!

சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!மலையாளத்தில் வந்த 'கத பறயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். சூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து, ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே-தான். 'தலைவா... நயன்தாராவையே பார்க்காத... எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சிங். பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து, கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத் திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங். படம் முழுக்க 'குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், 'அண்ணாமலை பார்ட் 2', கொஞ்ச நேரம் கழித்து, 'சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார், ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார், தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட் டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர் களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், 'வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்!'அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு!' என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் 'பன்ச்'கள் பற்றி விளக்கம் சொல்லி, ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க... படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால், ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும், பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்துகொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக 'வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும், க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது.ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில், கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு.பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.'ஓம் சாரிரே...', 'செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும் அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம்,கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!

மதிப்பெண்

39/100

Saturday, August 09, 2008

ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)

(நன்றி-குமுதம் 13/08/08)

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-08-13/pg12.php?type=Kumudam

அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.
அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.
முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.
அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.
உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?
`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.
பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?'
இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.
ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.
இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.
உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !
குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.
(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.
இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.
எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.
அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.
சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.
அதில் ஆச்சரியம் இல்லை.
மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை....
மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.
போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும். அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.
உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.
அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.
சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..


அன்புடன்ஞாநி

இந்த வாரப் பூச்செண்டு
ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.

இந்த வாரக் குட்டு
ரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.

இந்த வாரத் அதிர்ச்சி
தி.மு.க, கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் எதுவும் இல்லாதது
.

Thursday, August 07, 2008

குசேலன் என்றொரு குழப்பவாதிமுதலில் ஒரு ஜோக்

சென்றமுறை மத்தியில் தேர்தல் நடந்த போது பாஜக-வுக்கு தான் என் ஓட்டு என்று ரஜினி வாய்ஸ் கொடுத்தார்(ராமதாசுடன் நடந்த சண்டை காரணமாக)
எல்லா தொகுதியிலும் அபாரமாக பாஜக தோல்வியடைந்தது.அந்த சமயத்தில் நான் படித்தது...


இடம் : ரஜினியின் வீடு

வேகமாக ஓடி வருகிறார் உதவியாளர்
ரஜினி : எம்பா இவ்வளவு வேகம்?
உதவியாளர் : அந்த் ___ கட்சியின் முக்கிய தலைவர்கள் உங்களை பார்க்க வந்திருக்காங்க..
ர : ம்ம்ம்ம்ம்ம்ம் வந்துட்டாங்களா???? இவங்களுக்கு பயந்துதான் இமயமலைக்கு போனேன்,இப்பத்தான் வந்தேன்,வந்தது தெரிஞ்சது வண்டிகட்டிக்கிட்டு வந்துட்டாங்களே?????!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம் வரச்சொல்லு

வந்தவர்கள் வணக்கம் சொன்னவுடன்
ர : வணக்கம்,கவலை படவேண்டம் நாளைக்கே பத்திரிக்கைகாரர்கள் கூப்பிட்டு உங்களுக்குத்தான் என் ஆதரவுனு சொல்லிடுறேன் - என்று ரஜினி முடிக்கும் முன்பே வந்தவர்கள் அனைவரும் ரஜினியின் காலில் விழ,அதிர்ந்துபோன ரஜினி "ஏன்" என்று கேட்க
வந்தவர்கள் "ஐயா , தயவுசெய்து அப்படி செய்துடாதிங்க,எதிர் கட்சிக்குதான் உங்க ஆதரவு என்று மட்டும் பேட்டி கொடுங்க நாங்க தன்னால ஜெய்ச்சுடுவோம் என்று கூறினார்களாம்...................
...........................

இப்ப விசயத்துக்கு வருவோம்
எங்க தெளிவா பேசினா ரசிகர்களுக்கு புரிந்துதொலந்து கேள்விகேட்டுவிடுவார்களோ என்று குழப்பி பேசுவதே ரஜினி ஸ்டைல்
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்கலாம்.

