Tuesday, August 28, 2012

பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)


                 1. 2004         


       2004 ஆகஸ்ட் 28 தேதி  காலையில் முதன் முதலாய் சிங்கப்பூரில் வந்து இறங்கினேன்(வேலைக்கான விசாவில்), அப்போ 20 வயசு. 

         2001-ல் டிப்ளமோ முடித்து பின் பெங்களூரில் இரண்டு வருடம் குப்பை கொட்டிய  பின் (ஏன் உங்க ஊருல குப்பை கொட்ட இடமில்லையான்னு கேட்கப்பிடாது  ஆமா) ஒரு முகவர் மூலம் சிங்கை செல்லும்வாய்ப்பு வந்தது. அதே முகவர் மூலம்தான் என் நண்பர்(கார்த்திக்) சிங்கைக்கு சென்றார் என்பதால் நானும் சரியென்று பணம் செலுத்தித் தயாரானேன். கொஞ்சம் பிரட்சனைக்கு பின் 2004 ஆகஸ்ட்-27 ஆம் தேதி இரவு சிங்கை பயணம் உறுதியானது. அதற்காக சென்று சென்னையில் தங்கியிருந்தபோது அந்த முகவர் "நீங்களே  விமானச்  சீட்டு எடுக்கவும் பின்னர் சிங்கையில் வந்தவுடன் அந்த பணத்தை தான் தருகிறேன்"என கூறிவிட்டார்.என்னோடு பாண்டிச்சேரியை சேர்ந்த சசிக்குமார் என்ற நண்பரும் சிங்கை செல்வதற்காக அதே முகவர்  மூலம் வந்திருந்தார். அப்போது எங்களிடம் கையில் இருந்த எல்லா பணத்தையும் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு விமானநிலையம் வந்துவிட்டோம். எல்லாம் முடிந்து உடன்வந்திருந்த அப்பா,மாமா இருவரிடமும் விடைபெற்று செல்லும் நேரத்தில் என் மாமா தன் பட்டாபட்டி டாயரில் இருந்து 10 ,௦௦௦  ரூபாய் யை எடுத்து என் கையில் கொடுத்தார். 

 2. 2006
          சிங்கப்பூர்  பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, சில மாதங்களுக்கு முன் அங்கு வேலைக்குச் சென்ற நண்பர் கார்த்திக்- தவிர வேறு யாரையும் தெரியாது , 
என்ன மொழி? 
எப்படிப்  பட்ட மக்கள்?
வாழும் முறை என்ன ? என எதுவும் தெரியாது. 
முகவருக்கு செலுத்திய பணம் என்பது எங்களுக்கு மிக மிக  பெரிய தொகை  கிட்டதட்ட முழுத்தொகையும் என் உறவுகள் கொடுத்ததுதான் அதில் எங்கள் பங்கு வெறும்10 %  மட்டுமே. எல்லாம் என் மீதான அவர்களின் நம்பிக்கை. எந்த பிரச்சனையும் இன்றி வேலை செய்து கடனை அடைக்கணும். வீட்டு அரவணைப்பிலேயே  வளர்ந்தவன்  நான் பெங்களூரில் வேலை பார்த்த போதே வீடு/ஊரு நினைவுகள் வாட்டி எடுக்கும் அப்படி இருக்க வெகுதொலைவில்  வெளிநாட்டில் அடுத்த 2 வருடங்கள்  கழிக்கணும் இப்படியாக பல எண்ணங்களுடன்  விமானப் பயணம்  முடிந்து சிங்கப்பூரில் வந்து இறங்கினேன். எங்களை வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்து செல்ல முகவர் வந்து இருந்தார்  அவர்களோடு ஒரு டக்ஸ்யில் புறப்பட்டோம், "சிங்கப்பூர்  உங்களை அன்புடன் வரவேற்கிறது" - என்று தமிழில் எழுதியிருந்ததை படித்தபடி விமான நிலையம் விட்டு வெளியேறினோம்.


