Friday, April 02, 2010

வெற்றி உனக்கே!




பெண்ணே
நாம் பிரிந்தபோதே
காதல் இறந்துவிட்டது
என்றிருந்தேன்-ஆனால்......

ஆண்டு பலகழிந்து - இன்று
ரேசன் க்யூவில் பார்த்த போது
மூளையின் உச்சியில்
புதிதாய் ஒரு பூ பூத்தது!
அப்போது-உணர்ந்தேன்
நம் காதலுக்கு உயிருண்டு..........
 
ஆயிரம் வாட்ஸ்
அனல் மின்சாரமாய்
தாக்கும் - கண்ணழகு
மாறிவிட்டது........

தினமும் புதிதுபுதியதாய்
பூ பூக்கும்
உன் புன்னகை
மாறிவிட்டது........

கன்னத்தில் குழிமாறி
குழியில் கன்னம் -
என்றாகிவிட்டது........

பட்டு மேனியது - இன்று
பட்டு போய்விட்டது......

எல்லாம் மாறிவிட்டது
ஒன்றை தவிர ! 

உனக்கு நினைவிருக்கா ?
ஒருமுறை இருவரும்
ஓட்ட பந்தயத்தில் ஓடினோம்
எனக்குமுன் ஓடி
வென்றாய் நீ..........

தொலைந்த கொலுசை
தேடினோம் -
எனக்குமுன் எடுத்து
வென்றாய் நீ..........

கல்யாணம் என்ற
பந்தயத்திலும் -
எனக்குமுன் செய்து
வென்றாய் நீ..........

ஆயிரம் மாற்றங்கள்
வந்தபிறகும் - இன்று
இந்த ரேஹன் க்யூவிலும்
எனக்குமுன்
வெற்றி உனக்கே..........

(வயதானவர்களுக்கு)


.பிரியமுடன் பிரபு...
.
.


27 comments:

  1. //கண்ணத்தில் குழிமாறி
    குழியில் கண்ணம் -
    என்றாகிவிட்டது........//

    கன்னம் !

    :)

    ReplyDelete
  2. கோவி.கண்ணன் said...

    //கண்ணத்தில் குழிமாறி
    குழியில் கண்ணம் -
    என்றாகிவிட்டது........//

    கன்னம் !

    ///

    நன்றி அண்ணா
    மாற்றியாச்சு

    ReplyDelete
  3. அருமை, முதியவர்களுக்கும் காதல் கவிதை எழுதியது நன்று

    ReplyDelete
  4. அதென்ன வயதானவர்களுக்கு. என்னை மாதிரி சின்ன பிள்ளைங்க எல்லாம் படிக்ககூடாதா?

    ReplyDelete
  5. அபுஅஃப்ஸர் said...

    அருமை, முதியவர்களுக்கும் காதல் கவிதை எழுதியது நன்று

    /////

    நன்றி

    ReplyDelete
  6. kunthavai said...

    அதென்ன வயதானவர்களுக்கு. என்னை மாதிரி சின்ன பிள்ளைங்க எல்லாம் படிக்ககூடாதா?
    ////

    வா கண்மனி
    நலமா?
    ஏன் உங்க அம்மா குந்தவை வரல??
    சரி விடு

    ReplyDelete
  7. முதுமை தவிர்க்க இயலாதது - அதனை வைத்து ஒரு அழகிய கவிதை - முதுமை ரசிக்கப்பட வேண்டும் பிரபு - உண்மை நிலை இதுவாக இருக்க வேண்டும்

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. நான் நினைக்கவே இல்லை
    உன் கவிதை நாயகியின் வயதை ஒப்பிடும் போது உன் வயது?????????
    அருமையாக உள்ளது...வழ்த்துக்கள்....
    "கன்னத்தில் குழிமாறி
    குழியில் கன்னம் -
    என்றாகிவிட்டது"........

    ReplyDelete
  9. முதுமை தவிர்க்க இயலாதது - அதனை வைத்து ஒரு அழகிய கவிதை - முதுமை ரசிக்கப்பட வேண்டும் பிரபு - உண்மை நிலை இதுவாக இருக்க வேண்டும்

    நல்வாழ்த்துகள் பிரபு
    ////

    நன்றி அய்யா

    ReplyDelete
  10. பாலா said...

