Wednesday, February 18, 2009

யூத்புல் விகடனில் என் கவிதை........






வாங்க மக்களே வாங்க

நான் சொல்லப்போறத அமைதியா கேளுங்க

அதாவது நான் எழுதின கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளியாகியுள்ளது


இங்கே சென்று பார்க்க



இன்று மட்டும் இங்கே



இது ஏற்கனவே என் பதிவில்
(எதுக்கு சரண்யா படம்???.........
ஹி ஹி சும்மாத்தான்..
படிக்கவர்ர யூத் எல்லாம் பார்த்துட்டு போகட்டும் )





Monday, February 16, 2009

வாய்கால்

..16/02/09…. 4 am

வாய்கால் கரைமேல
வயசுபொண்ணு நிக்கையில
தன்ணிக்குள்ள மீனுக்கெல்லாம்
காய்ச்சல் வந்து கஷ்டப்படும்
தரையில நிக்குற தாமரையே
தண்ணிக்குள்ள வாயேண்டி
சாதி சண்டையில சாவு பல
பார்த்த வாய்கால் !
மதச் சண்டையில் மரித்த பிணங்களை
சுமந்த வாய்கால் !
கட்சி சண்டையில காவு கொடுத்ததால்
சிவந்த வாய்கால் !
கங்கையே வந்து கலந்தாலும் - இதன்
கறைதீர்ந்து போகாது..
கவிதையே... நீ குளிச்சு - இதை
கங்கையா மாத்தேன்டி
.....
மனசாட்சி : ஏற்க்கனவே "கூவமும் குளியலறையும்" படிச்சுட்டு குந்தவை அக்கா கும்மியடுச்சாங்க இப்ப என்ன செய்ய போறாங்களோ..... ம்ம்ம்.....ஆரம்பிங்க.......
.....

Sunday, February 01, 2009

சேலையே ! சேலையே !. ---- 02/02/2009.... 1.04 am

.....



சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

என்னவளை
பத்திரமா பாத்துக்கோ....
வேர்வைத்துளி வெளிவந்தாலும்
வீணாகாம சேத்துக்கோ....

புடவைகட்டிய பூங்குயில் - இவள்
பூந்தோட்டம் போனால்...
பூக்களெல்லாம் பொறாமையில் பொங்கும்
இவளுக்கு
புடவையாக மாட்டோமா ? - என்று
புலம்பி ஏங்கும்........
முந்தானை நுனியை
முள்ளால் குத்தி - தன்
ஏக்கத்தைத்  தனிக்கும்
சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

மூடாத இடம் பார்த்தே
மூச்சு முட்டி - நா(ன்) நின்னேன்
முழுசா கட்டிக்கொண்ட
மச்சமுள்ள சேலையே

அவ மேனி ரகசியத்த
யாருக்கும் சொல்லாதே
காத்தே கேட்டாளும்
கடுகளவும் காட்டாதே....!
...................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1020

..............
படிச்சாச்சா.......
பிரியாமணி-யை பார்த்து ஜொள்ளு விட்டாச்சா....
சரி மரியாதையா ஓட்டு போடுங்க
..............

Saturday, January 24, 2009

காதல் மழை.......----- 24 / 01/2009-- 8.45 pm

...



" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "

" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "

" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "

" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......

Monday, January 19, 2009

மழை நேரம்.........................19/01/2009...




இது மயிலடும் நேரம்..



கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....


மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்


மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....


தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....


வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட


மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்




http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1536




You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...