Saturday, March 06, 2010

யாருக்காச்சும் தெரியுமா??

 


அதிகாலை எழுந்து
குளித்து  முடித்து
கூட்டிப் பெருக்கிக்
கோலம் போட்டு..

கன்னிப்  பெண்னையும் 
அம்மான்னு கூப்பிடும்
கறவ மாட்டுக்குத்  தீனி போட்டு...
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
அனுசரனையா இருந்து.....

ம்ம்ம் இப்படி 
அழகாத்தானே இருந்துச்சு எ(ன்) வாழ்க்கை!?!?

இப்ப என்னாச்சு ?!?
யாருக்காச்சும் தெரியுமா??!?

பத்து குட(ம்)முன்னாலும்
பதறாம தூக்குவே(ன்) - இப்ப
ஒத்த காலிகுடம்
கனக்குதய்யா எனக்கு!!

நா(ன்)  புள்ளி வச்சு கோலம் போட்டா..
வழியில போறவுகயெல்லாம்
வாய் பிளந்து பா(ர்)ப்பாக - ஆனா இப்ப
கோலம் ஒருபக்கம் இருக்க
புள்ளி மட்டும் நிக்குதய்யா  ஒத்தையில
என்ன போல

கலியாணம் கட்டி 
அஞ்சு நாளுதானே ஆச்சு ?!?!
வேல பாக்குற ஊருக்கு போக
கட்டின என்னையும் 
கைபிடிச்சு கூப்புட்டீக..

"புது குடிதனத்துக்கு இது
ஆகாத மாசமடா -
அம்பது நாள் போனபின்னே
அழைச்சுகிட்டுப்  போகலாம் " - என உன்

ஆத்தாகாரி  சொல்ல கேட்டு

பிடிச்ச கையை விட்டுப் புட்டு
வண்டியேறி போனிகளே!!

வண்டி சக்கரத்துல மாட்டின
கோழி குஞ்சா -என் மனசு
நசுங்கி போன சேதி
யாருக்காச்சும் தெரியுமா??

இன்னும் அம்பது நாள் இருக்கே?!?!?

வாரம் ஒருக்கா
வண்டி புடிச்சு வருவீக - ஆனாலும்
ஆச ராசாவின் அழகு முகத்த
ஆச தீர பார்க்கும் முன்னே
அடுத்த நாள் வந்திடுதே !!?
இந்த கட்டைல போற 
கடிகாரத்த நிறுத்திவைக்க 
யாருக்காச்சும் தெரியுமா??!?!

**************************************************
நேற்று ஒரு சகோதரியிடம் தொலைபேசியில் பேசினேன் . சென்ற 19ஆம் தேதிதான் திருமணம் ஆச்சு. கணவர் கோவையில் வேலை செய்கிறார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் மட்டும் கோவை சென்று விட்டார். இந்த மாதத்தில் புது குடித்தனம் வேண்டாம் என கணவர் வீட்டார் சொல்லிவிட்டதால் இன்னும் 2 மாதம் பிறகே சகோதரியும் கோவை செல்ல முடியும். அதுவரை வாரா வாரம் அவர் கோவையில் இருந்து ஞாயிறு ஒருநாள் மட்டும் வந்து செல்வார் . இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா?? 

நேற்று பேசி முடித்த உடன் எழுதியது இந்த கவிதை(?) , பிழைகள் இருந்தா பின்னூட்டதில் சொல்லவும்
தலைப்பு வேற வைக்கலாமா?? இதைவிட சிறப்பான தலைப்பு "யாருக்காச்சும் தெரியுமா??"


பிரியமுடன் பிரபு....


.

36 comments:

  1. உங்களுக்கு கல்யாணம் ஆனது போலவே இருந்திச்சி துவக்கத்தில், அப்புறமா நம்ம முருவுக்காக எழுதினீங்களோன்னு நினைச்சேன்

    ------------------

    ரொம்ப அழகா கொண்டு வந்திருக்கீங்க வரிகளில், திருமணம் ஆகி வெளிநாடு சென்றவர்களான எங்களுக்கு கலங்க வைக்கு இவ்வரிகள்.

    அச்சகோதரி விரைவில் அன்பரோடு சேர்ந்து இருக்க பிரார்த்தனைகளோடு ...

    ReplyDelete
  2. நன்றி ஜமால்

    நான் போட்ட பதிவ நானே படிக்கும் முன் பின்னுட்டம் போடுறியளே எப்பூடீ???

