Sunday, March 22, 2009

எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்

(அக்கா குழந்தையுடன் என் அப்பா வரதராசு)




          தொடர்பதிவிற்க்கு என்னை அழைத்த கவின்- க்கு நன்றி

         எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்- யாரை பற்றி எழுதுவது என்று சிந்தித்து(?) கொண்டிருந்த சமயத்தில் என்னை தொடர்புகொண்டு ""என்னை பற்றி எழுத வேண்டாம்,எனக்கு புகழ்ச்சி பிடிக்காது "" என்று தாழ்மையுடன் கேட்டுகொண்ட "பதிவுலக சூப்பர் ஸ்டார்" " , "வருங்கால முதல்வர்" , "கருப்ப்பு சூரியன்" அண்ணன் ஜமால் அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)


          எனக்கு பிடித்தவர் மிகவும் கவர்ந்தவர் என் அப்பா
எங்கள் வாழ்வுக்காகவே வாழ்பவர், ஏழை குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் மூத்த மகனாக பிறந்து, 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்காமல் பத்து வயதில் இருந்தே விவசாய வேலைகள் செய்தார்,தான் படிக்காவிட்டாலும் தன் மகன் படிக்கனும் என்று விரும்பினார் , நான் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சென்ற போது கவுன்சிலிங்கில் வருடம் 2500என்றார்கள் , ஆனால் கல்லூரியில் 9000ஆயிரம் என்றார்கள்,அந்த நேரத்தில் தினம் ரூ70க்கு கூலிக்கு செல்லும் அவருக்கு இது பெரிய தொகை,எப்படி கட்டுவது என்று கலக்கத்தில் இருந்த போது "படிப்பு வேண்டாம் வேலைக்கு போகட்டும்" என்று பலரும் சொன்னபோது ,எப்பாடுபட்டாவது என் மகனை படிக்க வைப்பேன் என்று படிக்க வைத்தார். எங்களுக்கு சிறு கய்ச்சல் என்றாலும் மருத்துவமனைக்கு அழைக்கும் அவர் தனக்கு என்றால் ஒரு மாத்திரை போதும் என்பார்

          நான் ஆணாக இருப்பாதாலோ என்னவோ சிறு வயது முதல் இன்றுவரை என் தாயைவிட என்னை அதிகம் புரிந்து கொண்டவர் அவர்தான் , சில வீடுகளில் பார்த்துள்ளேன் , தந்தை வரும் சப்தம் கேட்டாலே வீடே அமைதியாகிவிட்டும் , ஆனால் நான் என் தந்தையிடம் பயந்ததில்லை , மரியாதைதான் உண்டு , அவர் வந்தால் உட்கார்ந்து இருக்கு நாற்க்காலியைவிட்டு எழுவது போன்ற போலி மரியாதையை நான் தந்ததில்லை அவரும் எதிர்பார்த்தது இல்லை

          காப்பியங்களிலும் சினிமாவிலும் தாய்க்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போற்றபடுகின்றார்கள். இளம் வயதில பல கனவுடன் இருக்கு ஒரு ஆண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு மீதிவாழ்நாள் முழுக்க தன் வாரிசுகளுக்காகவே உழைக்கும் தந்தையை அதிகம் போற்றியதில்லை


சிங்கப்பூர் வந்து சம்பாரித்து ஊரில் வீடுகட்டி முடித்த பின் ஒருநாள் என் தந்தையிடம் "உங்கள் நிறைவேறா ஆசை என்று ஏதாவது இர்ருந்தால் சொல்லுங்கள் அதை நான் செய்கிறேன் " என்று நான் கேட்க

" எனக்கு என்னப்பா வேனும் நீங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்" என்றார்

அதுதான் என் அப்பா...

 
 
என்றும்
பிரியமுடன் பிரபு . .
.
.



Sunday, March 08, 2009

நாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு




அழகான இரவொன்றின்
அமைதி குலையும்படி
எங்கள் குடியிருப்பின்
வடக்குப் பகுதியிலிருந்து - சில
தெரு நாய்கள் குரைத்தது

எல்லா நாய்களைப் போல
லொல் லொள் என்றில்லாமல்
மதம் மதம் என்று அது குரைத்தது

" இது நாய்களிலே ஒரு
பைத்தியக்கார  நாய் " - என்று
எண்ணினோம் நாங்கள்

நாட்கள் நகர நகர
நாய்களின் எண்ணிக்கை
அதிகமானது - ஆம்
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்
நாயாக மாறியிருந்தார்கள்


ஆம்
இந்த நாய்களின்
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு
அப்படியொரு சக்தி


காதுகொடுத்துக் கேட்போரையெல்லாம்
மயக்க நிலைக்குத் தள்ளி
நாய்களாய் மாற்றிவிடும்


இப்போ
மதம் மதம் எனற சப்தம்
சற்று அதிகமகவே கேட்கிறது


நாக்கை தொங்கவிட்டபடி
கூர்பற்களை காட்டும் அந்த
நாய்களை கண்டு

மனிதர்களாகிய எங்களுக்கு பயம்
அவற்றை அடித்து விரட்ட
ஆசைதான் - ஆனால் எங்களையும்
கடித்து விடுமோ என்ற பயம்


மதம் மதம் என்று
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக

அவைகள் அடித்து கொள்கின்றன


தெருவில் நடக்கவே
பயமாக உள்ளது எங்களுக்கு



இன்னும்
மதம் மதம் என்ற சப்தம்
கேட்டுகொண்டே இருக்கிறது
மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது


பயம் அதிகமாக உள்ளது
பக்குவப்பட்டவர்கள் குறைவாக உள்ளனரோ ?!?- என்று
பயம் அதிகமாகவே உள்ளது


சப்தம் கேட்டுகொண்டே இருக்கு
மதம்.. மதம்.. மதம்..
.


http://www.vaarppu.com/view/1740/


என்றும்
பிரியமுடன் பிரபு......


