Wednesday, February 17, 2010

காதல் மழை.......காதல் கதை

 


 " சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "


 " மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "


" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "


" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "


" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை.ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற ,அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "


" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "


" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை


..
இது ஏற்கனவே பதிவிட்டதுதான்
இப்போ காதலர்தினத்துக்காக மீண்டும்

மேலும் சில 

இதே நாள், இதே மண்டபம்

கண்கள் இரண்டால் 

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்

ஆனாலும் காதலிக்கிறோம்!

என் காதலியே என் காதலியே

..........

பிரியமுடன் பிரபு ..

Friday, February 12, 2010

பிரச்சனைக்கு பின் என் தம்பி சிங்கப்பூர் வந்தாச்சு ........



                            

      கடந்த 4ம் தேதி சுற்றுலா விசா மூலம் சிங்கை வர இருந்த என் தம்பியை சென்னை விமான நிலையத்தில் “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என கூறி பயணம் செய்ய அனுமதிக்க வில்லை
முதல் பதிவை படிக்காதவர்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html
அங்கே சென்று படிக்கவும்

                                  நிறைய நண்பர்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் கூறி பின்னூட்டம் இட்டுள்ளார்கள் , அனைவருக்கும் நன்றி . நட்புடன் ஜமால் என் பதிவை ஈரோட்டில் இருக்கும் வழக்கறிஞர் எஸ்ரா இராஐசேகரன் . (அவரும் பதிவரே) http://gandhicongress.blogspot.com/ அவர்களிடம் காட்டியுள்ளார் . அவர் என்னை மின்ன்ஞ்சலில் தொடர்புகொண்டு விபரங்கள் கேட்டார் , தந்துள்ளேன்.

                                               இதற்க்கிடையில் 4ம் தேதி பயணம் தடைபட்டதும் , புதிதாக 8000 ரூபாய் செலவில் விமானசீட்டு எடுத்து 6ம் தேதி காலை 11.40 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் ஏர்-இண்டியன் எக்ஸ்பிரசில் பயணம் செய்து இரவு 8.30க்கு(வழக்கம் போல 40 நிமிடம் தாமதம்) வந்தார் . 

திருச்சி விமான நிலையத்திலும் வேலைக்கு செல்கிறாயா? என சந்தேக கேள்வி கேட்டுள்ளார்கள் , அங்கே எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அதிகாரியாக பணிசெய்கிறார் , அவர் வந்து “இவர்(என் தம்பி) சுற்றுலாதான் செல்கிறார் , கண்டிப்பாக 17ம் தேதி இந்தியா திரும்புவார் அதற்க்கு நான் பொருப்பு” என உறுதி கூறிய பிறகே என் தம்பி விமானம் ஏற அனுமதிக்க பட்டார் .

                                                 சிங்கையிலும் எல்லா சுற்றுலா பயணிகளையும் விசாரித்தார்கள் , அவரிடம் எல்லாம்(விசா,கடவுச்சீட்டு, என் அடையாள அட்டை நகல்) சரியாக இருந்ததால் உள்ளே விட்டார்கள் , எல்லம் சரி என தெரிந்தும் சிங்கையில் உள்ளே விட்டு விட்டார்கள் , ஆனால் எல்லம் சரியாக இருந்தும் சென்னையில் பயணம் செய்ய விடாமல் தடுத்தது ஏன்?

                                     இந்த பிரச்சனையில் அதிக மன உளைச்சல் , தேவையில்லாமல் சென்னையில் இருந்து அவசரமாக திருச்சி பயணம், மேலும் 8000 ரூபாய் விமானசீட்டு செலவு என நாங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளோம் . நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை , போலிவிசாவோ ,கடவுசீட்டோ(பாஸ்போர்ட்) எங்களிடம் இல்லை , அல்லது பொய்சொல்லி வேலை செய்யவும் வரவில்லை , அப்படியிருந்தும் இது ஏன்?

Friday, February 05, 2010

விமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை? சுற்றுலா?



நேற்று (4ம் தேதி) இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டைகர் விமானம் மூலம் என் தம்பி சிங்கை வருவதற்காக விமானசீட்டு , விசா எல்லாம் எடுத்து தயாரக இருந்தோம் , சரியாக 3 மணிநேரத்துக்கு முன்பு (7 மணிக்கு) என் தம்பி விமானநிலையம் சென்றார்


