Tuesday, September 23, 2008

பார்த்த முதல் நாளே--சினிமா மெட்டுக்கு என் பாட்டு - 2


"வேட்டையாடு விளையாடு " படத்தில் இருந்து "பார்த்த முதல் நாளே" பாடல் மெட்டுக்கு என் வரிகள்


பல்லவி :
காதல் வந்ததாலே..
என் நெஞ்சில்
காதல் வந்ததாலே..

யாவும் இனிக்கிறதே..
இவ்வுலகில்
வாழப் பிடிக்கிறதே..

உனைப்போல் ஒருத்தி கிடைத்தவுடன்
இந்த உலகம்தானே பிடித்த இடம்
சொர்க்கங்கள் வேண்டாம்
நீ மட்டும் போதும்
(காதல் வந்ததாலே........)

சரணம் 1 :


மயிலிறகு கூந்தல்
வருடிக் கொண்டேதான் - உன்
மார்பில் முகம்சாய்க்க வேண்டும்

வாழும் காலமெல்லாம்
உன் கண்ணின் இமைக்குள்
நான் கைதியாகிவிட வேண்டும்

எனை கொத்திக் கொல்லும்
கழுகென்று - உந்தன் விழிரெண்டை
நானும் அன்று கண்டேன்

எனை கொன்றுத் தின்ன
என்னுயிரை உனக்கே உயிலெழுதி
நானும் மின்று தந்தேன்

உன்னோடு ஒர்நாள்
வாழ்ந்தாலும் போதும் - என்
வாழ்வு வளமாகும் பெண்ணெ......
நீயின்றி வாழ்ந்தாலே
ஜென்மங்கள் யாவும்
சாபமாகிப்போகுமடி கண்ணே..
(காதல் வந்ததாலே..)
சரணம் 2 :
 
பெண்;
கடற்கரை மணலில்
உன்பாதச் சுவடில்
கால்பதித்து நடந்திட ஆச(சை)

காற்றில் கலந்துவிட்ட
உன் சுவாசக் காற்றை
கண்டேடுத்து சுவாசிக்க ஆச(சை)ஆண் ;

உன்கண்கள் இரண்டும்
என்கண்கள் இரண்டும்
ஓர்கானவு கானும்வரம் வேண்டும்

கானும் கனவிலும்
கண்மனியே உனைநான்
பிரியாமல் வாழ்ந்திட வேண்டும்

கடவுள்கள் கூடி
உனைகேட்டால் கூட
நான் திருப்பித்தரமாட்டேன் பெண்ணே..
எமனே என் எதிரே
வந்தாலும் கூட
போரிட்டு உனைகாப்பேன் கண்ணே
..
(காதல் வந்ததாலே..)


Saturday, September 13, 2008

இதே நாள், இதே மண்டபம் - ஒரு காதல்(லின்) கதை ..பல வருடம் கழித்து இப்பொதுதான் என் சொந்த ஊருக்கு வருகிறேன்.அதுவும் என் உயிர்த்தோழன் வீட்டு திருமணத்திர்க்காக. மண்டபத்தை பார்க்கும் போதே வசந்தகாலத்தைபோல மனசு இதமாய் பூத்தது

"வாடா வா,இதுதான் வர்ர நேரமா? பத்திரிக்கை கொடுக்கும்போதே சொல்லிக் கொடுத்தேன் அப்ப சரின்னு சொன்ன,நேற்று உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு நீ இப்பத்தான்வர்ர...." - என்று சற்று கோபித்துக் கொண்டே வர்வேற்றான் என் நன்பன் . குளிப்பதற்க்காக அறைக்குச் சென்றேன், வழியில்தான் அவளை பார்த்தேன் . முதலில் ஏதோ சிலைதானோ என்று தோன்றியது அருகில் வரவரவே அது பெண்ணென்று புரிந்தது

சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது. அருகில் வந்தவள் ஒரு துண்டை என்னிடம் கொடுத்து "அந்த அறையில் சென்று குளித்துவிட்டு சீக்கிரம வாங்க" என்று கூறினாள்.பேசினாளா? பூவெடுத்து வீசினாளா?நிரம்பிய கோப்பையில் மேலும் நீரூற்ற வழிந்தோடும் நீரைப்போல வழியெங்கும் வழிந்தோடுகிறது அவள் அழகு.
அவள் மெல்ல நடக்கிறாள்.இது என்ன வகையான நடை? முதன் முதலில் நடக்க துவங்கும் குழந்தை இருபக்கமும் கைகளையும் நீட்டி பேலன்ஸ் செய்தபடி தத்திதத்தி வரும் போது தெரியுமே ஒரு அழகு அதுவும் உடல் தளர்ந்து சுருங்கிய சருமத்துடன் பாட்டியோ தத்தாவோ நடந்து வரும்போது தெரியுமே ஒரு அழகு அதையும் சேர்த்த அழகு.நடக்க நடக்க பூமி தன் கைகளையேந்தி அவள் பாதத்தை பதியம் போட்டு கொண்ட்து.நாளை அங்கே பூக்கள் முளைத்திருக்ககூடும்குளித்து முடித்து கூடத்திற்க்கு வந்தேன்.பலவருடமாய் பாராத நன்பர்கள் ஒவ்வொருவராய் நலம் விசாரித்து பேசிக்கொண்டே இருந்தார்கள் என் கண்கள் மட்டும் அவளையே தேடியது. அதோ ! அங்கே நிற்க்கிறாள்,யாருடனோ கையைப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறாள் அது அவளின் தோழியாக இருக்கவேண்டும்.சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..

மணநேரம் நெருங்க மணமக்கள் மணவறையில் அமர்ந்திருந்தனர், மணமக்களின் உறவுமுறை கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவள் மணமேடையில் சற்றே தள்ளித்தான் நின்றாள்.ஆனால் எனக்கோ "எங்கே தன் அழகில் மயங்கி மணமகன் தன் கழுத்தில் தாலி கட்டிவிடுவானோ "என்று எண்ணி தள்ளி நிற்ப்பது போல தோன்றியது
ஐயர் மந்திரம் சொல்ல மேளம் முழங்க கல்யாணம் முடிந்தது.அனைவரும் அர்ச்சதை தூவினார்கள் முதல் வரிசையில் இருந்ததால் என்மீதும்,மேடையில் இருந்ததால் அவள்மீதும் சிலபல விழுந்தன
அடுத்து என்ன கூட்டம் மெல்ல மெல்ல சாப்பாட்டு அறை பக்கம் சென்றது.நான் என் நன்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் அவனை யாரோ அழைக்க அவனும் எழுந்து சென்றான்.அப்பொது அவள் அருகில் வந்தாள் "வாங்க சாப்பிட போகலாம்" என்றாள் அரசன் உத்தரவுக்கு அடிபணியும் பணியாளனைப் போல எழுந்து அவளுடன் சென்றேன்
இரண்டடி தூரத்தில் அவள் நடக்க நான் பின்தொடர்ந்தேன். திடீரென நின்ற அவள் என் பக்கம் திரும்பி "அந்த மணவறையை பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று கேட்டாள்,ஒருமுறை மணவறையை பார்த்தேன் பின் அவள் கண்களை உற்று பார்த்து சொன்னேன் " 40 வருசத்துக்கு முன்னாடி இதே நாள், இதே மண்டபம்,அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.


குறிப்பு : (ஏதுக்கு நடிகை பாவணா படம் போட்டேன்னு கேட்க கூடாது)


Monday, September 08, 2008

கல்லூரியில் காதல்


காலைச்சூரியன் என்ணை
தட்டி எழுப்பினான்
இன்று கல்லூரியின்
கடைசிநாள்


பேருந்து நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்
என் தேவதைக்காக


அதோ!
அவள் வருவது தெரிகிறது


ஆம்!
நேற்றைய அம்மாவாசை இரவில்
நான் வானில் தேடிய
நிலவு - இன்று
தரையில் தவழ்ந்து
வருவது போல் வந்தாள்


இந்த தங்கதாமரை - இன்று
மஞ்சள் தாவனியில்
மலர்திருந்தது
புடவை கட்டிய பூவாய்!
கல்லூரியை வலம்வரும் தேராய்!
கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது


காலை நேர ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிகள் போல - அவள்
முகத்தில் முத்துமுத்தாய்
வியர்வை துளிகள்!