    நான் நினைக்கவே இல்லை
    உன் கவிதை நாயகியின் வயதை ஒப்பிடும் போது உன் வயது?????????
    அருமையாக உள்ளது...வழ்த்துக்கள்....
    "கன்னத்தில் குழிமாறி
    குழியில் கன்னம் -
    என்றாகிவிட்டது"........

    ///

    எலே பாலா??
    ஓவர் குசும்பு
    ஒரு பச்சபுள்ளய பார்த்து கேக்குற கேள்வியா இது??

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு பிரபு

    ReplyDelete
  12. //வா கண்மனி
    நலமா?
    ஏன் உங்க அம்மா குந்தவை வரல??
    சரி விடு

    ha.....ha....
    குழந்தை மனசுள்ளவங்க நாங்க எல்லாம் எப்போதும் சின்ன பிள்ளைங்க தான்.

    ReplyDelete
  13. யாநிலாவின் தந்தை said...

    நல்லாயிருக்கு பிரபு
    ///

    நன்றிங்க

    ReplyDelete
  14. kunthavai said...

    //வா கண்மனி
    நலமா?
    ஏன் உங்க அம்மா குந்தவை வரல??
    சரி விடு

    ha.....ha....
    குழந்தை மனசுள்ளவங்க நாங்க எல்லாம் எப்போதும் சின்ன பிள்ளைங்க தான்.
    /////////////

    மக்களே கவனியுங்கள் யூத்தாம்?????
    எக்கோ கண்மனி கூப்பிடுது போய் என்னானு கேளுங்க

    ReplyDelete
  15. Anonymous said...

    very well

    /////

    அடடே அணனி வந்தால் திட்டத்தான் வருவார்
    இப்ப பாராட்டுக்கள்
    பெயர் போட்டே சொல்லியுக்கலாமே?!?!?

    ReplyDelete
  16. ஜெய்லானி said...

    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
    \////


    நன்றிங்க

    ReplyDelete
  17. ரசித்தேன் நண்பா. வார்த்தைகளைக் குறைத்தால் இன்னும் கவிதைக்கான அடர்த்தியும், அர்த்தமும் கூடும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  18. மாதவராஜ் said...

    ரசித்தேன் நண்பா. வார்த்தைகளைக் குறைத்தால் இன்னும் கவிதைக்கான அடர்த்தியும், அர்த்தமும் கூடும் எனத் தோன்றுகிறது.
    /////

    நன்றி

    ReplyDelete
  19. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  20. கன்னத்தில் குழிமாறி
    குழியில் கன்னம் -
    என்றாகிவிட்டது........]]

    சிரிப்பை வர வைத்தாலும்

    சிந்தனை அழகு தான்.

    ReplyDelete
  21. www.bogy.in said...

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in
    ///////////////

    நன்றி

    ReplyDelete
  22. நட்புடன் ஜமால் said...

    கன்னத்தில் குழிமாறி
    குழியில் கன்னம் -
    என்றாகிவிட்டது........]]

    சிரிப்பை வர வைத்தாலும்

    சிந்தனை அழகு தான்.
    /////////
    வாங்க ஜமால்
    எப்படி இருக்கீங்க
    எங்க இருக்கீங்க??

    ReplyDelete
  23. r u singaporeian?

    ReplyDelete
  24. Anonymous said...

    r u singaporeian?
    ///////////
    இல்லிங்கோ தமிழ்நாட்டுகாரன்
    இப்போ சிங்கபூரில் வேலை செய்கிறேன்

    ReplyDelete
  25. வணக்கம் பிரபு. நான் உங்களின் புதிய நண்பன். முதியவர்களுக்கு காதல் கவிதை நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த வரிகள்...
    "கன்னத்தில் குழி மாறி
    குழியில் கன்னம் என்றாகிவிட்டது..."
    நல்ல கவிதை.

    ReplyDelete
  26. ணிகண்டபிரபு said...

    வணக்கம் பிரபு. நான் உங்களின் புதிய நண்பன். முதியவர்களுக்கு காதல் கவிதை நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த வரிகள்...
    "கன்னத்தில் குழி மாறி
    குழியில் கன்னம் என்றாகிவிட்டது..."
    நல்ல கவிதை.
    /////////////


    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...