இப்ப வந்துள்ள குசேலன் காமெடியை பார்ப்போம்
படத்தில் ஒரு காட்சியில்
“அது என்னங்க அது? அரசியலுக்கு வருவேன்றீங்க? ஆனா இப்ப இல்லை.. எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்ங்குறீங்க? மீறி கேட்டா மேல கை காட்டுறிங்க (சமிபத்தில் விஜய் டீவி நிகழ்ச்சி ஒன்றில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு விஜய்யும் இதையெத்தான் செய்தார்-கெளம்பிடார்யா அடுத்த சூப்பர் ஸாரு)
என்னங்க இது?” என்ற கேள்விக்கு ரஜினியளிக்கும் பதில்
" அது இயக்குனர்கள் எழுதிய வசனத்தை நான் பேசினேன் நீங்க தப்பா எடுத்துகிட்டா நான பொறுப்பு" என்று கூறுகிறார்..
ஆக இதுவரை திரையில் அவர் பேசியதெல்லாம் எவரோ ஒருவர் எழுதியது. அந்த வசனங்களி வைத்து இத்தனை வருடங்கள் கும்மியடித்த ரசிக(பக்த)மணிகள் மற்றும் பத்திரிகைகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. எல்லாம் அவர்களின் முட்டாள் தனம் என்று ரஜினி கூறிவிட்டார்

"அதுதான் தெளிவா சொல்லிட்டாரே அப்புறம் என்ன?"-என்றுதானே கேட்குறிங்க???? அங்கதானே குழப்பம் ,அதாவது அடுத்த படத்தில் "குசேலனில் நான் பேசியது வாசு எழுதியது அதை நீங்க நாம்பினா நான பொறுப்பு? "-என்று கூறுவாறோ என்பதுதான்.


ரஜினியின் பேச்சு
இல்லயென்றால் இங்கே செல்லவும்/////////////ஒரு நல்ல கதைகருவை மலையாளத்தில் சிற்பமாக்கி.. கோயிலில் வைத்தனர்..அதை தமிழில் எடுத்து.. தெருவில் வைத்து.. மசாலா தடவிரசிகர் மன்றம் அமைத்து விழா எடுத்து விட்டு திரும்ப கோயிலுக்குள் வைத்து விட்டனர்..
சொந்தமான கதை எடுத்து அதில் சில குறைகள் என்றால் மன்னிக்கலாம் எடுப்பது ரீமேக் அதில் ஒரிஜினலில் உள்ள குறைகளை களைய தான் வேண்டும்..ஆனால் அதை இவருக்காக இப்படி தான் எடுக்கனும் என்றால்.. அப்படி ஒரு கதையை உருவாக்கி அதை செய்திருக்கலாம்... மேலும் நிறைய குறைகளை சேர்க்க கூடாது..காப்பி அடித்தாலும் ஒழுங்காக காப்பி அடிக்கனும்/////////////////////
மற்றொரு தளத்தில் குசாலன் பற்றி ஒரு நன்பரின் கருத்து
Wednesday, August 06, 2008

ஆற்றங்கரையோர ஆலமரமே...
உன் காதலை வணங்குகிறேன்
கரைகடந்து போன
காதலிக்காக நீ
காத்து நிற்க்கிறாயோ?
கரையொதுங்கும் படகிலேனும்
காதலி வருவாளென
பூத்து நிற்கிறாயோ?
உரசிபோன தென்றலை
உதவிக்கு கூப்பிட்டு
தேவதையின் தாவணிவாசம்
காற்றில் கலந்துவந்தால்
கண்டுபிடித்து கூறச்சொல்..........

கிளையில் கூடுகட்டிய
கிளியிடம் கேள்
உன் காதலியின் குரலை
கேட்டால் கூறச்சொல்.........
உன் வழிசென்ற
வயோகிதரிடம் கேள்
வண்ணப்பறவையை
வழியிலேனும் கண்டீரா?-என்று
உன் வேரினை நனைத்த
காவேரியிடம் கேள்
ந்த தாமரையேதும்
தண்ணீராட வந்ததா?-என்று
உன் விழுதுகளை
தூதுவிட்டு -அந்த
மண்ணிடம் விசாரி
பாவையின் பாதம்
பட்டயிடம் எதுவென்று........
வானத்தை கேள்
வையத்து நிலவது
சென்றவழியெதுவென்று.....
ஆற்றங்கரையோர ஆலமரமே
உன் காதலை வணங்குகிறேன்

Monday, August 04, 2008

காதல் கதை

அதிகாலை 3 மணி ஊரே தூங்கிக்கொண்டிருக்கிறது.தன் அறை கதவை மெல்ல திறந்து வெளியே வந்தாள் ரேவதி,பக்கத்து அறையில் தன் பெற்றோர் நன்கு தூங்குவதை உறுதிசெய்தபின், தான் ஏற்க்கனவே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

மெல்லிய நிலா ஒளி வீசுகிறது, மயாணத்தை கடக்கும் வழிபோக்கனை போல் பயந்தபடியே நடந்து தெருமுனையை அடைந்தாள். அங்கு அவளுக்காக காத்திருந்தான் ரமேஷ். இருவரும் காரில் ஏற கார் வேகமாக புறப்பட்டது

5 மணி, தூங்கிக்கொண்டிருந்த பார்வதி பால்காரன் சப்தம்கேட்டு எழுந்தார். பாலை வாங்கி அடுக்களையில் வைத்துவிட்டு தன் காலை பணிகளை துவக்கினார்

6 மணி , தங்களின் திட்டப்படி இருவரும் கோவிலை
வந்தடைந்தனர்.அங்கு அவர்களின் வருகைக்காக காத்திருந்த நன்பர்கள் குழு அவர்களை வரவேற்றது.