சென்னை விமான நிலையத்தில்
செக்கின் செய்யும் வரை எல்லாம் சரியாக நடந்தது . அடுத்து இமிகிரேசன் சென்றார் . அங்கிருந்த அதிகாரி என் தம்பியின் கடவுசீட்டு,விசா,விமானசீட்டு எல்லாம் சோதித்துவிட்டு நீ எதற்காக சிங்கப்பூர் செல்கிறாய் என கேட்க ,சுற்றுலா செல்வதாக என தம்பி சொன்னார் . ஆனால் அந்த அதிகாரி “நீ வேலைக்கு செல்கிறாய்’ என்று கூறியுள்ளார் .என் தம்பி தன்னிடம் உள்ள சுற்றுலாவுக்கான விசா , மற்றும் என்னுடையா சிங்கப்பூர் நிரந்தரவாசி அடையாள அட்டையின் நகல் மற்றும் திரும்பி வருவதற்கான் விமான சீட்டு எல்லாம் கட்டி “நான் சுற்றுலாவுக்குதான் செல்கிறேன்” என்று கூறியுள்ளார். அதை அந்த அதிகாரி ஏற்க்கவில்லை . என் தம்பியின் கடவுசீட்டில் மலேசியாவுக்கான விசாவும் பதிந்து இருந்தது . அதைகாட்டி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்வதாகவும் அந்த அதிகாரி கூற என் தம்பி குழம்பிபோனார் .
5 ம் வகுப்பு மட்டுமே படித்த என் தம்பிக்கு இது போன்ற விசயங்கள் புரியவில்லை எனவே என்னிடம் கைபேசியில் பேசினார் . நான் அதிகாரியிடம் பேச விரும்பினேன்.அவரோ பேச மறுத்துவிட்டார் . விமான நிலையத்துக்குள் செல்ல 60 ரூபாய் கட்டணம் செலுத்தி என் மாமா உள்ளே சென்றிருந்தார் . அவரும் என் தம்பியின் சார்பாக பேச முயற்சித்தார் அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.



அவரின் பெயர் என்ன என்று கேட்க சொன்னேன் அதற்க்கு அந்த அதிகாரி “ என்ன கேசு போட போகிறாயா , உன்னால் முடிந்த்தை செய் , இனிமே இங்க வந்தா உள்ள உட்கார வைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்
என்னதான் செய்யவேண்டும் என நான் என் தம்பியிடம் கேட்டபோது அவன் சுற்றுலாதான் செல்கிறான் என்பதற்காக ஒரு கடிதம் வாங்கி வா என்று அவர்கள் சொன்னதாக சொன்னான்
என்ன கடிதம் என கேட்டேன் அதை என் தம்பிக்கு சொல்ல தெரியவில்லை, அது எதோ ஆங்கில வார்த்தை அதனால் எனக்கு புரியவில்லை என்று என் தம்பி சொன்னான் . அதனால் தான் அந்த அதிகாரியிடம் நானோ , என் மாமாவோ பேச விரும்பினோம் ஆனால் அவர் அனுமதிக்க வில்லை
கடைசியாக பயணம் மறுக்க பட்டு திருப்பி அனுப்ப பட்டார்
பயணச்சிட்டுக்கு கட்டிய பணம் வீண்
எனக்கு சில சந்தேகங்கள்
சரியான முறையில் சிங்கையில் இருந்து விசா , விமானசீட்டு எல்லாம் வாங்கி , முறைப்படி பயணம் செய்ய சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்தும் எங்கள் பயணம் ஏன் தடைப்பட்டது??????
சிங்ப்ப்பூரில் சுற்றி பார்த்துவிட்டு வரும் 14,15,16 தேதிகளில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து அதற்கான விசாவை எடுத்து இருந்தது குற்றமா??
சிங்கப்பூர் வரும் நபர் சுற்றுலாவுக்குதான் வருகிறார் என்பதை அவர் நிருபிக்க என்ன செய்யனும்??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை பற்றிய யார் கவலைபட வேண்டும்?? , சிங்கப்பூர் அரசா இல்லை இந்திய அரசா??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை சிங்கப்பூர் எப்படி ஏற்றுகொள்ளும் , சிங்கப்பூர் அதிகாரிகள் என்ன முட்டாள்களா?? இந்திய அதிகாரிகள் அறிவாளிகளா??
நேற்று இரவு 11 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை தொலைபேசியில் பேசிகொண்டே இருந்தேன் எந்த பயனும் இல்ல
15 ஆயிரம் ரூபாய் செலவில் பயணசீட்டு எடுத்து பயணம் ரத்து செய்யபட்டதால் எனக்கு பணம் இழப்பு ,பொருளாதார பிரச்சனையால் அதிகம் வேலை இல்லை, ஒவ்வொரு வெள்ளியையும் பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் எனக்கு இது பெரிய இழப்பு.
நான் இதற்க்கு என்ன செய்யலாம் ? சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா?
இரு குடிநுழைவு (இமிகிரேசன்)அதிகாரி கூடாது என்று சொல்லிவிட்டால் பயணம் செய்ய முடியாதா?
அவ்வளவு அதிகாரம் உண்டா அவர்களுக்கு?
எனக்கு குடிநுழைவு சட்டம் பற்றி அதிகம் தெரியாது , அதைபற்றி தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை எனக்கு பின்னூட்டம் இடுங்கள்
அதீதகோபத்தில் உள்ளதால் அதிகம் எழுத விரும்பவில்லை
மீண்டும் சந்திப்போம்
பிரியமுடன் பிரபு ........

