Thursday, December 02, 2010

அவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத்தி,

கத்தி 

இது அழகான கத்தி
பளபளக்கும் கத்தி
மிகக் கூரான கத்தி

புத்தி மழுங்கியவன்
கையில் கிடைத்த
புராதான கத்தி

தொண்டைகிழிய கத்தி கத்தி -தன்
தொப்பைவயிற்றை குத்தி கிழித்தான்

பெருகியோடும் குருதிகண்டு
பேர் உவகை கொண்டுச் சிரித்தான்

குடல்கள்  எல்லாம்
வெளியே தொங்க - மது
குடித்தக் குரங்காய் 
குதித்து முடித்தான்..

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

கிழிந்தது இவன் வயிறுதான் என்று
இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
போ.. போ.. நாசமாய் போ...........

**********

நேற்று அலுவலகம் முடிந்து வருகையில் தொடருந்தில் "தஸ்லீமா நஸ்ரின்" எழுதிய "இது என் நகரம் இல்லை" (தமிழில் யமுனா ராஜேந்திரன்) படித்தேன் அதில் ஒரு கவிதை

அவமானம் 7 டிசம்பர் 1992

சதிபதா தாஸ் அன்று காலை
எனது வீட்டுக்குத் தேநீருக்கு வருவதாகத் திட்டம்
மனம் நிறைந்தபடி
அரைட்டை அடித்துக் கொண்டிருப்பதும்
செஸ் விளையாடுவதும் யோசனை
சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்

இன்நு அவன் வரவில்லை

குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்
சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து
பலவந்தமாக அவனைத்
தாக்கியது என்று செய்தி வந்தது

போனவர்கள் மண்ணெண்ணையை
அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்
மேசைகள் நாற்காலிகள் படுக்கைகள் அலமாரிகள்
சட்டி பானைகள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
துணிமணிகள் புத்தகங்கள்
என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்

அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்
ஒருசேரக் கொழுத்தி
மண்ணெண்ணை தெளித்த எல்லா இடங்களுக்கும்
சுண்டி விட்டார்கள்

தீ பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்
வீட்டு முன்றிலில் வெறித்தபடி நின்று
தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸார்
வானதத்தின் மீது படியும்
கறும்புகையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.


மாலையில் நான்
சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்

சதிபதா தாஸ் தனது முதாதையரின்
சாம்பலின் மீதும்
கரிந்த கட்டடைகளின் மீதும்
தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்
இரத்தம்
அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது
மார்பிலும் முதுகிலும்
கறுத்த தழும்புகள் தெரிந்தன

அவமானத்தில் எனக்குக் கூசியதால்
என்னால்
அவனைத் தொடமுடியவில்லை


*1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இந்துகக்கள் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.

**தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.

**********
இதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை
("கத்தி-மதம்" ,  "தொப்பைவயிறு-சமுகம்"  யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)

நன்றி
பிரியமுடன் பிரபு...

.

23 comments:

  1. நல்ல பகிர்வு நண்பா..தொடருங்கள்..

    ReplyDelete
  2. இதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை
    ("கத்தி-மதம்" , "தொப்பைவயிறு-சமுகம்" யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)


    .....கண்டிப்பாக.

    ReplyDelete
  3. அருமை! புரிகிறது!

    ReplyDelete
  4. நல்ல கவிதை....

    ReplyDelete
  5. படங்கள் கவிதையை விட மிக அருமை...

    ReplyDelete
  6. தாங்கள் ருசித்ததோடு,எங்களுக்கும் பரிமாறியதற்கு நன்றி.வாழ்த்துகள்
    என் பதிவு இடுகை
    http://chennaipithan.blogspot.com/2010/11/blog-post.html
    பாருங்கள்.

    ReplyDelete
  7. வரிகள் அருமை

    ReplyDelete
  8. வாருங்கள் பிரபு ,
    நான் புலியூர் , நாம் ஊரில் உக்ள்ள பதிவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி

    கவிதை எல்லாம் கலக்கல்

    ReplyDelete
  9. இவனை நிறுத்திச்
    சொன்னால் கேட்பானா ??!?

    மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
    போ.. போ.. நாசமாய் போ...........

    amam yarum ithai purinthu kolvathey illai...

    ReplyDelete
  10. ஹரிஸ் said...
    நல்ல பகிர்வு நண்பா..தொடருங்கள்..

    ...///

    நன்றிங்க

    ReplyDelete
  11. Chitra said...
    இதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை
    ("கத்தி-மதம்" , "தொப்பைவயிறு-சமுகம்" யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)


    .....கண்டிப்பாக.
    ////


    கண்டிப்பாக.

    ReplyDelete
  12. எஸ்.கே said...
    அருமை! புரிகிறது!

    ///
    நன்றிங்க

    ReplyDelete
  13. பாரத்... பாரதி... said...
    நல்ல கவிதை....

    ///

    நன்றிங்க

    ReplyDelete
  14. சென்னை பித்தன் said...
    தாங்கள் ருசித்ததோடு,எங்களுக்கும் பரிமாறியதற்கு நன்றி.வாழ்த்துகள்
    என் பதிவு இடுகை
    http://chennaipithan.blogspot.com/2010/11/blog-post.html
    பாருங்கள்.

    ////
    நன்றிங்க

    ReplyDelete
  15. THOPPITHOPPI said...
    வரிகள் அருமை


    ///
    நன்றிங்க

    ReplyDelete
  16. karurkirukkan said...
    வாருங்கள் பிரபு ,
    நான் புலியூர் , நாம் ஊரில் உக்ள்ள பதிவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி

    கவிதை எல்லாம் கலக்கல்

    ////

    புலியூருக்கு ஒரு திருமணத்துக்காக வந்துள்ளதாக நினைவு . தொடர்பில் இருங்கள்
    ஊருக்கு வரும் பொது சநதிப்போம்

    ReplyDelete
  17. தமிழரசி said...
    இவனை நிறுத்திச்
    சொன்னால் கேட்பானா ??!?

    மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
    போ.. போ.. நாசமாய் போ...........

    amam yarum ithai purinthu kolvathey illai...

    ///////

    ஆமாங்க

    ReplyDelete
  18. வரிகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு! :-)

    ReplyDelete
  20. தமிழ்த்தோட்டம் said...
    வரிகள் அனைத்தும் அருமை

    /////

    நன்றி

    ReplyDelete
  21. ஜீ... said...
    நல்ல பகிர்வு! :-)

    ///

    நன்றி

    ReplyDelete
  22. கத்தி ய்ம்மா பார்த்ததும் கொல நடுங்குது

    அருமையான் பகிர்வு

    ReplyDelete
  23. Jaleela Kamal said...
    கத்தி ய்ம்மா பார்த்ததும் கொல நடுங்குது

    அருமையான் பகிர்வு

    //

    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...