“ஏண்ட மாப்ளே லேட்டு”
“ரேவதி வர்ரத்துக்கு லேட்டாயிடுச்சு”
“சரிசரி அங்கபோய் குளிச்சிட்டு அதுல இருக்கிற புதுத்துணிய போட்டுக்கிட்டு சீக்கிரமா ரெடியாகுங்க , ம்ம் சீக்கிரம்.”

பாலை காய்ச்சி வைத்துவிட்டு தன் மகளை எழுப்புவதற்க்காக
அவள் அறைக்கு செல்கிறார். மகள் அங்கு இல்லாதது கண்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தார், வீடு முழுதும் தேடியும் தன் மகள் இல்லாததால் பதற்றமாகி தன் கனவர் கேசவனை எழுப்புகிறார்.
“என்னங்க ரேவதிய காணலங்க”
“நல்லா தேடிப்பரு தோட்டத்து பக்கம் உட்காந்து படிச்சுகிட்டிருப்பா”
“எல்லா பக்கமும் தேடிட்டேங்க , எங்கேயும் காண்ல”
“என்ன சொல்ற நல்லா பாத்தியா?”- என்று கேட்டுக்கொண்டே எழுந்து தன் மகளின் அறைக்கு வருகிரார்.அங்கே அவள் இல்லை
கட்டிலின் மேல் ஒரு கடிதம் இருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிபோகும் எல்லோரும் எழுதிவைக்கும் அதே கடிதம். பிரபு..
“ என் மகளா இப்படிபண்ணீட்டா?” - என்று தன் நெஞ்சில் கைவைத்துதபடி தரையில் சாய்ந்தார்.

இருவரும் உடை மாற்றிக்கொண்டு வந்தார்கள். “ மாப்ள இப்பத்தாண்ட நீ நிஜமாவே மாப்ள” - என்று ஒரு நன்பன் கிண்டல் செய்ய அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.

கேசவன் கீழே விழுந்ததும் பார்வதியிட்ட சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கேசவனின் நிலையையும் கையில் இருக்கும் கடிதத்தையும் பார்த்ததும் அவர்கள் விவரம் புரிந்துகொண்டார்கள். “எல்லாரும் இப்படி பாத்துக்கிட்டெ இருந்தா எப்படி, யாராச்சும் டாக்டருக்கு போன் பண்னுங்க” என்றதும் ஒருவர் போன் செய்ய சென்றார்.

“ ம்ம்ம்ம் ஸ்கூல்ல வாத்தியார இருந்தவரு,வயசு பொண்ணுக்கு படிப்பென்னத்துக்குனு சொந்தகாரவுக சொன்னதயேல்லா கேக்காம “யேம் புள்ளய பெரியபடிப்பு படிக்க வைப்பேன்னு” சொல்லி காலேசு அனுப்பிவச்சாரு ,அது என்னடான அப்படி பண்ணிபுடுச்சு.ம்ம்ம்ம் எல்லா தலையேழுத்து” - என்று கூட்டத்திலிருந்த ஒருவரின் பேச்சு அரைமயக்கத்திலிருந்த கேசவனின் காதில் விழ, அவர் கண்களில் இருந்து இறுதியாய் கண்ணீர் கசிந்தது.

“மாப்ள உறவுக்காறங்க இல்லேனு வருத்தப்படத எல்லாத்துக்கும் சேத்து நாங்க இருக்கொ(ம்), மேளதாளம்,ஐயர் எல்லாம் ரெடி நீ தாலி கட்டவேண்டியதுதான் பாக்கி “ என்றான் ஒருவன்.ஐயர் மந்திரங்கள் ஓத துவங்கினார்

டாக்டரின் வாகனம் வந்து வாசலில் நின்றது.உள்ளே வந்த டாக்டர் கேசவனை பரிசோதித்தார்.சிறிது மௌனத்திற்க்கு பிறகு
“சாரி சார் உயிர் போயி ரொம்பநேரமாயிடிச்சு..” என்றார்.

