Friday, February 05, 2010

விமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை? சுற்றுலா?நேற்று (4ம் தேதி) இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டைகர் விமானம் மூலம் என் தம்பி சிங்கை வருவதற்காக விமானசீட்டு , விசா எல்லாம் எடுத்து தயாரக இருந்தோம் , சரியாக 3 மணிநேரத்துக்கு முன்பு (7 மணிக்கு) என் தம்பி விமானநிலையம் சென்றார்


சென்னை விமான நிலையத்தில்
செக்கின் செய்யும் வரை எல்லாம் சரியாக நடந்தது . அடுத்து இமிகிரேசன் சென்றார் . அங்கிருந்த அதிகாரி என் தம்பியின் கடவுசீட்டு,விசா,விமானசீட்டு எல்லாம் சோதித்துவிட்டு நீ எதற்காக சிங்கப்பூர் செல்கிறாய் என கேட்க ,சுற்றுலா செல்வதாக என தம்பி சொன்னார் . ஆனால் அந்த அதிகாரி “நீ வேலைக்கு செல்கிறாய்’ என்று கூறியுள்ளார் .என் தம்பி தன்னிடம் உள்ள சுற்றுலாவுக்கான விசா , மற்றும் என்னுடையா சிங்கப்பூர் நிரந்தரவாசி அடையாள அட்டையின் நகல் மற்றும் திரும்பி வருவதற்கான் விமான சீட்டு எல்லாம் கட்டி “நான் சுற்றுலாவுக்குதான் செல்கிறேன்” என்று கூறியுள்ளார். அதை அந்த அதிகாரி ஏற்க்கவில்லை . என் தம்பியின் கடவுசீட்டில் மலேசியாவுக்கான விசாவும் பதிந்து இருந்தது . அதைகாட்டி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்வதாகவும் அந்த அதிகாரி கூற என் தம்பி குழம்பிபோனார் .
5 ம் வகுப்பு மட்டுமே படித்த என் தம்பிக்கு இது போன்ற விசயங்கள் புரியவில்லை எனவே என்னிடம் கைபேசியில் பேசினார் . நான் அதிகாரியிடம் பேச விரும்பினேன்.அவரோ பேச மறுத்துவிட்டார் . விமான நிலையத்துக்குள் செல்ல 60 ரூபாய் கட்டணம் செலுத்தி என் மாமா உள்ளே சென்றிருந்தார் . அவரும் என் தம்பியின் சார்பாக பேச முயற்சித்தார் அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.அவரின் பெயர் என்ன என்று கேட்க சொன்னேன் அதற்க்கு அந்த அதிகாரி “ என்ன கேசு போட போகிறாயா , உன்னால் முடிந்த்தை செய் , இனிமே இங்க வந்தா உள்ள உட்கார வைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்
என்னதான் செய்யவேண்டும் என நான் என் தம்பியிடம் கேட்டபோது அவன் சுற்றுலாதான் செல்கிறான் என்பதற்காக ஒரு கடிதம் வாங்கி வா என்று அவர்கள் சொன்னதாக சொன்னான்
என்ன கடிதம் என கேட்டேன் அதை என் தம்பிக்கு சொல்ல தெரியவில்லை, அது எதோ ஆங்கில வார்த்தை அதனால் எனக்கு புரியவில்லை என்று என் தம்பி சொன்னான் . அதனால் தான் அந்த அதிகாரியிடம் நானோ , என் மாமாவோ பேச விரும்பினோம் ஆனால் அவர் அனுமதிக்க வில்லை
கடைசியாக பயணம் மறுக்க பட்டு திருப்பி அனுப்ப பட்டார்
பயணச்சிட்டுக்கு கட்டிய பணம் வீண்
எனக்கு சில சந்தேகங்கள்
சரியான முறையில் சிங்கையில் இருந்து விசா , விமானசீட்டு எல்லாம் வாங்கி , முறைப்படி பயணம் செய்ய சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்தும் எங்கள் பயணம் ஏன் தடைப்பட்டது??????
சிங்ப்ப்பூரில் சுற்றி பார்த்துவிட்டு வரும் 14,15,16 தேதிகளில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து அதற்கான விசாவை எடுத்து இருந்தது குற்றமா??
சிங்கப்பூர் வரும் நபர் சுற்றுலாவுக்குதான் வருகிறார் என்பதை அவர் நிருபிக்க என்ன செய்யனும்??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை பற்றிய யார் கவலைபட வேண்டும்?? , சிங்கப்பூர் அரசா இல்லை இந்திய அரசா??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை சிங்கப்பூர் எப்படி ஏற்றுகொள்ளும் , சிங்கப்பூர் அதிகாரிகள் என்ன முட்டாள்களா?? இந்திய அதிகாரிகள் அறிவாளிகளா??
நேற்று இரவு 11 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை தொலைபேசியில் பேசிகொண்டே இருந்தேன் எந்த பயனும் இல்ல
15 ஆயிரம் ரூபாய் செலவில் பயணசீட்டு எடுத்து பயணம் ரத்து செய்யபட்டதால் எனக்கு பணம் இழப்பு ,பொருளாதார பிரச்சனையால் அதிகம் வேலை இல்லை, ஒவ்வொரு வெள்ளியையும் பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் எனக்கு இது பெரிய இழப்பு.
நான் இதற்க்கு என்ன செய்யலாம் ? சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா?
இரு குடிநுழைவு (இமிகிரேசன்)அதிகாரி கூடாது என்று சொல்லிவிட்டால் பயணம் செய்ய முடியாதா?
அவ்வளவு அதிகாரம் உண்டா அவர்களுக்கு?
எனக்கு குடிநுழைவு சட்டம் பற்றி அதிகம் தெரியாது , அதைபற்றி தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை எனக்கு பின்னூட்டம் இடுங்கள்
அதீதகோபத்தில் உள்ளதால் அதிகம் எழுத விரும்பவில்லை
மீண்டும் சந்திப்போம்
பிரியமுடன் பிரபு ........