 

Monday, March 02, 2009

உன் சிரிப்பை விட.................!!!!!!!!!!!!


...............................................................................
என்னை எல்லோரும்
கவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
..................................................................................


குறிப்பு - "சிரிப்பைவிட" என்பதற்க்கு பதில் "முகபாவம்" என்றும்
இருக்கலாம்
( ஓட்டு போட்டுத்தான் ஆகனும் )

Monday, February 23, 2009

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்
......
அங்குதான் அதிர்ச்சியே ! ஆரம்ப காலத்தில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என ஆரம்பித்த குடி பழக்கம் பிறகு மூன்று மாதம் ஒருமுறை , மாதம் ஒருமுறை என முன்னேறி (!!!!) இப்போ வாரம் வாரம் சனி ,ஞாயிறு என்று வந்து விட்டது

குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது । கூடவே புகைவண்டி அதுதாங்க சிகரெட்। ஆரம்பத்தில் அளவாக இருந்தது இப்போது அவர்களை அடிமையாக்கிவிட்டது
இதுக்கு என்ன கரணம் ??

** ஒன்று - நன்பர்கள் என்ற பெயரில் பழகுபவர்கள்- பத்து பதினைந்து வயதுகளில் அவர்கள் பழகும் பலரிடம் இருந்து இது வருகிறது . குறிப்பாக அவர்களை விட வயதில் மூத்தவர்களிடம் பழகும் போது அவர்களையே ஒரு ஹீரோவாக எண்ணி அவர்களிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் இவர்களிடமும் பரவுகிறது

*** இரண்டு - சினிமா நாயகர்கள்
இந்த மகான்கள் (!!!) பங்கு இதில் அதிகம் படம் முழுக்க சிகரெட் வாயுமாக அலைவது , சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது , ஸ்டைலாக பிடிப்பது , காலரில் இருந்து சிகரெட் எடுப்பது இப்படி செய்யும் அந்த புன்ணியவான்களின் நடிப்பில்(!!!) மயங்கும் ரசிகன் சிகரெட், மது இல்லையென்றால் ஏதோ கவுரவ பிரச்சனை போல நினைக்கிறான் . நாமும் முயற்ச்சிப்போமே என்று ஆரம்பத்தில் தொடங்கி பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்...
அதிலும் இப்போ ஒருத்தன் இருக்கான் எல்லா படத்திலும் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கேள்வி கேட்க்கும் அப்பாவை திட்டுவது , ஏதாவது அழகான(இது முக்கியம்) பெண்ணை பார்த்தவுடன் "எலும்பு" துண்டை பார்த்த "நாய்' போல பின்னாடியே செல்வது (பின்னனி இசை உபயம் யுவன்) ... இவனையெல்லாம் பார்த்து வளரும் சிறுசுகள் வாழ்வை இப்படித்தான் வாழனும் என நினைக்கின்றன,
(ரசிகர் மன்றத்துல இருந்து ஆட்டோ வரலாம்..........)
" சினிமாவில் எவ்வளவோ நல்லகருத்துகள் உள்ளன அதையெல்லாம் பின்தொடர்கிறார்களா ??? " - என்று கேட்கலாம்
"நல்லது என்பது ஊட்டசத்து போல உடனே "ஆம்ஸ்" வளர்ந்து விட்டதா என பார்க்க கூடாது, மெல்ல மெல்லத்தான் பலன் கிடைக்கும் ,அதிகம் எடுத்து கொண்டாலும் கூட..."
" கெட்டது என்பது விசம் போல உடனே செயலாற்றும் , முதலில் உடலை குளிரச்செய்து பின்பு உயிர் நீக்க செய்வது விசம் , அதுபோலவே இந்த போதை வஸ்த்துகளும் முதலில் மகிழச்செய்து பின்பு துன்பம் கொடுக்கும்।"
போதை பழக்கம் உள்ளவர்கள் தாங்கள் ஒரு அடிமை என்பதை உணரவேண்டும் அப்போதுதான் அதிலிருந்து விடுதலையாவது பற்றி யோசிக்க முடியும் , இல்லாவிட்டால் மிக கடினம்
யாரையும் குறைசொல்ல வரவில்லை। என் சகாக்கள் சிகரெட் , மதுவால் அவர்களும் கெட்டு குடும்பத்துக்கும் பிரச்சனையாகி இருப்பதை பார்க்கும் பொழுது ஏற்ப்பட்ட ஆதங்கம் தான் இது , குடிப்பது அவரவர் உரிமை அதில் தலையிட நான் யார்?!?!?!


ஒரு கவிதை ;
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)।
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???

( மப்புல இருந்தாலும் சரி கண்டிப்பா ஓட்டு போடனும்)

Wednesday, February 18, 2009

யூத்புல் விகடனில் என் கவிதை........






வாங்க மக்களே வாங்க

நான் சொல்லப்போறத அமைதியா கேளுங்க

அதாவது நான் எழுதின கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளியாகியுள்ளது


இங்கே சென்று பார்க்க



இன்று மட்டும் இங்கே



இது ஏற்கனவே என் பதிவில்
(எதுக்கு சரண்யா படம்???.........
ஹி ஹி சும்மாத்தான்..
படிக்கவர்ர யூத் எல்லாம் பார்த்துட்டு போகட்டும் )





You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...