3.2007
          சாலையின் இருபக்கமும் பச்சை பசேல் என மரங்கள், அழகான சுத்தமான சாலைகள், வாகனம் வழுக்கிக்கொண்டு செல்வது போல இருந்தது. விரைவுச்சாலையை கடந்து குடியிருப்புப்  பகுதிக்குள் வாகனம் நுழைந்த போது ஏதோ கட்டிடக் காட்டுக்குள்  வந்த உணர்வு. அதே முகவர் மூலம்  ஏற்க்கனவே இங்கே வேலைக்கு வந்த சிலர் தங்கியிருக்கு ஒரு வீட்டில் எங்கள் பெட்டியை வைத்துவிட்டு  பிறகு நாங்கள் வேலை செய்யப்போகும் இடத்தில் எங்களை அறிமுகம் செய்ய அவர் அழைத்துச் சென்றார். அன்று சனிக்கிழமை என்பதால் அறிமுகம் மட்டுமே,அது முடிந்ததும் எங்கள் கையில் ஆளுக்கு 10 வெள்ளி  கொடுத்துவிட்டு விடைபெற்றுவிட்டார்  அந்த முகவர்.அதைவைத்து ஒருநாளுக்கு சாப்பிட மட்டுமே முடியும்.

3.2009
          சிங்கப்பூரில் முதலில் நாங்க தங்கியது உட்லேண்ட்ஸ்(woodlands) பகுதிதான். எங்களை தங்கவைத்து விட்டுச்  சென்ற வீட்டில் இருந்தவர்கள்  அன்று தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வந்தபின்தான் தெரிந்தது அங்கே ஏற்க்கனவே  அளவுக்கு அதிகமாக ஆட்கள் தங்கியிருப்பதால் நாங்கள் வேறு வீட்டில் சென்று தங்க வேண்டும் என்று. அப்போது என்னிடம் என் மாமா கொடுத்திருந்த பத்தாயிரம் இந்திய ரூபாயை சிங்கை வெள்ளியாக மாற்றிய பணம் மட்டுமே இருந்தது.அந்தநேரத்தில் நாங்கள் வேலை செய்த இடத்தில் உடன்பணிபுரியும் அசோக் என்ற நண்பர்  "பெட்டியை எடுத்துகிட்டு  எங்க வீட்டுக்கு  வாங்கடா " என்று உரிமையோடு அழைத்தார். எதையும் எதிர்பார்க்காமல் எங்களை அங்கே 15 நாட்கள்  தங்கவைத்ததோடு  பிறகு வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவும் உதவி செய்தார். இதை என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னபோது "எப்பவுமே நம்ம சாமி உன் கூட வரும்டா.." என்று சொன்னார். ஆமாம் ஆமாம் இப்படியும் சில மனிதர்கள் உடன் வந்து இருக்கிறார்கள்
 
4.2010
          அந்த 2004 ஆம் ஆண்டில், 10 சிங்கப்பூர் வெள்ளிக்கு 30 நிமிடங்கள் ஊருக்கு அழைத்துத் தொலைபேச முடியும்  இப்போது அதே தொகைக்கு கிட்டதட்ட 11 மணி நேரம் பேசலாம்.(இங்கே எந்த "ராசா"-வும் அமைச்சராக இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடணும்..:)) . அன்று ஒரு சிங்கை வெள்ளி  26 இந்திய ரூபாய்  என்று நினைக்கிக்றேன் இன்று 44 இந்திய ரூபாய்.இப்படி எவ்வளவோ மாற்றம்.. என்னுள்ளும் கூட..:) . வழக்கமாக புதுவேலையிடத்தில் வரும் சிக்கல்கள்  போல் இங்கேயும் சில மாதங்க்கள்  சில சிக்கல்கள் இருந்தன பின்  இடமும்/வேலையும் பழகிப்போனது. அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன்  நெருங்கிப்பழக மாட்டேன்  எனவே  மிகக் குறுகிய நட்பு வட்டம்தான்,குடிப்பழக்கம்  உள்ளவர்களுக்கு பிரட்சனை இல்லை  ஒரு அறைக்கு புதிதாய் வந்தவுடன் அன்று இரவு ஒன்றாய் குடித்தாலே  போதும் அடுத்தநாள் முதல் மாமன் மச்சான் ஆகிவிடுவார்கள் நமக்கு அந்தத் தகுதியும் இல்ல..:). பின்னர்  உட்லேண்ட்ஸ் பகுதி நூலகம் எனக்கு நல்ல துணையாக இருந்தது, நிறைய புத்தகங்கள் நல்ல சுழல் வார இறுதி நாட்களை கழிக்க அதுவே எனக்கு நல்ல இடமாக இருந்தது .


