Tuesday, February 01, 2011

பகிர்வு-1-இரண்டு கவிதைகள்


விதி

அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்கய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

...... காலப்ரியாவின் கவிதை

***

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள்நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக்கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொட்டராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும் ?

---ஞானக்கூத்தன்





.

4 comments:

  1. அடேங்கப்பா.... பகிர்வுக்கு நன்றிப்பா....

    ReplyDelete
  2. கலாப்ரியாவின் கவிதை விதியை சொல்கிறது..

    நாய்.. குணத்தை சொல்கிறது..

    ReplyDelete
  3. Chitra said...
    அடேங்கப்பா.... பகிர்வுக்கு நன்றிப்பா....

    ///
    நன்றிப்பா....

    ReplyDelete
  4. தமிழரசி said...
    கலாப்ரியாவின் கவிதை விதியை சொல்கிறது..

    நாய்.. குணத்தை சொல்கிறது..

    ///\\

    yes

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...