60 comments:

 1. திரு பிரபுவுக்கு, நிகழ்ச்சியை அறிந்து மிக வேதனையாக இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் எங்களுக்கும் இது போல ஒரு தடவை நடந்தது. யாரைக் கேட்பது என்று தெரியாமல் நடு ராத்திரி திரும்பி வந்தோம் வீட்டுக்கு. மகனுக்குப் போன் செய்து இது போல
  நடந்தது என்று சொன்னால் அவனால் நம்ப முடியவில்லை.
  எங்களுக்கு அவர்கள் சொன்ன காரணம், நான் பட்டதாரியாக இல்லாத்தால் ,
  நான் வேறு (டியூஷன்)வேலைகளுக்குத் துபாயில் முயற்சி செய்யலாம் என்றும்,
  அதற்கு இம்மிக்ரேஷன் அலுவலகத்துக்குப் போய் ஒரு சர்டிஃபிகேட் வாங்கி வரணும் என்றும் சொன்னார்கள்.
  கொஞ்ச மாதங்கள் முன் அமெரிக்கா சென்று வந்த போது எந்த விதமான தடையும் சொல்லவில்லையே என்றால்,
  அதற்கு அந்தக் கடுகடு அதிகாரி எங்களை விரட்டாத குறையாக வெளியே போகச் சொன்னார்.
  எத்தனை அலுப்பு இந்த வயதான காலத்தில் நானும் இவரும்
  மகனைப் பார்க்கப் போகும் அந்த ஒரு மாத காலத்தில் இவ்வளவு தவறு நடக்குமா என்று எரிச்சல் தான் மிச்சம்.
  உங்கள் தம்பியைத் தேற்றுங்கள். அசோக் நகரில் இருக்கும் இமிக்ரேஷன் அலுவலகத்தில் போய்ப் பார்க்கச் சொல்லவும்.
  நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 2. சம்மந்த பட்டவர்களை சந்தித்து விளக்கம் கேளுங்கள்...