(சசிகுமார்)

         கிரிக்கெட்  என் விருப்ப விளையாட்டு, அதென்னவோ கிரிக்கெட்  விளையாடும் போது எல்லாம் மறந்து முழு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு கார்த்திக் என்ற நண்பன் மட்டுமே தெரியும் என்ற நிலையில் சிங்கப்பூர் வந்த எனக்கு நிறைய நட்புகளை தந்ததில் இந்த கிரிக்கெட் விளையாடுக்கும் முக்கிய பங்கு. சதிஸ்,பிரபு,முருகானந்தம்,குமார்,கண்ணன்,ராம்கி,சுரேஷ் என கிரிக்கெட் மூலம் நிறைய நட்புகள் கிடைத்து ஊரு/உறவு பிரிவை கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. விடுமுறை நாட்கள் என்றால் காலையில் துவங்கி சூரியன் மறையும் வரை ஒரே ஆட்டம்தான்..:)


          இங்கே வாடகை வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கும். 5 -6 பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்வோம். எல்லா வீடுகளும் ஒருவருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  எடுப்போம் பலவீடுகள் ஒருவருடகாலம் முடிந்ததும் எதாவது காரணம் சொல்லி காலி செய்ய சொல்லிவிடுவார்கள் எனவே எட்டு ஆண்டுகளில் பல வீடுகள்  மாறியாச்சு, ஒவ்வொரு முறையும் மாறும் போது ஓன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அடுத்த வீட்டுக்கு ஒன்றாக செல்வோம் இப்படியாக இத்தனை ஆண்டுகளில் பலருடன் தங்கி பேசி பழகும் வாய்ப்பு கிடைத்து நல்ல அனுபவம்.

வலைப்பதிவுகள்  :  2008 ஆம் ஒரு சுபயோக சுபதினத்தில் இணையத்தில் எதையோ தேடியபோது வலைப்பதிவுகள் அறிமுகமானது விளையாட்டாக நானும் இந்த பக்கத்தை துவங்கி "ஆனாலும் காதலிக்கிறோம்" என்ற ஒரு பதிவிட்டேன்.பின்னர் வீட்டில் இருக்கும் எல்லா நேரங்களிலும் இணையம்தான். ஒரு நாள் கோவி கண்ணன் அண்ணனிடம் இருந்து  ஒரு பின்னுட்டம் வந்தது, பின் மின்னஞ்சல் மூலம் கைபேசி எண் கொடுத்து சிங்கை பதிவர் சந்திப்புக்கு வருமாறு அழைத்தார், யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் "என் தம்பி மாதிரி " என்று சொல்லும் கோவிகண்ணன்  அண்ணன் குழலி, ஜோதிபாரதி, பேசிகிட்டு இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம் என்று சொல்லும் வகையில் பேசும் ரோச்விக் அண்ணன், பார்த்த அன்றே பல நாள் பழகியவர் போல் பேசிய நட்புடன் ஜமால், நிசமா நல்லவன்(?) இப்படியாக சிங்கை பதிவர் நண்பர்கள் பலரின் நட்பும் கிடைத்து (நான் தனியாள் இல்ல ஆமா....:)).

