அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
Wednesday, January 14, 2009
Sunday, January 11, 2009
இதனால் சகலமானவர்களுக்கும்...........(11/01/09-- 3.45 am)
நன்றி
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.....
வலைப்பதிவு நன்பர்கள் எனக்கு "பட்டாம்பூச்சி விருது" தந்துள்ளனர்.
("என்ன கொடுமை சார் இது"-- என்று தலையில் அடித்துக்கொண்டால் தடா,பொடா,வாடா போடா என்ற அனைத்து சட்டங்களும் அவர்கள்மீது பாயும்..தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி சிறையில் அடைக்கபடுவீர்கள்..ஜாக்கிரதை)
ஒன்றல்ல இரண்டல்ல மூன்று "பட்டாம் பூச்சி" விருதுகள்.
அவை
அவை
1. குந்தவை
3.தாரணிபிரியா
விருது கொடுத்து பாராட்டிய மூவருக்கும் நன்றி
நான் காகிதத்தில் கிறுக்கியவையெல்லாம் ஒருமூலையில் கிடந்து கரப்பான்பூசிகளுக்கு பலியாகிக்கொண்டிர்ருந்தன.
இப்போது இனையத்தில் ஏற்றியதில் பட்டாம்பூச்சி கிடைத்துள்ளது
இதை நானும் 3 பேருக்கு கொடுக்கிறேன்
குந்தவை,தமிழ்தோழி , தாரணிபிரியா இவர்கள் மூவரின் பதிவுகளில் அதிகம் நான்படித்திருக்கிறேன்..இவர்களுக்கு கொடுக்க ஆசை.ஆனால் அது ஏதோ அரசியல் கூட்டணிபோல் ஆகிவிடும்
எனவே
இவங்க கவிதைகள் அழகாக இருக்கும்..இவர் விஷாலின் தீவிர ரசிகை
உதாரணத்துக்கு ஒரு கவிதை....
செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!--இன்னும் இப்படி நிறைய காதல்ரசம் சொட்டும்
இவரது கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
3.திவ்யா
இவரின் கதைகளின் நடுவே வரும் கவிதைகளை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
சரி,
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும்
இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.
''''''''' கண்டிப்பா ஓட்டு போடனும்'''''''
(என்னது ?????????!!!! ஓட்டுக்கு 5000 ரூபாய் வேனுமா??? இதுஎன்ன திருமங்கலம் இடைத்தேர்தலா??????
பிச்சுபுடுவேன் பிச்சு..
இந்த அரசியல் வாதிக உங்களை நல்ல கெடுத்து வச்சிருக்காங்க)
பின்குறிப்பு : இங்கே கள்ள ஓட்டுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்
வர்ட்டாஆஆஆ
Wednesday, December 24, 2008
அடியே கண்ணம்மா.................24/12/2008
.

அடியே கண்ணம்மா

அடியே கண்ணம்மா
தூக்கத்த விட்டுப்புட்டு
துள்ளி எழுந்து படிபுள்ள..........
“ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
அரவணைச்சு பாத்துக்குவா(ன்)
பொட்டைய பெத்துட்டியே......
போதாத காலம்தான் இனி உனக்கு” - என்று
பேசிய வாய்க்கெல்லம்
டார்ச் அடிச்சு பாக்கவேணும்
டாக்டராகி நீயும் வா!
பெத்தவ(ன்) போயிட்டான்
சாமியின்னு ஆயிட்டான்
ஒத்தையில் நாநின்னு
ஒருவேல சோறுதின்னு
ஒவ்வொண்னா சேத்துவச்சே(ன்)
மெத்த வீடுவேண்டாம்
மேணிகொழுக்கதீணி வேண்டாம்-இந்த
கட்ட வேகுமுன்னே-நீ
டாக்டராகி காட்டிபுடு.....
பக்கத்துவீட்டு பார்வதியின்
சொத்த பல்லுக்கும்
மூலவீட்டு மாலதியின்
மாலகண்ணூக்கும்
நீதான்டீ காவலு
கண்விழிச்சு எழுந்துவா.......
கான்மெண்டே பாக்காத
காட்டுபய ஊருக்குள்ளே
காலேஜு போறபுள்ள
மாட்ட மேய்க்கிற மனுசனுக்கும்
மனுசன எய்க்கிற மாட்டுக்கும்
மருத்துவச்சி நீதான்டீ
மணியாச்சு எழுந்துவா.............
...................................................................
படிச்சீங்களா...........
அப்படியே ஓட்டுபோட்டுட்டு போங்க
...................................................................
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1531
Monday, December 15, 2008
சுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008
..............................
கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................

சரணம் 1 :
சரணம் 2 :
கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................

பல்லவி :
சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் அவன் துறவி
இவளை
காணாவிட்டால் அவன் துறவி
உண் கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........ (உன்னாலே ......)
(சிட்டு..............)
சரணம் 1 :
வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........
இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........
தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்......... (பாவை.......)
(சிட்டு சிட்டு குருவி..)
சரணம் 2 :
கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தென்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......
பூப்போல் தேகம் கண்டேன்
புயல் போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........
அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க
யாருமின்றிசுற்றி திரியுதே!! ( கேட்க.......)
(சிட்டு சிட்டு...)
........................................................Sunday, December 07, 2008
கூவமும் குளியலறை நீரும்

பெண்ணே
உன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்
................................................................................................................
சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ
.................................................................................................................
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530
Subscribe to:
Posts (Atom)