  ReplyDelete
 3. இது போன்ற அனுபவம் ஏற்ப்பட்டதில்லை. உங்கள் தம்பி புதுசு என்பதால் மிரண்டு இருப்பார்.ஆதலால் சந்தோகம் வந்துருக்கும். ஆனால் ரிடர்ன் டிக்கெட் இருக்கும் பயணிடம் எப்படி இப்படி நடப்பார்கள். எனக்கும் கஸ்டம்ஸ் பத்தி தெரியாது. நன்றி.

  ReplyDelete
 4. இது ரொம்ப அநியாயம்

  ReplyDelete
 5. சரியான தீர்வு கிடைக்க சிங்கபூர் எம்பசிக்கு போகவேண்டும்

  ReplyDelete
 6. தைரியமாக பிரச்சனையை எதிர்கொள்ளவும்..........
  சம்மந்த பட்டவர்களை சந்தித்து விளக்கம் கேளுங்கள்...

  ReplyDelete
 7. கஸ்டம்ஸ் என்பது சுங்கவரித் துறை.
  நீங்கள் குடிமைத் துறையைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்;ஏனெனில் சுங்கத் துறைக்கு நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளிடம் எந்த வேலையும் இல்லை;அவர்கள் ஏதும் தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்துகிறார்கள் என்று சந்தேகம் இல்லாதவரை!

  குடிமைத்துறை ஏன் செல்கிறோம் என்று கேட்கலாம்;ஆனால் முறையான நுழைவு அனுமதி இருக்கும் ஒரு பயணியைத் தடுக்க சட்டரீதீயான உரிமை கிடையாது.

  சட்ட நிவாரணத்திற்கு முயற்சியுங்கள்.சென்னையில் இலவச சட்ட உதவி மையம் இருக்கிறது;அல்லது விஜயன் போன்ற வழக்கறிஞரிடம் இந்த விதயத்தை எடுத்துச் செல்லவும்.

  சுங்கத் துறைக்கு எதிரான முறையீட்டுக்கு:
  http://www.cbec.gov.in/grievances-log.htm

  ReplyDelete
 8. படித்து மிகவும் நொந்து போய்விட்டேன்.

  இமிக்ரேஷனில் இருந்தால் பெரிய ஆள் என்ற நினைப்பு போலிருக்கு.

  ReplyDelete
 9. Emigration check not required stamp வேண்டாம்னு ஒரு முத்திரை இருந்திருக்காது பாஸ்போர்ட்டில்.
  http://www.manpowerindia.net/emigration.html. இது பாருங்க பிரபு. மற்றபடி அந்த ஸ்டேம்ப் இருந்தும் இப்படி நடந்திருந்தால், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் உங்க தம்பிய 10ரூ போஸ்டல் ஆர்டருடன் தகுந்த காரணமும், ரிஃபண்டும் கேட்கச் சொல்லுங்க. யார் அப்படி நடந்தாங்களோ அவங்க சம்பளத்தில் பிடித்தம் செய்து கொடுப்பார்கள்.

  ReplyDelete
 10. ask him to contact thrugh rti . u can get back the money also thru consumer forum

  ReplyDelete
 11. 1500 ரூபாய் செலவாகும். வக்கீலை வைத்து நோட்டீஸ் விடுங்கள் முதலில். எதற்காக அவர் அவ்வாறு செய்தார் என்பதை சொல்லித்தானே ஆக வேண்டும். படிக்காதவன் என்றால் இத்தகைய ஆட்களுக்கு ரொம்பவும் எளக்காரம்தான்

  ReplyDelete
 12. உடனடியாக வக்கீல் மூலமாக கேசும், RTI சட்டத்தின் படி ரூ 10ல் போஸ்டல் ஆர்டர் இணைத்து சுங்கத் துறை அலுவலகத்திற்கு தாக்கீதும் அனுப்புங்கள். மேலும் இது சம்பந்தமாக அங்கீகரிக்கப் பட்ட டிராவல்ஸ் காரர்களைப் பார்த்தாலும் வழி சொல்லுவார்

  ReplyDelete
 13. //Emigration check not required stamp வேண்டாம்னு ஒரு முத்திரை இருந்திருக்காது பாஸ்போர்ட்டில்.
  //
  இது தேவை இல்லை, புதிய பாஸ்போர்ட்டுகளில் இப்படியான ஒன்றே இல்லை, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு இது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 14. நான் மிகவும் வருத்தபடுகிறேன் பிரபு.இதர்க்கு தக்க தண்டனையும் அவர்க்கு ஏர் படுத்தவும்

  ReplyDelete
 15. Immigration clearance certificate is no more required for certain travelers and in your case they can not stop for ECNR stamp.