(கோவி-குழலி)



          மொழி,வாழும் முறை, சுதந்திரம்,பாதுகாப்பு என்று எதுவும் இந்தியாவில் வேறு ஊரு/மாநிலங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கே  முழுதாய் கிடைக்குமா என்ற உறுதி இல்லாத நிலையில் ஒரு அந்நிய நாட்டில்,பல மொழி/கலாசார  மக்கள் வாழும் இடத்தில் எனக்கு எல்லாம் முழுதாய் கிடைத்தது என்றே சொல்வேன்.இன்று என் மனைவியையும் அழைத்துவந்து இங்கே வாழும் உறுதியையும் நம்பிக்கையும் இந்த சிங்கப்பூர் எனக்கு கொடுத்துள்ளது.ஏதொ  இப்போதுதான் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல இருக்கு ஆனால்  இன்றோடு சிங்கை வந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்கள்  பழைய கடன்கள் அடைத்து, குடிசையை மாடி வீடாக்கி பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஒரு நிலையையும்,அமைதியான பாதுகாப்பான ஒரு வாழ்வையும் இன்று வரை தந்துகொண்டிருக்கும் சிங்கைக்கு என் வணக்கங்களும்/நன்றிகளும் .


6.2012


பிரியமுடன் பிரபு ..:) 



சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்-2012-புகைப்படங்கள் 

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2011- புகைப்படங்கள்  பார்க்க
 
.

Wednesday, August 15, 2012

சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2012- புகைப்படங்கள்-singapore National Day-2012-photos

2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2011- புகைப்படங்கள்  பார்க்க

Aug -9 - 2012


1.

2.

3.

4.

5.

6.

7.

8.
9.

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

21.

22.

23.

24.


பிரியமுடன் பிரபு......

Tuesday, July 17, 2012

ஷாக் ! - திண்ணை - ஞாநி (மின்வெட்டு காரணங்கள்)

http://gnani.net/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/

ஷாக் ....

இந்த முறை மின் கட்டண அட்டைகளில் எழுதப்படும் தொகைகளைப் பார்க்கும் எவருக்கும் நிச்சயம் ஷாக் அடிக்கும். இதுவரை 800 ரூபாய் அளவில் கட்டணம் செலுத்தி வந்த ஒரு நண்பருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு பில் வந்திருக்கிறது. அதுவும் தினசரி இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தபோதே இந்த பில்.

கடந்த ஒரு வருடமாகத் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு மின்வெட்டை அனுபவித்தோம். கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்துவிட்டால் மின் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் தலையில் திணிக்க இது வசதியாக இருந்தது.

உண்மையில் மின்வெட்டு கொஞ்சம் தணிவதற்கு உதவியது காற்றாலைகளிலிருந்து கிடைத்த மின்சாரம்தான். கூடங்குளம் சட்டத் தடைகளைக் கடந்து இயங்கத் தொடங்கவே டிசம்பர் ஆகலாம்.

ஆனால் தமிழ்நாட்டின் அசல் பிரச்சினை என்ன ?

மின் கட்டணங்களை உயர்த்தி அறிவிக்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா மின்வாரியம் திவாலாகாமல் இருக்க வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை என்றார். வாரியம் ஏன் திவாலாயிற்று என்பதற்கு அவர் சில காரணங்களைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படாமல் இருந்ததற்கும் முந்தைய ஆட்சி மீது சில குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். அதற்கு கருணாநிதி பதில் குற்றச்சாட்டுகளுடன் அறிக்கைகள் வெளியிட்டார்.

தி.மு.க, அ.தி.முக ஆட்சியாளர்களின் பரஸ்பர பழி சுமத்தலை ஒதுக்கிவைத்துவிட்டு அசல் உண்மை என்ன என்று தேடுவது அவசியம்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஆய்வை மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் சா.காந்தி வெளியிட்டிருக்கிறார். மே பதினேழு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், ஆழி பப்ளிஷர்ஸ் சேர்ந்து வெளியிட்டுள்ள அவரது நூல் “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” ஒவ்வொரு தமிழரும் படித்தாகவேண்டிய நூல். தமிழ்நாட்டின் முக்கிய சிந்தனையாளர்களான நம்மாழ்வார், எஸ்.என்.நாகராஜன், தொ.பரமசிவன், எஸ்.பி உதயகுமார் ஆகியோர் சிறப்பான முன்னுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பொறியாளர் காந்தி 37 வருட காலம் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றியவர் மட்டுமல்ல. பொறியாளர் சங்கத்தின் தலைவராகவும் அரசுகள் மின்வாரியம் தொடர்பாக எடுக்கும் தவறான் முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவராகவும், நீதிமன்றம் சென்று வழக்காடி வருபவராகவும் விளங்குபவர்.

