Showing posts with label யுகபாரதி. Show all posts
Showing posts with label யுகபாரதி. Show all posts

Tuesday, August 17, 2010

மனப்பத்தாயம்-யுகபாரதி

நூல் : மனப்பத்தாயம் 
ஆசிரியர் : யுகபாரதி
பதிப்பு : நேர் நிரை
விலை : 45 ரூ



அதில் இருந்து சில கவிதைகள்




***ஆதலினால்


வருகை எப்போதென
வாசலருகே
விழியிரண்டையும்
நட்டு வைத்து

பரிதவிக்கும் நெஞ்சை
பகல் கனவில் மேயவிட்டு


வராவிடில் காரணம் துழாவி
முகம் சோர்ந்து
கவலை கொண்டு


அலுவலை மறந்து
அண்ணாந்தபடியே
ஞாபகம் பேசி


ஏதோவொரு பிரமையில்
தேகமிழைத்து


என்போல் நீயுமாகி
விடக்கூடதென்றுதான்
சொல்லாமல் வைத்திருக்கிறேன்
உன்னிடம் கூட என் காதலை


***
கடுதாசி


ஒரே வாளி நீரில் உடம்பு அலசி
டிரங்குப் பெட்டிக்கடியில்
மடித்து வைத்த சட்டை மாட்டி


கிடைக்கும் போது சோறுண்டு


பராரியாய் நகரத் தெருக்களில்
உலவிக்கொண்டிருந்தாலும்


ஊரிலிருந்து அம்மா போடும் 
கடுதாசிக்கு பதில்
சவுகரியமென்றுதான்
எழுத வேண்டியிருக்கிறது





***

மீதிய புத்தகத்துல படிங்க


பிரியமுடன் பிரபு

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...