  Follow the link for more details,

  http://www.immigrationindia.nic.in/

  ReplyDelete
 16. Immigration clearance certificate is no more required for certain travelers and in your case they can not stop for ECNR stamp for going to singapore.

  Follow the link for more details,

  http://www.immigrationindia.nic.in/

  But for travelling to Malaysia your brother needs ECR. That may be the reason for not clearing immigration. Since he has valid malaysian visa in his passport.

  ReplyDelete
 17. இது மிகவும் கொடுமையான் விஷயம். இமிக்ரேஷன்னும் கஸ்டம்ஸும் வேறு. அறிவன் சொல்லியிருப்பதுதான் சரியாக தெரிகிறது. மிகப்பெரிய பொருள் நஷ்டம்.சட்ட நடவடிக்கைக்கு முயற்சிப்பதில் தவறில்லை.

  ReplyDelete
 18. my suggestion..
  if you are using twitter, write the same complaint in english, and tweet it to shashi tharoor, i guess Ministry of External Affairs takes care of immigration and visa.

  why twitter ?, it is shortest way i can think of reaching minister (attempt only) there are a huge number of tamil twitters available, for our part we all can re-tweet it to tharoor, so he gets to look into it.

  ReplyDelete
 19. tourist visa ku ecr not recurred.ecnr is employment only
  Ganesan chennai

  வானம்பாடிகள் said...

  Emigration check not required stamp வேண்டாம்னு ஒரு முத்திரை இருந்திருக்காது பாஸ்போர்ட்டில்.
  http://www.manpowerindia.net/emigration.html. இது பாருங்க பிரபு. மற்றபடி அந்த ஸ்டேம்ப் இருந்தும் இப்படி நடந்திருந்தால், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் உங்க தம்பிய 10ரூ போஸ்டல் ஆர்டருடன் தகுந்த காரணமும், ரிஃபண்டும் கேட்கச் சொல்லுங்க. யார் அப்படி நடந்தாங்களோ அவங்க சம்பளத்தில் பிடித்தம் செய்து கொடுப்பார்கள்.

  ReplyDelete
 20. பிரபு வருந்துகிறேன்!! நிறைய பேர் பல கருத்துக்கள் சொல்லியுள்ளனர்!!! எனக்கு இதுபற்றி விசயங்கள் தெரியாது... மனவருத்தம் கொள்ள வேண்டாம். டிக்கெட், விசா கொஞ்ச நாள் வாலிடிடி இருக்குமே!!

  ReplyDelete
 21. emigration check required (ECR)except for bangladesh, pakistan,and all countries in europe
  (excluding commonwealth of independent state (cis),north America ,japan, new zealand,Australia,south korea,south africa and singapore.this is Mr.prabu brother passport stamp.

  Ganesan chennai

  ReplyDelete
 22. என்னையும் ஒரு வாட்டி நிக்க வச்சிட்டானுங்க, அநாவஸ்யமான இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துறானுங்க.

  ----------------

  அப்படியே வேலைக்கு வந்தா இவனுக்கென்னா - இவனை அப்படி கேட்கக சொன்னது யாரு.

  விசா போலியா, பாஸ்போர்ட் போலியா இத மட்டும் தான் பார்க்கனும்

  எனக்கும் கெட்டாப்ல வருது கோபம் ...

  ReplyDelete
 23. உண்மையிலேயே அந்த இமிகிரேஷன் நாயிங்களுக்கு பெரிய பருப்புங்கன்னு நினைப்பு. செருப்பாலேயே அடிக்கனும்.

  ReplyDelete
 24. படித்தேன் நண்பா ! விஷயம் என்னவென்று முழுமையாக தெரிய வில்லை .நல்ல வக்கீலை பார்ப்பது தான் சரி என்று படுகிறது.