    ReplyDelete
  3. நல்லா இருக்கு

    ReplyDelete
  4. //இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா??//

    கொடுமதாங்க..அறிவுக்கு புலப்படாத சில சிலருக்கு இருக்கு, காலம் எதையும் செய்வதில்லை என்பது எப்போ புரியும்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. யாருப்பா அது பாவம் பச்சபுள்ளங்கள பிரிக்கிறது.
    எடுத்துச்சொல்லுங்க பிரபு.

    நல்ல கதையம்சம் புரியனுமே புரியிரவங்களூக்கு..

    ReplyDelete
  8. நல்ல தலைப்பு யாருக்காச்சும் தெரியுமா ...கவிதை நம் குழந்தை அதில் யாரும் கை வைக்க விடவேண்டாமே.....நீங்கள் ஆசை ஆசையாய் பெயர் வைத்தபிறகு அதை மாற்ற மற்றவர் யார்?அது யாருக்காச்சும் தெரியுமா?
    போட்டி என்றால் ஓகே.

    ReplyDelete
  9. நல்ல கவிதை, வாழ்த்துக்கள் பிரபு. என்ன பண்ணுவது? பார்த்து குடித்தனம் வச்சவுடன் ஆடி மாசம் வந்துடப் போகுது.

    ReplyDelete
  10. Rajeswari said...

    nice

    ///


    நன்றிங்க

    ReplyDelete
  11. வானம்பாடிகள் said...

    நல்லா இருக்கு
    ///

    நன்றிங்க

    ReplyDelete
  12. அபுஅஃப்ஸர் said...

    //இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா??//

    கொடுமதாங்க..அறிவுக்கு புலப்படாத சில சிலருக்கு இருக்கு, காலம் எதையும் செய்வதில்லை என்பது எப்போ புரியும்

    ///

    அதெல்லாம் புரியவே புரியாதுங்க

    ReplyDelete
  13. Anonymous said...
    This post has been removed by a blog administrator.
    ////

    நன்றி

    அடிக்கடி வாங்க
    என் எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  14. அன்புடன் மலிக்கா said...

    யாருப்பா அது பாவம் பச்சபுள்ளங்கள பிரிக்கிறது.
    எடுத்துச்சொல்லுங்க பிரபு.

    நல்ல கதையம்சம் புரியனுமே புரியிரவங்களூக்கு..

    ./////

    நன்றி மலிக்கா

    ReplyDelete
  15. goma said...

    நல்ல தலைப்பு யாருக்காச்சும் தெரியுமா ...கவிதை நம் குழந்தை அதில் யாரும் கை வைக்க விடவேண்டாமே.....நீங்கள் ஆசை ஆசையாய் பெயர் வைத்தபிறகு அதை மாற்ற மற்றவர் யார்?அது யாருக்காச்சும் தெரியுமா?
    போட்டி என்றால் ஓகே.

    /////

    கருத்துக்கு நன்றிங்க
    எழுதிய உடனே பதிவிட்டதால் ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன்

    ReplyDelete
  16. பித்தனின் வாக்கு said...

    நல்ல கவிதை, வாழ்த்துக்கள் பிரபு.

    ////


    வாங்க அண்ணே நன்றி


    ///என்ன பண்ணுவது? பார்த்து குடித்தனம் வச்சவுடன் ஆடி மாசம் வந்துடப் போகுது.
    ///

    ஏன் பீதிய கிளப்புறீங்க????!

    ReplyDelete
  17. பொண்ணுங்க வலி.... :-( நமக்கும்தான்....

    ReplyDelete
  18. really nice.... i put ote to chennai super kings thala...

    ReplyDelete
  19. க.பாலாசி said...

    பொண்ணுங்க வலி.... :-( நமக்கும்தான்....
    ///

    நன்றி பாலாசி

    ReplyDelete
  20. ஸ்ரீ.கிருஷ்ணா said...

    really nice.... i put ote to chennai super kings thala...
    ////

    நன்றி

    ReplyDelete
  21. ஈஸ்வரன்April 02, 2010 11:46 AM

    கவிதை மிக அருமை
    தொடருங்கள் மேலும்
    எப்படி உங்களால் உங்களின் நேரத்தை இந்த
    மிக அழகான மின் வலையில் பதிக்கின்றீர்கள்
    மிக அருமை
    மிக மிக அருமை
    மேலும் எதிர்பார்ப்புடன்
    ஈஸ்வரன்
    பெங்களூரு
    இந்தியா
    பொத்தனூர்காரன் எல்லாம் அறிந்தவனில்லை , எதையும் அறிந்துகொள்ளக் கூடியவன்
    உண்மை தான்
    இந்த கவிதையை பார்த்தபின்
    எமக்கு புரிந்தது
    எப்போது உமக்கு திருமணம்??

