Sunday, March 22, 2009

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்

(அக்கா குழந்தையுடன் என் அப்பா வரதராசு)




          தொடர்பதிவிற்க்கு என்னை அழைத்த கவின்- க்கு நன்றி

         எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்- யாரை பற்றி எழுதுவது என்று சிந்தித்து(?) கொண்டிருந்த சமயத்தில் என்னை தொடர்புகொண்டு ""என்னை பற்றி எழுத வேண்டாம்,எனக்கு புகழ்ச்சி பிடிக்காது "" என்று தாழ்மையுடன் கேட்டுகொண்ட "பதிவுலக சூப்பர் ஸ்டார்" " , "வருங்கால முதல்வர்" , "கருப்ப்பு சூரியன்" அண்ணன் ஜமால் அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)


          எனக்கு பிடித்தவர் மிகவும் கவர்ந்தவர் என் அப்பா
எங்கள் வாழ்வுக்காகவே வாழ்பவர், ஏழை குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் மூத்த மகனாக பிறந்து, 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்காமல் பத்து வயதில் இருந்தே விவசாய வேலைகள் செய்தார்,தான் படிக்காவிட்டாலும் தன் மகன் படிக்கனும் என்று விரும்பினார் , நான் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சென்ற போது கவுன்சிலிங்கில் வருடம் 2500என்றார்கள் , ஆனால் கல்லூரியில் 9000ஆயிரம் என்றார்கள்,அந்த நேரத்தில் தினம் ரூ70க்கு கூலிக்கு செல்லும் அவருக்கு இது பெரிய தொகை,எப்படி கட்டுவது என்று கலக்கத்தில் இருந்த போது "படிப்பு வேண்டாம் வேலைக்கு போகட்டும்" என்று பலரும் சொன்னபோது ,எப்பாடுபட்டாவது என் மகனை படிக்க வைப்பேன் என்று படிக்க வைத்தார். எங்களுக்கு சிறு கய்ச்சல் என்றாலும் மருத்துவமனைக்கு அழைக்கும் அவர் தனக்கு என்றால் ஒரு மாத்திரை போதும் என்பார்

          நான் ஆணாக இருப்பாதாலோ என்னவோ சிறு வயது முதல் இன்றுவரை என் தாயைவிட என்னை அதிகம் புரிந்து கொண்டவர் அவர்தான் , சில வீடுகளில் பார்த்துள்ளேன் , தந்தை வரும் சப்தம் கேட்டாலே வீடே அமைதியாகிவிட்டும் , ஆனால் நான் என் தந்தையிடம் பயந்ததில்லை , மரியாதைதான் உண்டு , அவர் வந்தால் உட்கார்ந்து இருக்கு நாற்க்காலியைவிட்டு எழுவது போன்ற போலி மரியாதையை நான் தந்ததில்லை அவரும் எதிர்பார்த்தது இல்லை

          காப்பியங்களிலும் சினிமாவிலும் தாய்க்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போற்றபடுகின்றார்கள். இளம் வயதில பல கனவுடன் இருக்கு ஒரு ஆண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு மீதிவாழ்நாள் முழுக்க தன் வாரிசுகளுக்காகவே உழைக்கும் தந்தையை அதிகம் போற்றியதில்லை


சிங்கப்பூர் வந்து சம்பாரித்து ஊரில் வீடுகட்டி முடித்த பின் ஒருநாள் என் தந்தையிடம் "உங்கள் நிறைவேறா ஆசை என்று ஏதாவது இர்ருந்தால் சொல்லுங்கள் அதை நான் செய்கிறேன் " என்று நான் கேட்க

" எனக்கு என்னப்பா வேனும் நீங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்" என்றார்

அதுதான் என் அப்பா...

 
 
என்றும்
பிரியமுடன் பிரபு . .
.
.



37 comments:

  1. பிரபு, வணக்கம்!

    பதிவுல வரிசைப் படுத்துவதிலும், தட்டச்சுப் பிழை சரிபார்க்குறதுக்கும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  2. நண்பா,
    நீ மிகவும் கொடுத்து வைத்தவண்
    நல்லதொறு பிதா,
    என்றும் தொடரட்டும்.........

    ReplyDelete
  3. தங்கள் அப்பாவைப் பற்றி அருமையான பதிவு.

    நானும் ஒரு பதிவு முன்பு இட்டேன்

    ReplyDelete
  4. அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)\\

    என்னா வில்லத்தனம் ...

    ReplyDelete
  5. என் வாழ்வில் நான் உணர்ந்த முதல் ஹீரோ என் தந்தையே

    அருமையான பதிவு பிரபு.

    பழமைபேசி அண்ணன் சொன்னதை கருத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  6. அப்பாவிற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் ...

    ReplyDelete
  7. தங்கள் தந்தையிடம் உள்ள தன்னலமற்ற குணம், ஒவ்வொரு தந்தையிடமும் வந்துவிட்டால், உலகத்தில் யாருக்கும் குறையிருக்காது. அனைவர் வாழ்வும் நிறைவாய் இருக்கும். தங்கள் தாய் தந்தைக்கும் தங்களுக்கும் எனது உள பூர்வமான வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகளிலே எனக்கு பிடித்த பதிவு இது தான். உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. . உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. நெகிழ்ந்து விட்டேன் பிரபு அவர்களே....