  சிங்கபூர் இந்திய தூதரகம் என்ன சொல்லுகிறது என்று விசாரித்து பாருங்கள்.

  ReplyDelete
 25. என்னத்த சொல்றது - எஹையாFebruary 05, 2010 10:45 PM

  திரு, தகவல் அறியும் சட்டத்தில் கீழ் விவரங்கள் பெற முயற்சி செய்யுங்கள், மேலும் விஜயன் போன்றோர் மூலம், அல்லது போக்குவரத்து ராமசாமி மூலம் அல்லது ஜூனியர் விகடன் மூலம் இதை பெரிதாக்கி மன உளைச்சல் ஏற்படுத்திய அந்த அதிகாரிக்கு தக்க தண்டனை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் இது குறித்து பதிவும் இடுங்கள்

  ReplyDelete
 26. என்னத்த சொல்றது - எஹையாFebruary 05, 2010 10:46 PM

  தகவல் அறியும் சட்டத்தில் கீழ் விவரங்கள் பெற முயற்சி செய்யுங்கள், மேலும் விஜயன் போன்றோர் மூலம், அல்லது போக்குவரத்து ராமசாமி மூலம் அல்லது ஜூனியர் விகடன் மூலம் இதை பெரிதாக்கி மன உளைச்சல் ஏற்படுத்திய அந்த அதிகாரிக்கு தக்க தண்டனை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் இது குறித்து பதிவும் இடுங்கள்

  ReplyDelete
 27. கொஞ்ச மாதங்கள் முன் அமெரிக்கா சென்று வந்த போது எந்த விதமான தடையும் சொல்லவில்லையே என்றால்,
  அதற்கு அந்தக் கடுகடு அதிகாரி எங்களை விரட்டாத குறையாக வெளியே போகச் சொன்னார்.
  எத்தனை அலுப்பு இந்த வயதான காலத்தில் நானும் இவரும்
  மகனைப் பார்க்கப் போகும் அந்த ஒரு மாத காலத்தில் இவ்வளவு தவறு நடக்குமா என்று எரிச்சல் தான் மிச்சம்.
  உங்கள் தம்பியைத் தேற்றுங்கள். அசோக் நகரில் இருக்கும் இமிக்ரேஷன் அலுவலகத்தில் போய்ப் பார்க்கச் சொல்லவும்.
  நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
  //////

  உங்காளூக்கே இப்படியா/


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  உங்கள் வேண்டுதலுக்கு நன்றி

  ReplyDelete
 28. அண்ணாமலையான் said...

  சம்மந்த பட்டவர்களை சந்தித்து விளக்கம் கேளுங்கள்...
  ///
  ம்ம் கேட்டுடாலும்..........

  ReplyDelete
 29. ஆனால் ரிடர்ன் டிக்கெட் இருக்கும் பயணிடம் எப்படி இப்படி நடப்பார்கள்
  ////////////
  ம்மம என்ன சொல்ல?!!1

  ReplyDelete
 30. negamam said...

  தைரியமாக பிரச்சனையை எதிர்கொள்ளவும்..........
  சம்மந்த பட்டவர்களை சந்தித்து விளக்கம் கேளுங்கள்...
  ///

  நன்றி பாலா

  ReplyDelete
 31. கஸ்டம்ஸ் என்பது சுங்கவரித் துறை.
  நீங்கள் குடிமைத் துறையைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்;
  ////
  ஆமாங்க

  ReplyDelete
 32. குடிமைத்துறை ஏன் செல்கிறோம் என்று கேட்கலாம்;ஆனால் முறையான நுழைவு அனுமதி இருக்கும் ஒரு பயணியைத் தடுக்க சட்டரீதீயான உரிமை கிடையாது.
  /////

  ஆனால் சிலரோ குடிமைதுரை அதிகாரியின் முடிவே இறுதியானது என்அ சொல்கிறார்கள்

  ReplyDelete
 33. இராகவன் நைஜிரியா said...

  படித்து மிகவும் நொந்து போய்விட்டேன்.