Wednesday, January 20, 2010

புத்தகம்- நிலமெல்லாம் ரத்தம்(nilamellam raththam)



இது என் 50 வது
பதிவு







.
ஆசிரியர்: பா.ராகவன்
விலை: ரூ. 300

புத்தகம் படிப்பது எனக்கு பிடித்த விசயம் . பதிவர்கள் பலர் தான் படித்த புத்தகங்களை பற்றி எழுதுவது எனக்கு பிடிக்கும் , அதில் பல புத்தகங்களை குறித்து வைத்து வாங்கி படிப்பேன் . அதே போல நான் படித்த பின் அவற்றை பற்றி எழுதனும் என்று நீண்டநாளாக நினைத்துகொண்டிருக்கிறேன்.ஆனால் ஏனோ தட்டச்சு செய்து வைத்தவைகளை கூட பதிவிடாம
ல் விட்டுவிட்டேன்.இதுவே முதல் பதிவு
நிலமெல்லாம் ரத்தம்” – இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்ச
னை பற்றியது, இதை பற்றி நன்பர் ஒருவர் சொன்னார் ,பிறகு ஒருமுறை இந்தியா சென்ற எனது நன்பர் எனக்காக தேடி இந்த புத்தகம் வாங்கி வந்தார். படித்து வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை
அது ஏதோ இரு நாடுகளின் எல்லை பிரச்சனை என்று நினைப்பவர்களுக்கும், அப்பிரச்சனை பற்றி இதுவரை தெரியாதவர்களுக்கும்கூட தெளிவாக புரியும் வண்ணம் விளக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர். 703 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது . அதற்க்கு காரணம் உண்டு . இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை அரசியலும் மதமும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு ,இப்படி சேரக்கூடாத இரண்டு சேர்ந்ததால் வந்த விளைவு . எனவே இதை புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அந்த காலகட்ட அரசியல் நிலையையும் , மற்றும் இதில் சம்மந்தபட்ட யூத,கிருத்துவ,இஸ்லாமிய மதங்கள் பற்றியும் ஒரு தெளிவு வேண்டும். எனவே தான் ஆசிரியர் அந்த மதங்களின் வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் முடிந்த அளவுக்கு அலசியுள்ளார். அந்த மதங்களை பற்றி எனக்கு இதற்க்கு முன்பு அதிகம் தெரியாது

மோசோ தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்ட ,நீர் பிளந்து நடுவில் வெட்டாந்தரை உருவாக அதில் இஸ்ரவேல் புத்திரர்கள் நடந்து போனார்கள்என்று புராதன ஆவணத்தை சுட்டி காட்டி புத்தகம் தொடங்குகிறது .இப்படி புராதன காலம் ஆரம்பித்து கிட்டதட்ட 2005 வரையாக உலகின் பல முக்கிய நிகழ்வுகள் கொஞ்சமேனும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை ஒளிந்துள்ளது
அதை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் படிக்கவும்
ஒரு நாவலை போல (அவர் நாவலாசிரியரியரும்தான்) அழகாக சொல்லியுள்ளார்

இந்த புத்தகம் பற்றிய கிருஷ்ணா பிரபுவின் பதிவு http://online-tamil-books.blogspot.com/2009/03/nilamellam-raththam-pa-raghavan.html


மீண்டும் சந்திப்போம் பிரியமுடன் பிரபு ...

(ஓட்டு போட்டே ஆகனும்)



........................
........................
Hi priyamudanprabu,

Congrats!

Your story titled 'நிலமெல்லாம் ரத்தம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st January 2010 09:00:20 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172501

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish டீம்
................
................

ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி


.
.


Sunday, January 03, 2010

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?



கனவில் வந்த கம்பன்
காதல் கவிதை
ஒன்றுதா
பரிசு தருகிறேன் என்றான்


கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்

கம்பனை கவரவில்லை எதுவும்


கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்

கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்

கண்விழித்துp பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது

சுற்றும் முற்றும் பார்த்தேன்

காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்


............................
............................

சில
வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய வாழ்த்துமடலில் கவிதைகள் இல்லை என் வருத்த பட்ட சிநேகிதிக்கு அடுத்த வருட வாழ்த்துமடலில் நான் எழுதியது கீழேபோன வருட வாழ்த்தில் கவிதைகள் இல்லையென்று வருத்தப்பட்டாய், ஆகவே இந்த வருடம்...

வாழ்த்துக்
கவியெழுத
பேனா
எடுத்தேன்அது
எழுத
மறுத்துவிட்டது
கவிதையை
போற்றி கவிதையா? – என்று

தங்கத்
தமிழை
தட்டி
யழைத்தேன்அது
தடுமாறி
சொல்லியது
தன்னிடம்
வார்த்தைகள் ஏதுமில்லை! – என்று

உண்மை
மனமிருந்தால்
வாழ்த்து
சொல்ல
ஏட்டில்
எழுத்தெதற்க்கு
வெள்ளை
தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!

.......



.......


என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..


சும்மா போனா எப்பூடி?!?? ஓட்டு போடுங்க..........


.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...