அரசு ஆவணங்கள், மின் வாரிய ஆவணங்கள் முதலியவற்றின் ஆதாரங்களுடன் காந்தி எடுத்துவைக்கும் தகவல்கள் நிஜமாகவே ஷாக் அடிக்கின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் 1990 முதல் இன்று வரை எப்படி மின்சாரத் துறையை சீரழித்திருக்கின்றன என்று காந்தி தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவர் தெரிவிக்கும் தகவல்களிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. எண்பதுகளில் அரசுகள் எடுத்த நடவடிக்கைகளினால் அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்திதான் 90 முதல் 2000 வரை அதிகரித்த மின் தேவையை தாக்குப் பிடிக்க உதவியது. ஆனால் 90களில் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காதன் விளைவை 2000க்குப் பிறகு சந்திக்க வேண்டி வந்தது.

2. மின்சாரம் மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசை மீறி மாநில அரசு இதில் எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது.

3.இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் மத்திய அரசு புதிய மின் உற்பத்திக்காக மூலதன ஒதுக்கீடு செய்துவந்தது. 90களில் தாராளமயம், தனியார்மயம் தொடங்கியதும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மூலதன ஒதுக்கீடு என்பதே ரத்து செய்யப்பட்டது.

4.பொதுத்துறை நிறுவனங்களும் மின்வாரியங்களும் புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இனி தனியார் நிறுவனங்களே மின் உற்பத்தியில் ஈடுபடவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

5. தனியார் கம்பெனிகள் தயாரிக்கும் மின்சாரத்தை எந்த விலையில் மாநில மின் வாரியங்கள் வாங்க வேண்டும் என்பதற்கான விதிகளை மத்திய அரசு தீர்மானித்தது.

6. விசித்திரமாக மின்சாரம் தயாரிப்பதற்கு ஆகும் செலவின் அடிப்படையில் மட்டும் விலை நிர்ணயிக்கப்படவில்லை. அது ஒரு அடிப்படை. இன்னொரு அடிப்படை, தனியார் கம்பெனி மின் நிலையம் தொடங்குவதற்கு போட்ட முதலீட்டுச் செலவைத் திரும்ப எடுப்பதற்காகவும் ஒரு தொகையை மின்வாரியங்கள் விலையில் சேர்த்துத் தரவேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயித்தது.

7. இதன்படி மின் நிலையத்துக்கு தனியார் போட்ட மூலதனத்தில் 24 சதவிகித அளவுக்கான தொகையை ஒவ்வோராண்டும் மின் வாரியம் கொடுக்கவேண்டும். நான்காண்டுகளில் முழு மூலதனத்தையும் கொடுத்துவிடவேண்டும். இது தவிர மின்சாரத்துக்கு விலைக் கட்டணமும் உண்டு.

8. ஒவ்வோராண்டும் மின்சார தேவை என்பது எட்டு சதவிகிதம் வரை அதிகரிக்கும். ஆனால் 2008ல் இது 13 சதமாகிவிட்டது. காரணம் ஏ.சி பெட்டிகளும் டி.வி.பெட்டிகளும் தமிழகத்தில் திடீரென அதிகரித்ததுதான்.

9. தனியாரிடம் எக்கச்சக்க விலையில் மின்சாரம் வாங்கவேண்டியிருந்ததால், தானே சில மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்காக நிதிக்கடன் வாங்கியிருந்த மின்வாரியம் அதையும் தனியாருக்கு தருவதில் செலவழித்தது.