  இமிக்ரேஷனில் இருந்தால் பெரிய ஆள் என்ற நினைப்பு போலிருக்கு.
  /////

  ஆமாங்

  ReplyDelete
 34. தகவலறியும் உரிமைச் சட்டத்தில் உங்க தம்பிய 10ரூ போஸ்டல் ஆர்டருடன் தகுந்த காரணமும், ரிஃபண்டும் கேட்கச் சொல்லுங்க. யார் அப்படி நடந்தாங்களோ அவங்க சம்பளத்தில் பிடித்தம் செய்து கொடுப்பார்கள்.
  ////////

  தகவலுக்கு நன்்றி

  ReplyDelete
 35. LK said...

  ask him to contact thrugh rti . u can get back the money also thru consumer forum
  ////


  சரிங்க

  ReplyDelete
 36. வெளிச்சத்தில் said...

  1500 ரூபாய் செலவாகும். வக்கீலை வைத்து நோட்டீஸ் விடுங்கள் முதலில். எதற்காக அவர் அவ்வாறு செய்தார் என்பதை சொல்லித்தானே ஆக வேண்டும். படிக்காதவன் என்றால் இத்தகைய ஆட்களுக்கு ரொம்பவும் எளக்காரம்தான்

  /////
  நன்றி

  ReplyDelete
 37. kantha said...

  உடனடியாக வக்கீல் மூலமாக கேசும், RTI சட்டத்தின் படி ரூ 10ல் போஸ்டல் ஆர்டர் இணைத்து சுங்கத் துறை அலுவலகத்திற்கு தாக்கீதும் அனுப்புங்கள். மேலும் இது சம்பந்தமாக அங்கீகரிக்கப் பட்ட டிராவல்ஸ் காரர்களைப் பார்த்தாலும் வழி சொல்லுவார்
  /////

  நன்றி

  ReplyDelete
 38. உடனடியாக வக்கீல் மூலமாக கேசும், RTI சட்டத்தின் படி ரூ 10ல் போஸ்டல் ஆர்டர் இணைத்து சுங்கத் துறை அலுவலகத்திற்கு தாக்கீதும் அனுப்புங்கள். மேலும் இது சம்பந்தமாக அங்கீகரிக்கப் பட்ட டிராவல்ஸ் காரர்களைப் பார்த்தாலும் வழி சொல்லுவார்

  5 February 2010 7:08 PM
  Delete
  Blogger குழலி / Kuzhali said...

  //Emigration check not required stamp வேண்டாம்னு ஒரு முத்திரை இருந்திருக்காது பாஸ்போர்ட்டில்.
  //
  இது தேவை இல்லை, புதிய பாஸ்போர்ட்டுகளில் இப்படியான ஒன்றே இல்லை, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு இது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  //////////


  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 39. Boopathy said...

  Immigration clearance certificate is no more required for certain travelers and in your case they can not stop for ECNR stamp.

  Follow the link for more details,

  http://www.immigrationindia.nic.in/
  ///
  நன்றி பூபதி

  அதில் உள்ள ஒரு என்னை தொடர்புகொண்டேன் தொடர்பு பழுதடைந்து உள்ளதாக சொல்கிறது

  ReplyDelete
 40. But for travelling to Malaysia your brother needs ECR. That may be the reason for not clearing immigration. Since he has valid malaysian visa in his passport.


  அவர் செனையில் இருந்து சிங்கபூர் வரத்தான் விமான நிலையம் சென்றார்
  மலேசியா செல்ல அல்ல

  சிங்கையில் இருந்துதான் மலேசியா செல்ல உள்ளோம்
  அதை பற்றி அவர்கள் கவலையேன்???????

  ReplyDelete
 41. மிகப்பெரிய பொருள் நஷ்டம்.சட்ட நடவடிக்கைக்கு முயற்சிப்பதில் தவறில்லை.
  ///

  ஆமாங்க அறிவிலி

  ReplyDelete
 42. Delete
  Blogger சாமுவேல் | Samuel said...

  my suggestion..
  if you are using twitter, write the same complaint in english, and tweet it to shashi tharoor, i guess Ministry of External Affairs takes care of immigration and visa.

  why twitter ?, it is shortest way i can think of reaching minister (attempt only) there are a huge number of tamil twitters available, for our part we all can re-tweet it to tharoor, so he gets to look into it.
  ..........


