Sunday, March 22, 2009

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்

(அக்கா குழந்தையுடன் என் அப்பா வரதராசு)
          தொடர்பதிவிற்க்கு என்னை அழைத்த கவின்- க்கு நன்றி

         எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்- யாரை பற்றி எழுதுவது என்று சிந்தித்து(?) கொண்டிருந்த சமயத்தில் என்னை தொடர்புகொண்டு ""என்னை பற்றி எழுத வேண்டாம்,எனக்கு புகழ்ச்சி பிடிக்காது "" என்று தாழ்மையுடன் கேட்டுகொண்ட "பதிவுலக சூப்பர் ஸ்டார்" " , "வருங்கால முதல்வர்" , "கருப்ப்பு சூரியன்" அண்ணன் ஜமால் அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)


          எனக்கு பிடித்தவர் மிகவும் கவர்ந்தவர் என் அப்பா
எங்கள் வாழ்வுக்காகவே வாழ்பவர், ஏழை குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் மூத்த மகனாக பிறந்து, 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்காமல் பத்து வயதில் இருந்தே விவசாய வேலைகள் செய்தார்,தான் படிக்காவிட்டாலும் தன் மகன் படிக்கனும் என்று விரும்பினார் , நான் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சென்ற போது கவுன்சிலிங்கில் வருடம் 2500என்றார்கள் , ஆனால் கல்லூரியில் 9000ஆயிரம் என்றார்கள்,அந்த நேரத்தில் தினம் ரூ70க்கு கூலிக்கு செல்லும் அவருக்கு இது பெரிய தொகை,எப்படி கட்டுவது என்று கலக்கத்தில் இருந்த போது "படிப்பு வேண்டாம் வேலைக்கு போகட்டும்" என்று பலரும் சொன்னபோது ,எப்பாடுபட்டாவது என் மகனை படிக்க வைப்பேன் என்று படிக்க வைத்தார். எங்களுக்கு சிறு கய்ச்சல் என்றாலும் மருத்துவமனைக்கு அழைக்கும் அவர் தனக்கு என்றால் ஒரு மாத்திரை போதும் என்பார்

          நான் ஆணாக இருப்பாதாலோ என்னவோ சிறு வயது முதல் இன்றுவரை என் தாயைவிட என்னை அதிகம் புரிந்து கொண்டவர் அவர்தான் , சில வீடுகளில் பார்த்துள்ளேன் , தந்தை வரும் சப்தம் கேட்டாலே வீடே அமைதியாகிவிட்டும் , ஆனால் நான் என் தந்தையிடம் பயந்ததில்லை , மரியாதைதான் உண்டு , அவர் வந்தால் உட்கார்ந்து இருக்கு நாற்க்காலியைவிட்டு எழுவது போன்ற போலி மரியாதையை நான் தந்ததில்லை அவரும் எதிர்பார்த்தது இல்லை

          காப்பியங்களிலும் சினிமாவிலும் தாய்க்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போற்றபடுகின்றார்கள். இளம் வயதில பல கனவுடன் இருக்கு ஒரு ஆண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு மீதிவாழ்நாள் முழுக்க தன் வாரிசுகளுக்காகவே உழைக்கும் தந்தையை அதிகம் போற்றியதில்லை


சிங்கப்பூர் வந்து சம்பாரித்து ஊரில் வீடுகட்டி முடித்த பின் ஒருநாள் என் தந்தையிடம் "உங்கள் நிறைவேறா ஆசை என்று ஏதாவது இர்ருந்தால் சொல்லுங்கள் அதை நான் செய்கிறேன் " என்று நான் கேட்க

" எனக்கு என்னப்பா வேனும் நீங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்" என்றார்

அதுதான் என் அப்பா...

 
 
என்றும்
பிரியமுடன் பிரபு . .
.
.Sunday, March 08, 2009

நாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு
அழகான இரவொன்றின்
அமைதி குலையும்படி
எங்கள் குடியிருப்பின்
வடக்குப் பகுதியிலிருந்து - சில
தெரு நாய்கள் குரைத்தது

எல்லா நாய்களைப் போல
லொல் லொள் என்றில்லாமல்
மதம் மதம் என்று அது குரைத்தது

" இது நாய்களிலே ஒரு
பைத்தியக்கார  நாய் " - என்று
எண்ணினோம் நாங்கள்

நாட்கள் நகர நகர
நாய்களின் எண்ணிக்கை
அதிகமானது - ஆம்
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்
நாயாக மாறியிருந்தார்கள்


ஆம்
இந்த நாய்களின்
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு
அப்படியொரு சக்தி


காதுகொடுத்துக் கேட்போரையெல்லாம்
மயக்க நிலைக்குத் தள்ளி
நாய்களாய் மாற்றிவிடும்


இப்போ
மதம் மதம் எனற சப்தம்
சற்று அதிகமகவே கேட்கிறது


நாக்கை தொங்கவிட்டபடி
கூர்பற்களை காட்டும் அந்த
நாய்களை கண்டு

மனிதர்களாகிய எங்களுக்கு பயம்
அவற்றை அடித்து விரட்ட
ஆசைதான் - ஆனால் எங்களையும்
கடித்து விடுமோ என்ற பயம்


மதம் மதம் என்று
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக

அவைகள் அடித்து கொள்கின்றன


தெருவில் நடக்கவே
பயமாக உள்ளது எங்களுக்குஇன்னும்
மதம் மதம் என்ற சப்தம்
கேட்டுகொண்டே இருக்கிறது
மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது


பயம் அதிகமாக உள்ளது
பக்குவப்பட்டவர்கள் குறைவாக உள்ளனரோ ?!?- என்று
பயம் அதிகமாகவே உள்ளது


சப்தம் கேட்டுகொண்டே இருக்கு
மதம்.. மதம்.. மதம்..
.


http://www.vaarppu.com/view/1740/


என்றும்
பிரியமுடன் பிரபு......


 

Monday, March 02, 2009

உன் சிரிப்பை விட.................!!!!!!!!!!!!


...............................................................................
என்னை எல்லோரும்
கவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
..................................................................................


குறிப்பு - "சிரிப்பைவிட" என்பதற்க்கு பதில் "முகபாவம்" என்றும்
இருக்கலாம்
( ஓட்டு போட்டுத்தான் ஆகனும் )

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...