10. தமிழக அரசு 1996-98ல் ஆறு தனியார் கம்பெனிகளுடன் மின்சார தயாரிப்புக்கு ஒப்பந்தம் போட்டது. இதில் விடியோகான் நிறுவனம் மட்டும் எந்த வேலையையும் தொடங்கவில்லை என்பதால் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ரத்து செய்ததால் தனக்கு நஷ்டம் என்று வீடியோகான் வழக்கு தொடுத்து 150 கோடி ரூபாயை அரசிடம் நஷ்ட ஈடாகப் பெற்றது. (வீடியோ கானுக்காக வாதாடியவர் ப.சிதம்பரம் !)

11. மின் தயாரிப்புக்கு தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுவது நிலக்கரிதான். டன்னுக்கு 900 ரூபாய் விலையில் வாங்கும் நிலக்கரியை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ரயிலில் எடுத்துச் செல்ல டன்னுக்கு 1600 ரூபாய் கட்ட வேண்டும். இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி சுரங்ககத்தின் வாயிலிலேயே அமைக்கப்பட இருந்த புதிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அரசு தமிழக மின்வாரியத்துக்குத் தராமல் தனியார் கம்பெனிக்குத் தந்தது. இதனால் மின்வாரியத்துக்கு 600 கோடி ரூபாய்கள் இழப்பு.

12.கிழக்கு மாவட்டங்களில் கிடைத்த இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய மின்வாரியத்துக்கு 396 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது ஆனால் மத்திய அரசு ஒன்பது தனியார் நிறுவனங்களுக்கு 430 மெகாவாட் உற்பத்திக்கு அனுமதி கொடுத்தது.

13. மத்திய அரசின் தவறான கொள்கையால், தமிழகத்தில் ஐந்து தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் மின்வாரியம் ஒவ்வொரு வருடமும் 1006 கோடி ரூபாயை மூலதன திருப்பலாகச் செலுத்தியது. மின் உற்பத்தி அளவோ மொத்தம் 988 மெகாவாட்தான். இந்தத் தொகையை மின்வாரியம் தானே முதலீடு செய்திருந்தால், வருடத்துக்கு 750 மெகாவாட் தரும் மின் நிலையங்களை நிறுவியிருக்கலாம். பத்தாண்டுகளில் 7500 மெகாவாட் உற்பத்தித்திறன் ஏற்பட்டிருக்கும்.

14. தனியாருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மின்வாரியம் கொடுத்த விலைகள் அபத்தமானவை. ஒரே நேரத்தில் , ஒவ்வொரு கம்பெனியிடம் ஒரு விலை. ஐந்து கம்பெனிகளிடம் ரூ3.52 முதல் ரூ 17/78 வரை கொடுத்த மின்வாரியம் அதே சமயம் வேறு இரு கம்பெனிகளிடம் ரூ2.31, ரூ2.58 என்று வாங்கியிருக்கிறது.

15. 2011 மார்ச் முதல் மே வரை மின்வாரியம் தனியாரிடம் தினசரி ஒரு கோடி யூனிட்டுகளை யூனிட் தலா 12 முதல் 14 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. யூனிட் ரூ4.50க்கு மேல் வாங்கினாலே மின்வாரியம் திவாலாகிவிடும் என்பதே நிஜம். மின்வாரியத்தின் எல்லா நஷ்டமும் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்த மின்சாரத்தினால்தான்.

இந்த 15 தகவல்களே பெரும் ஷாக் அடிப்பவை. காந்தி எழுதியிருக்கும் நூலில் இன்னும் எண்ணற்ற ஷாக்குகள் காத்திருக்கின்றன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பதே எப்படி மக்கள் விரோதமான அமைப்பாகவும் மின்வாரியத்தையே குழி தோண்டி புதைக்கும் கருவியாகவும் இருக்கிறது என்பதை பல சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறார். ஆணையம் தொடர்பான பல வழக்குகளில் எப்படி தனியாருக்கு சாதகமாகவும் மக்களுக்கு விரோதமாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று விவரித்திருக்கிறார்.