அவளின் கருப்பு கூந்தலில்
கட்டணமின்றி குடியேறியிருந்தன
மல்லிகைகள்!


பூவால் இவளுக்கு அழகா?
இவளால் பூவுக்கு அழகா?
பட்டிமன்றமே வைக்கலாம்!


மீன் விழிகள் மின்சாரமாய்
தாக்க
அருகில்வந்தவள்
“ஹாய்” என்றாள்


உள்ளத்து காதலை
உதட்டால் சொல்ல
முயன்றேன்..............
ப்பூபூ............ம்ம்ம்ம்ம்


பல்லவன் வந்து
பாதியில் குறுக்கிட்டான்
இருவரும் ஏறினோம்
“பல்லாக்கில் சுமக்க
நானிருக்க - உனக்கு
பல்லவன் எதுக்கடி?” -இத்தோடு
என்கவிதை புத்தகத்தின்
இறுதி பக்கமும் நிரம்பியது


கல்லூரி தேர்வுமுடிந்து
ஒவ்வொருவராய்
வெளியேவர - நானும்
வந்தேன் - அவளும்
வந்தாள்..


மீண்டும் “ஹாய் - ஹாய்”
எல்லோரிடமும் வாங்கிவிட்டேன்
நீங்க..............என்றவாறு
இருவரின் காலப்பதிவேடும்
கைமாறியது


பார்வை சிறையில்
பதுங்கிக் கிடந்தயேன்
காதலை - இந்த
காலப்பதிவேட்டில் கச்சிதமாய் செதுக்கினேன்


மீண்டும் காலப்பதிவேடுகள் கைமாறின..
இறுதியில் தனிமையில்
அதை திறந்து
பாவை பதிந்துவைத்த
பக்கத்தை தேடினேன்


பத்துநாள்
பசித்திருந்தவன்
கையில் கிடைத்த
உணவு பொட்டலம்போல் பிரித்தேன் !


மண்ணில் கலந்த
உணவுக்காக மண்ணை
கிளரும் கோழியின்வேகம் எனக்கு................


தேர்வு முடிவில் - தன்
எண்ணை தேடும்
மாணவனின் பயம் எனக்கு................


இறுதி பந்தில்ஆறு ரன் தேவை
முடிவுக்காக காத்திருக்கும் ரசிகனின்
ஆர்வம் எனக்கு................


கிடைத்துவிட்டது............
பாவையின் பதிவு
கிடைத்துவிட்டது............


மூன்று வருட ஏக்கத்தை
மூன்று வார்த்தையாய்
முருக்கி கட்டியிருந்தாள்......


ஆம்!
“ஐலவ்யூயூயூயூயூயூ..........”
பார்த்தேன்..படித்தேன்.... பறந்தேன்......
உலகையே மறந்தேன்..........
உயரே பறந்த பந்து
உள்ளங்கையில் விழுந்தது போல............


மழைகண்டவிவசாயி போல்........
மடை திறந்தவெள்ளம் போல்.........


எத்தனை மகிழ்ச்சி!?
அளவிட கோலும் இல்லை
அனுபவித்த ஆளும் இல்லை


எம்பிக் குதித்தேன்
தலையில் பலத்த அடி
திடுக்கிட்டு விழித்தேன்


“இன்னும் என்ன தூக்கம்?
காலேஜ்க்கு நேரமாச்சுஎழுந்திரு.. .. ..”
சப்தமிட்டு கொண்டிருந்தார்
என்தாய்!


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1071

Saturday, September 06, 2008

அஞ்சாத சிங்கம் விஜய டி ராஜேந்தர்

1.

2.

கொஞ்சம் பழசு தான் ஆனாலும் ரவுசா இருக்கும்

குறிப்பு : தலைப்பில் "அ" என்ற எழுத்து தட்டச்சு பிழைகாரணமாக இல்லாமல் இருக்கும் எனவே படிப்பவர்கள் தங்களின் விருப்பத்திர்க்கேற்ப்ப "அ" - வை தலைப்பில் பொருத்திக்கொள்ளவும்

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...