மேளதாளங்கள் முழங்க ரேவதியின் கலுத்தில் தாலிகட்டினான் ரமேஷ்.தங்கள் கனவு நினைவான மகிழ்ச்சியில் ரமேஷ்,ரேவதியின் முகத்தில் கோடி புன்னகைகள்
மார்பிலும் வயிற்றிலும் அடித்துஅழுதுகொண்டிருக்கிறாள் பார்வதி..


 

Sunday, August 03, 2008

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்


காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=944

கடைசி படைப்பு


ஒரு பெண்ணிலிருந்து பிறந்தவளா நீ?
இல்லை இல்லவேயில்லை
நி விண்ணிலிருந்து பிறந்தவள்!
பிரம்மன் தனக்கே தனக்காய் ஓரழகை
படைக்கயேண்ணி உன்னை படைத்தான்
அவன் கண்ணயர்ந்த நேரம் கைநழுவி
மண்ணுலகம் வந்த தேவதை நி!!!

பாலாடையை தோலாக்கி-அதில்
இளவம் பஞ்சையிட்டு நிரப்பி

பனியில் நனைந்த ரோஜாவை இதழாக்கி
பளிங்கு நிறத்தில் பற்களை அடுக்கி

கருவண்டுகள் இரண்டை கச்சிதமாய் பொருத்தி
கருப்பு மேகங்களை இடைவரை கசியவிட்டு

கணக்கு பார்த்து செய்த கலைநய படைப்பு நி!
அந்த பிரம்மனின் கடைசி படைப்பு நி!!!!

மரணம்
அறியாமலேயே குழந்தை பருவம்
தொலைத்தோம்..
அவசரத்தில்இளமை பருவம்
தொலைத்தோம்..
மூச்சுக்கே போராடி முதுமை பருவம்
தொலைத்தோம்..

இனியாவது
வாழஎண்ணினேன் - எதிரே
ஒரு மன்னன்
படையோடு வந்தான்
தன்பெயர் எமன்
என்று சொன்னான்

“வா என்னோடு”
என்று என்னை
வம்புக்கிழுத்தான்
போய்விடுவேனா நான்?
முடியாதென்று
போருக்கிழுத்தேன்

கடும் போர்
தெண்னைக்கும் புயலுக்கும் போர்
வெள்ளாட்டுக்கும் வேங்கைக்கும் போர்

அவன் சுழற்றியவாள்
கத்திக்கொண்டே என்
கழுத்தருகே வருகிறது
அருகில் வந்துவிட்டது
இன்னும் அருகில்
அ.....அ......ஆ.........ஆ....
மரணம்...............

Saturday, August 02, 2008

ஆனாலும் காதலிக்கிறோம்!பனி சொட்டும் நேரம்

காலை ரோஜாவில்

ஒட்டி கொண்டிருக்கும்

பனிதுளி போல

முத்து வியர்வையுன்

முகத்தில் பூக்க

முதன் முதலாய்

பார்த்த அந்தநொடியில்

பற்றி கொண்டு

வரவில்லையடி- ஆனாலும்

காதலிக்கின்றோம்..........


கைகுட்டையளவு காகிதத்தில்

கண்டதை கிறுக்கியுன்

கை பைக்குள்

செருகியதில்லையடி- ஆனாலும்

காதலிக்கின்றோம்..............வெட்ட வெளியில் வின்பார்த்து கிடந்து

“என்னவளை விடவா நீ அழகு” – என்று

வான்மதியை

வம்புக்கிழுத்ததில்லையடி - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கண்மூடி கனவில்

“அப்படிபோடு” என்று

ஆடி பாடியதில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............தினசரி பேருந்துநிருத்தம்

வெள்ளி- அம்மன்கோவில்

ஞாயிறு- கம்யூட்டர் செண்டர்

நீ போக - நான்

நிழலாய் தொடர்ந்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கரையை கொஞ்சும்

அலையின் அழகில்

கடலை ரசித்து

கடலையை

ருசித்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கார் மேகங்கள்

ஒன்று கூடி

மழை பூவை தூவ

ஜோடியாய் நனைந்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............தியேட்டர் இருட்டின்

சில்மிசம் இல்லை

ஒரே பாட்டில்

இரு ஸ்ட்ரா இல்லை

பிளாசா கார்னர்

பீசாதுண்டும் இல்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............பத்து நிமிட

பாப்கார்ன் காதலல்ல

ஐந்து நிமிட

ஐஸ்கிரிம் காதலுமல்ல


நீ அங்கே

நான் இங்கே - ஆனாலும்

காதலிக்கின்றோம்

.....
இந்த கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளிவந்துள்ளது
பார்க்க இங்கே செல்லவும்...
பிரியமுடன் பிரபு . . .
...You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...