இந்த சீரழிவிலிருந்து மின் வாரியத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வழி என்ன என்றும் காந்தி நூலில் தெரிவித்திருக்கிறார். சிக்கலான விஷயமானாலும் எதையும் ஆழ்ந்து படிப்பவர், உடனே கிரகித்துக் கொள்ளும் திறமையுடையவர் என்று புகழப்படும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த நூலை நான் பரிந்துரைக்கிறேன். படித்து முடித்தபின் இதில் கூறப்பட்டிருக்கும் நியாயங்கள் தொடர்பாக அவர் அரசு என்ன செய்யப்போகிறது என்று அவர் அறிவிப்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

http://gnani.net/%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/
கல்கி 30.6.2012

Monday, July 09, 2012

காய்கறிகள் தோட்டத்துக்குக் கத்திரிக்கா ராசாவாம்...(srija)


என் அக்கா மகள் தன் பள்ளியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக தன்னை தயார் செய்துகொண்டிருந்தபோது நான் எடுத்த காணொளி . பள்ளி ஆசிரியை எப்படி சொல்லித்தந்தாரோ அதேபோலவும் கூடவே தன குறும்புத் தனத்தோடும் அவள் பாடுவது அவ்வளவு அழகு . கேமராவை வீட்டில் இருக்கும் டீவியோடு இணைத்திருந்தேன் எனவே தன உருவத்தை அதில் பார்த்துக்கொண்டே பாடினாள் , தான் வார்த்தைகளை மறக்கும் பொது டீவியில் தெரியும் தன்  உருவத்தைப்  பார்த்து பள்ளியில் ஆசிரியை மிரட்டுவது போல தன்னை தானே மிரட்டிகொண்டாள். இணைப்பும் பாடலும்..
part-1

part-1

காய்கறிகள் தோட்டத்துக்குக் கத்திரிக்கா ராசாவாம் -அந்தக்
கத்திரிக்காராசாவுக்கு கல்யாணம்தான் பேசாவாம் 

பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
அடுத்தத் தெரு மார்கெட்டுல வந்து நின்னாராம் 
ராசா வந்து நின்னாராம் 
சொகுசா வந்து நின்னாராம் 

பச்ச மிளகா பொண்ண பார்த்துபுட்டாராம் -அது
பார்க்க நல்லா அழகுதான்னு நினைச்சுகிட்டாராம் 
ராசா நினைச்சுகிட்டாராம் 
மனசுல நினைச்சுகிட்டாராம் 

கிட்டவந்து தொட்டுப்  பார்த்து ஆஹா என்றாராம்
கிட்டவந்து தொட்டுப்  பார்த்து ஆஹா என்றாராம் 
வாய்வரை வைத்து காரத்தால துடிச்சுபுட்டாராம் 
ராஜா துடிச்சு புட்டாராம் 
ரொம்பவும் துடிச்சுபுட்டாராம் 
பாவம் துடுச்சுபுட்டாராம் 

குட்டி குட்டி சுண்டக்கா கூட்டம் கூட்டமா-அது
குமுஞ்சுகெடந்த அழகபார்த்து சொக்கிபுட்டாராம் 
ராசா சொக்கி புட்டாராம் 
அதுல ஒரு சுண்டக்காய அழைச்சுகிட்டாராம் 
ஆவணியில் கலியாணத்த முடிச்சுகிட்டாராம் 
ராசா முடிச்சுகிட்டாராம் 
ஜோரா முடிச்சுகிட்டாராம்...
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ


*பிடித்திருந்தால்  மற்றவர்களுடன்  பகிர்ந்துகொள்ளவும்
மீண்டும் சிந்திப்போம்
பிரியமுடன் பிரபு ..

Monday, July 02, 2012

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகைப்படங்கள்(Singapore Zoological Garden photos) -part2


1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

18.



*சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகைப்படங்கள்(Singapore Zoological Garden photos) -part1

*  சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள் -(BIRD PARK SINGAPORE) -Part-1

*சிங்கப்பூர் பறவைகள் பூங்கா புகைப்படங்கள்(SINGAPORE BIRD PARK PHOTOS) -Part-2

*Singapore MacRitchie Reservoir Park photos -Part1 (புகைப்படங்கள்)

மீண்டும் சிந்திப்போம்
பிரியமுடன் பிரபு ..

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...