    ReplyDelete
  22. வார்த்தை வரிசை ரொம்ப நல்லா இருக்குதுங்கோ ..

    ReplyDelete
  23. ஈஸ்வரன் said...
    எமக்கு புரிந்தது
    எப்போது உமக்கு திருமணம்??
    ////

    ஆஹா???

    சரி நீங்க பதிவர் இல்லையா

    ReplyDelete
  24. awesome!!!!
    reflecting the pain and love!!!!

    ReplyDelete
  25. ரோகிணிசிவா said...

    awesome!!!!
    reflecting the pain and love!!!!

    ////
    நன்றி

    ReplyDelete
  26. உணர்வுபூர்வமான கவிதை.ஒரு பெண்ணின் மனநிலை அழகாக காட்டியது.அதிலும் வெளிநாடு வாழ்க்கை வாழ்ப்பவர்களின் மனநிலை நினைத்து பாருங்கள். பாரட்டுகள் பிரபு

    ReplyDelete
  27. //இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா?? //

    படுபாதகம். "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்பார்கள் அதைக் கூட அந்த தம்பதிகளுக்கு தராத சமூகம் கண்டிக்கத்தக்கது.

    :)

    ReplyDelete
  28. mkr said...

    உணர்வுபூர்வமான கவிதை.ஒரு பெண்ணின் மனநிலை அழகாக காட்டியது.அதிலும் வெளிநாடு வாழ்க்கை வாழ்ப்பவர்களின் மனநிலை நினைத்து பாருங்கள். பாரட்டுகள் பிரபு
    ////////

    நன்றிங்க

    ReplyDelete
  29. கோவி.கண்ணன் said...

    //இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா?? //

    படுபாதகம். "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்பார்கள் அதைக் கூட அந்த தம்பதிகளுக்கு தராத சமூகம் கண்டிக்கத்தக்கது.

    :)


    /////////

    ஆமாண்ணே

    ReplyDelete
  30. தாராபுரத்தான் said...

    வார்த்தை வரிசை ரொம்ப நல்லா இருக்குதுங்கோ ..
    ////////

    நன்றிங்க

    ReplyDelete
  31. For more information about astrology. Log on to http://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that ' jaamakkol astrology software' has been introduced only by this website.

    ReplyDelete
  32. For more information about astrology. Log on to http://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that ' jaamakkol astrology software' has been introduced only by this website.
    //

    என் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால ஜாதகத்தை நம்புவதில்லை

    ReplyDelete
  33. என் நிலைமையும் இப்படி தாங்க என்ன செய்ய "முதியோர் செல்லை தட்டகூடதுன்னு தான் ௫௦ நாள் காத்திருக்கோம்"
    நம் முன்னோர்கள் நல்லதே செய்வார்கள்

    நன்றி என் மனைவி எனக்காக எழுதியதுபோல் உணர்ந்தேன் முடிந்தவரை சீக்கிரம் சென்னை கூட்டிக்கொண்டு வருகிறேன்

    ReplyDelete
  34. Babu Natesan said...
    என் நிலைமையும் இப்படி தாங்க என்ன செய்ய "முதியோர் செல்லை தட்டகூடதுன்னு தான் ௫௦ நாள் காத்திருக்கோம்"
    நம் முன்னோர்கள் நல்லதே செய்வார்கள்

    நன்றி என் மனைவி எனக்காக எழுதியதுபோல் உணர்ந்தேன் முடிந்தவரை சீக்கிரம் சென்னை கூட்டிக்கொண்டு வருகிறேன்
    ///



    வணக்கம் நண்பரே
    பெரியவர்களின் பேச்சை மதிக்க வேண்டும் , அதே சமயம் அவர்களின் மூடநம்பிக்கைகளை நாமும் அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை , அவற்றை களைய வேண்டும் அதுவே வரும் கால சமுதாயத்துக்கு நல்லது .
    அவள் என தங்கை முறை என்பதயும் மீறி ஒரு தோழி போல பழகுபவள் என்பதால் தன மனவலியை என்னோடு பகிர்த்தார் . இங்கே தவறு அவள் கணவனுடையதே . தன் குடும்பத்தாருடன் பேசி கூடவே அழைத்து சென்றிருக்க வேண்டும் , தன் குடும்பத்து ஆட்களை கூட சமாளிக்க தெரியாவிட்டால் இந்த மோசமான உலகில் எப்படி வாழ்வது ?!!
    அதிக பெண்கள் மத்தியில் வளர்ந்தவன் என்பதால் என்னால் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுத முடிந்தது .
    முடிந்தால் உங்கள் துணையை உடனே அழைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...