    ReplyDelete
  11. பிரபு, அப்பா கிட்ட கண்டிப்பா இந்த பதிவு காட்டுங்க....ரொம்ப சந்தோஷப் படுவாங்க

    இந்த தொடர் பதிவு நான் தன் தொடக்கி வச்சேன்...இந்த மாதிரியான உணர்வுப் பூர்வமான ஆத்மார்த்தமான பதிவுகள் வெளிய வருதுன்னு நினைச்சா சந்தோஷமா இருக்கு ..

    நிலாவுக்கு பிடிச்ச எங்க அம்மாவை பற்றி எழுதியதை பார்த்து என் அம்மாவின் கண்களில் கண்ணீர்...நம்மை பெத்தவங்களுக்கு நம்மால முடிஞ்சா சின்ன அன்பு பாராட்டல்...

    நிள்ளவின் பதிவு URL மாறி விட்டது....சரி செஞ்சுக்கோங்க...தயவு செய்து
    http://nilakaduthasi.blogspot.com/

    ReplyDelete
  12. Hi Prabhu ,

    //உங்கள் பதிவுகளிலே எனக்கு பிடித்த பதிவு இது தான். உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.//

    I second kunthavai..

    Appa kitta aduththa thadavai pesumbothu sollunga.. avarai ninaiththaal romba perumayaa irukkunnu ...convey my egards to him as well ..

    It is a pleasure to see u guys open up like this.. generally appa, ponnu ..amma , paiyan koottani thaan kelvi pattu irukken .. u are different..

    cheers
    janu

    ReplyDelete
  13. ////
    பிரபு, வணக்கம்!

    பதிவுல வரிசைப் படுத்துவதிலும், தட்டச்சுப் பிழை சரிபார்க்குறதுக்கும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி!
    ////

    நன்றி பழமைபேசி அண்ணா
    முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  14. ////
    k கூறியது...
    நண்பா,
    நீ மிகவும் கொடுத்து வைத்தவண்
    நல்லதொறு பிதா,
    என்றும் தொடரட்டும்.........

    ///

    நன்றி கே

    ReplyDelete
  15. ///
    கோவி.கண்ணன் கூறியது...
    தங்கள் அப்பாவைப் பற்றி அருமையான பதிவு.

    நானும் ஒரு பதிவு முன்பு இட்டேன்


    /////

    நன்றி கோவிகண்ணன் உங்கள் பதிவை படித்தேன்

    ReplyDelete
  16. ////
    நட்புடன் ஜமால் கூறியது...
    அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)\\

    என்னா வில்லத்தனம் ...

    /////


    இப்போவெல்லாம் ஹீரோ கொஞ்சம் வில்லத்தனம் பன்னனும் அப்பத்தான் படம் ஓடும்

    ReplyDelete
  17. ///
    நட்புடன் ஜமால் கூறியது...
    என் வாழ்வில் நான் உணர்ந்த முதல் ஹீரோ என் தந்தையே

    அருமையான பதிவு பிரபு.

    பழமைபேசி அண்ணன் சொன்னதை கருத்தில் கொள்ளவும்.

    ////


    நன்றி ஜமால்

    ReplyDelete
  18. ///
    ஆ.ஞானசேகரன் கூறியது...
    அப்பாவிற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் ...

    //


    நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  19. ///
    ஜோதிபாரதி கூறியது...
    தங்கள் தந்தையிடம் உள்ள தன்னலமற்ற குணம், ஒவ்வொரு தந்தையிடமும் வந்துவிட்டால், உலகத்தில் யாருக்கும் குறையிருக்காது. அனைவர் வாழ்வும் நிறைவாய் இருக்கும். தங்கள் தாய் தந்தைக்கும் தங்களுக்கும் எனது உள பூர்வமான வாழ்த்துகள்!

    ///


    வாழ்த்துக்கு நன்றி ஜோதிபாரதி

    ReplyDelete
  20. ///
    kunthavai கூறியது...
    உங்கள் பதிவுகளிலே எனக்கு பிடித்த பதிவு இது தான்.
    ///

    நன்றி

    ///
    உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.
    ////
    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  21. ///
    gayathri கூறியது...
    . உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.
    ///

    நன்றி காயத்ரி

    ReplyDelete
  22. ///
    coolzkarthi கூறியது...
    நெகிழ்ந்து விட்டேன் பிரபு அவர்களே....

    ///

    நன்றி கார்த்தி

    ReplyDelete
  23. ///
    Hi Prabhu ,

    //உங்கள் பதிவுகளிலே எனக்கு பிடித்த பதிவு இது தான். உங்கள் அன்பும் பாசமும் தான் உங்கள் அப்பா அம்மாவிற்க்கு சந்தோஷம் தரக் கூடியவை. இந்த அன்பான உறவு என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்.//

    I second kunthavai..