  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 43. தேவன் மாயம் said...

  பிரபு வருந்துகிறேன்!! நிறைய பேர் பல கருத்துக்கள் சொல்லியுள்ளனர்!!! எனக்கு இதுபற்றி விசயங்கள் தெரியாது... மனவருத்தம் கொள்ள வேண்டாம். டிக்கெட், விசா கொஞ்ச நாள் வாலிடிடி இருக்குமே!!
  ///


  நன்றி தேவா

  ReplyDelete
 44. எனக்கும் கெட்டாப்ல வருது கோபம் ...
  /////

  எனக்கு அளவே இல்லாமல் வந்தது

  ReplyDelete
 45. செந்தழல் ரவி said...

  உண்மையிலேயே அந்த இமிகிரேஷன் நாயிங்களுக்கு பெரிய பருப்புங்கன்னு நினைப்பு. செருப்பாலேயே அடிக்கனும்.

  /////


  ஆமா

  ReplyDelete
 46. என்னத்த சொல்றது - எஹையா said...

  தகவல் அறியும் சட்டத்தில் கீழ் விவரங்கள் பெற முயற்சி செய்யுங்கள், மேலும் விஜயன் போன்றோர் மூலம், அல்லது போக்குவரத்து ராமசாமி மூலம் அல்லது ஜூனியர் விகடன் மூலம் இதை பெரிதாக்கி மன உளைச்சல் ஏற்படுத்திய அந்த அதிகாரிக்கு தக்க தண்டனை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் இது குறித்து பதிவும் இடுங்கள்
  ////

  நன்றி

  ReplyDelete
 47. But for travelling to Malaysia your brother needs ECR. That may be the reason for not clearing immigration. Since he has valid malaysian visa in his passport.


  அவர் செனையில் இருந்து சிங்கபூர் வரத்தான் விமான நிலையம் சென்றார்
  மலேசியா செல்ல அல்ல

  சிங்கையில் இருந்துதான் மலேசியா செல்ல உள்ளோம்
  அதை பற்றி அவர்கள் கவலையேன்???????

  Ministry of Overseas Indian Affairs (Emigration Policy Division) have allowed ECR passport holders traveling abroad for purposes others than employment to leave the country on production of valid passport, valid visa and return ticket at the immigration counters at international airports in India w.e.f. 1st October 2007. Emigration clearance is required only when there is “Emigration Check Required” endorsement in the passport. This is the valid point for us. Even if there is "Emigration Clearance Required"seal is there in your brothers passport, they have to allow if valid return ticket is available and going out for non employment purposes. Please proceed for legal options and you might recover the financial losses and more clarity on this issue.

  Hope for the best.

  ReplyDelete
 48. மிகவும் வருந்தத்தக்க விஷயம். மேலே நிறைய வழிமுறைகள் நண்பர்கள் சொல்லி உள்ளார்கள். நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  குறைந்தபட்சம் அந்த அதிகாரிக்கு உறைக்கும் வகையில் ஒரு விசாரணையாவது நடக்கவேண்டும். எனவே, முயற்சி செய்யாமல் விடாதீர்கள். செலவுகள் குறைவு என்பதால் இதை செய்ய முற்படலாம் என நினைக்கிறேன்.

  எளவெடுத்த நம் முட்டா கூ அதிகாரிகளை நினைத்து நெஞ்சு கொதிக்கிறது.

  ReplyDelete
 49. மிகவும் வருந்தத்தக்க விஷயம். மேலே நிறைய வழிமுறைகள் நண்பர்கள் சொல்லி உள்ளார்கள். நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  குறைந்தபட்சம் அந்த அதிகாரிக்கு உறைக்கும் வகையில் ஒரு விசாரணையாவது நடக்கவேண்டும். எனவே, முயற்சி செய்யாமல் விடாதீர்கள். செலவுகள் குறைவு என்பதால் இதை செய்ய முற்படலாம் என நினைக்கிறேன்.

  எளவெடுத்த நம் முட்டா கூ அதிகாரிகளை நினைத்து நெஞ்சு கொதிக்கிறது.

  ReplyDelete
 50. இதே போன்று என் தோழிக்கு ஏற்பட்டது,அவள் லண்டன் செல்லும்போது.உடனே சுதாரித்துகொண்ட அவள்,தேவையில்லாமல் இப்படி நடந்து கொண்டால்,சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்த உடன்,அந்த அதிகாரி வெலவெலத்து பொய்,விட்டு விட்டான்.சும்மா விட வேண்டாம் சகோதரரே,சட்ட நடவடிக்கை எடுங்கள்.

  ReplyDelete
 51. நடந்தவற்றை முழு விளக்கங்களோடு ஒரு கடிதம் எழுதி விடுங்கள். நீங்கள் புகார் செய்ய சமர்ப்பிக்க இருக்கும் அனைத்து பத்திரங்களையும் ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். முழு விளக்கமும் பெற வேண்டியது உங்கள் உரிமை. தகுந்த விளக்கம் கொடுக்க மறுப்பார்களாயின் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்க உங்களுக்கு தகுதி உண்டு.

  ReplyDelete
 52. சட்டபடி நடவடிக்கை எடுத்தால் நல்லது

  ReplyDelete
 53. பல் வேரு போராட்டங்கலுக்கு பிரகு சனிக்கிழ்மை 9 மனிக்கு சிங்கை வந்து சேர்ந்தார் திரு.பிரபு வின் தம்பி திரு.சத்திஷ்குமார்.மிகவும் மகில்ச்சி

  ReplyDelete
 54. திருச்சியில் இருந்து ஏர்-இண்டியன் எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் என் தம்பி சனி இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்தார்

  அவர் மீண்டும் 17 ம் தேதி சென்னை திரும்புகிறார்

  விரைவில் விளக்கமாக பதிவிடுகிறேன்

  அலோசனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete
 55. ////////
  Anonymous said...

  பல் வேரு போராட்டங்கலுக்கு பிரகு சனிக்கிழ்மை 9 மனிக்கு சிங்கை வந்து சேர்ந்தார் திரு.பிரபு வின் தம்பி திரு.சத்திஷ்குமார்.மிகவும் மகில்ச்சி
  ///////

  இது என் மாமா இட்ட பின் னூட்டம்

  ReplyDelete
 56. ப்ச்... வருத்தமா இருக்கு..

  ReplyDelete
 57. Ministry of Overseas Indian Affairs (Emigration Policy Division) have allowed ECR passport holders traveling abroad for purposes others than employment to leave the country on production of valid passport, valid visa and return ticket at the immigration counters at international airports in India w.e.f. 1st October 2007. Emigration clearance is required only when there is “Emigration Check Required” endorsement in the passport. This is the valid point for us. Even if there is "Emigration Clearance Required"seal is there in your brothers passport, they have to allow if valid return ticket is available and going out for non employment purposes. Please proceed for legal options and you might recover the financial losses and more clarity on this issue.
  ///

  நன்றி

  ReplyDelete
 58. ரோஸ்விக் said...

  மிகவும் வருந்தத்தக்க விஷயம். மேலே நிறைய வழிமுறைகள் நண்பர்கள் சொல்லி உள்ளார்கள். நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  குறைந்தபட்சம் அந்த அதிகாரிக்கு உறைக்கும் வகையில் ஒரு விசாரணையாவது நடக்கவேண்டும். எனவே, முயற்சி செய்யாமல் விடாதீர்கள். செலவுகள் குறைவு என்பதால் இதை செய்ய முற்படலாம் என நினைக்கிறேன்.

  எளவெடுத்த நம் முட்டா கூ அதிகாரிகளை நினைத்து நெஞ்சு கொதிக்கிறது.
  ///


  எனக்கும் அதிக கோபம் தான்

  ReplyDelete
 59. அந்த அதிகாரி வெலவெலத்து பொய்,விட்டு விட்டான்.சும்மா விட வேண்டாம் சகோதரரே,சட்ட நடவடிக்கை எடுங்கள்.
  \///

  அதற்குதான் விபரங்கள் சேகரிக்கிறேன்

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...