    Appa kitta aduththa thadavai pesumbothu sollunga.. avarai ninaiththaal romba perumayaa irukkunnu ...convey my egards to him as well ..

    It is a pleasure to see u guys open up like this.. generally appa, ponnu ..amma , paiyan koottani thaan kelvi pattu irukken .. u are different..

    cheers
    janu


    ///

    நன்றி ஜானு

    ReplyDelete
  24. ///
    நிலாவும் அம்மாவும் கூறியது...
    பிரபு, அப்பா கிட்ட கண்டிப்பா இந்த பதிவு காட்டுங்க....ரொம்ப சந்தோஷப் படுவாங்க

    இந்த தொடர் பதிவு நான் தன் தொடக்கி வச்சேன்...இந்த மாதிரியான உணர்வுப் பூர்வமான ஆத்மார்த்தமான பதிவுகள் வெளிய வருதுன்னு நினைச்சா சந்தோஷமா இருக்கு ..
    ////
    நீங்க தொடங்கியதா
    நல்லது

    ///
    நிலாவுக்கு பிடிச்ச எங்க அம்மாவை பற்றி எழுதியதை பார்த்து என் அம்மாவின் கண்களில் கண்ணீர்...நம்மை பெத்தவங்களுக்கு நம்மால முடிஞ்சா சின்ன அன்பு பாராட்டல்...

    ///
    ஆமாம்

    ///

    நிள்ளவின் பதிவு URL மாறி விட்டது....சரி செஞ்சுக்கோங்க...தயவு செய்து
    http://nilakaduthasi.blogspot.com/
    ///

    அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  25. என் வாழ்வில் நான் உணர்ந்த முதல் ஹீரோ என் தந்தையே

    அருமையான பதிவு பிரபு.

    ellarukum prabhu first hero avunga appa than

    ReplyDelete
  26. arumaiyana pathivu prabhu. supera irukku. unga appakitta kattunga. romba santhosham paduvar

    ReplyDelete
  27. மலர்விழிMarch 29, 2009 11:57 AM

    பிரபு...மனசு நெகிழ்ந்து போச்சு...நன்னாயிருக்கு...நானும் என் அப்பாகிட்ட நிறைவேறா ஆசை ஏதும் இருக்கானு கேட்க போறேன்...bye :)

    ReplyDelete
  28. என்னாச்சு பிரபு? ஏன் கொஞ்ச நாளா பதிவுகள் இல்லை?

    ReplyDelete
  29. கலக்கல் பாஸ்!
    தாமதத்திற்கு மன்னிக்கவும்!
    அருமையான பதிவு!
    நிலாவும் அம்மாவும் ஆரம்பித்து வைத்ததற்கு.. அர்தம் கிடைத்திருக்கிறது!
    உங்களையும், உங்க அப்பாவையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது!

    ReplyDelete
  30. ///
    sakthi said...
    என் வாழ்வில் நான் உணர்ந்த முதல் ஹீரோ என் தந்தையே

    அருமையான பதிவு பிரபு.

    ellarukum prabhu first hero avunga appa than
    ////


    நன்றி சக்தி

    ReplyDelete
  31. ///
    தாரணி பிரியா said...
    arumaiyana pathivu prabhu. supera irukku. unga appakitta kattunga. romba santhosham paduvar
    ////

    நன்றி தாரணி பிரியா

    ReplyDelete
  32. ///
    மலர்விழி said...
    பிரபு...மனசு நெகிழ்ந்து போச்சு...நன்னாயிருக்கு...
    ////
    நன்றி மலர்

    ////
    நானும் என் அப்பாகிட்ட நிறைவேறா ஆசை ஏதும் இருக்கானு கேட்க போறேன்...bye :)
    ////

    கேளுங்க

    ReplyDelete
  33. ///
    reena said...
    என்னாச்சு பிரபு? ஏன் கொஞ்ச நாளா பதிவுகள் இல்லை?
    ////

    புதிய வீட்டுக்கு மாறியுள்ளேன்
    10 நாட்களாக இணைய வசதி இல்லை
    மேலும் சில பிரச்சனைகள்
    எனவே பதிவிடவில்லை
    இன்னும் 2 வாரம் அப்படித்தான் இருக்கும்
    நன்றி ரீனா

    ReplyDelete
  34. ///
    கவின் said...
    கலக்கல் பாஸ்!
    தாமதத்திற்கு மன்னிக்கவும்!
    அருமையான பதிவு!
    நிலாவும் அம்மாவும் ஆரம்பித்து வைத்ததற்கு.. அர்தம் கிடைத்திருக்கிறது!
    உங்களையும், உங்க அப்பாவையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது!
    ///

    நன்றி கவின்
    பதிவிட சொன்னவ்வரே தாமதமாக வரலாமா??
    சரி விடுங்க

    ReplyDelete
  35. மணிகண்டபிரபு said...

    நல்ல பதிவு பிரபு.

    ////

    நன்றி

    ReplyDelete
  36. உங்கள் அப்பாவை பற்றிய இந்த பதிவினால், எங்களை நெகிழ வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...