Saturday, March 20, 2010

ஜெயமோகனின் ஏழாம் உலகமும் கோவில் கருவறையும்..!!!!!

 நூல் : ஏழாம் உலகம்
ஆசிரியர் : ஜெய மோகன்
விலை : (Rs: 170)
வெளியீடு: தமிழினி


ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி வந்த "நான் கடவுள்" படம் பார்த்த பிறகு அந்த நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது , இணையத்திலும் சிலர் இந்த நாவல் பற்றி எழுதியிருந்தார்கள் , சென்ற வருடம் ஊருக்கு போனபோது வாங்கி வந்தேன் சமிபத்தில்தான் படித்தேன்.
                                    அதிகம் வட்டார வழக்கிலேயே எழுதப்பட்டு இருந்த்து . வட்டார வழக்கை சரளமாக கையாண்டிருக்கிறார். புரிந்துகொள்ள ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்த்து பிறகு பழகிவிட்டது. இப்படியான் உடல்  குறையுள்ள பிச்சைகாரர்கள் பற்றி எழுதத்துணிந்ததே பெரிய விடயம் . அதற்க்கே  ஜெமோ-வை பாராட்டலாம் . இது யாரும் அவ்வளவாக அறியாத களம் இன்னும் சொல்லபோனால் அறிய விரும்பாத களம் . முகம் சுளிக்க கூடிய இடங்களைகூட அப்படியே எழுத்தாக்கியுள்ளார்
                      "நான் கடவுள்" படத்தில் வந்த கதாபாத்திரங்கள் பல இந்த நாவலில் இருந்து முழுதாக எடுக்கபட்டுள்ளது . படத்தில் வரும் ஆர்யா,பூஜா வை தவிர . ஆனால் நாவலின் பயணம் வேறு பக்கம் ,அந்த படத்தின் பயணம் வேறு பக்கம். நாவலை முழுவதும் படித்து முடித்ததும் ஏதோ புது உலகுக்குள் சென்றுவந்த உணர்வு.
                     சரி தலைப்புக்கு வருவோம் . இந்த நாவலில் ஒரு இடம் 

...........................................................................................................

"நடை அடைக்கனும்" என்றார் போத்தி , கையில் ஒரு குடம் தண்ணீர்

'இப்பம் என்னத்துக்க அபிஷேகம்?" -பண்டாரம்

"அபிஷேகம் இல்லடே , உள்ள குறெ வெத்தில துப்பல் கெடக்கு .வெள்ளம் ஊத்திவிட்டா அலம்பிக்கிட்டு போவும்" என்றபடி உள்ளே போனார்

"உள்ளேயா துப்புவீக?" என்றார் பண்டாரம்.

"பின்ன துப்பாம ? வாயில வெத்தில இல்லாம எம்பிடு நேரம் இருக்கமுடியும்? அதுக்காக பத்து நிமிஷத்துக்கு ஒருக்கா துப்பதுக்கு வெளியே வரமுடியுமா? நீ திருவந்தரத்தில் பாக்கணும்.வைகுண்ட ஏதாதசிக்கு எட்டு போத்திமாராக்கும் உள்ள .ராத்திரி பகலுண்ணு இல்ல.பத்து நிமிஷம் வெளியே போனா பத்து முந்நூறு ரூபா கைவிட்டு போயிடும்.உள்ள சாமிக்க காலடியில வெத்திலச் சண்டி மலை மாதிரி குமிஞ்சு கிடக்கும் பாத்துக்கோ.."
"தோஷம் இல்லியோ?"

"என்னடே தோஷம்?இத்தாம் பெரிய கோவிலு.துப்பதுக்கு ஒரு என்முண்டா?மூத்திரம் போவ எடமுண்டா?சொல்லு.வாறவனுக அடக்கிகிட்டு வெளியே போவானுக.இங்க கிடந்து சாவுதவனுக? மடப்பள்ளியிலதான் பாதிப் பேரு ஒண்ணுக்கு இருக்கது.இல்லாம திருவிழா நாளில இதுகாட்டும் எறங்கி ஏழுதெரு தாண்டி வீட்டுக்கா ஓட முடியும்?"என்னடே பண்டாரம் மொகம் சடஞ்சு கிடக்கு?"
"ஒண்ணுமில்லை"

"சொல்லணுமானா சொல்லு.நான் ஒருத்தனையும் ஏமாத்தினது இல்ல .அதனால் இன்னைக்குவரை சாமி கும்பிட்டதும் இல்லை"

"முருகனை?" என்றார் பண்டாரம்

"ஆரு நம்ம கோனாரு முருகனா? நான் கண்டிட்டுள்ள முருகன் அவன்தான்"

பண்டாரத்துக்கு சிரிப்பு வந்தது

" இங்க பாருடே பண்டாரம்,இது ஆறடிக் கல்லு.பத்து நானூறு வரிசமாட்டு பலரும் கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடுதானுக.நமக்கு இது தொளிலு .உனக்கு முத்தம்மை,எனக்கு இது.அது சதை இது கல்லு.அது அளியும்,இது இன்னும் ஆயிரம் வருசம் இருக்கும்

...........................................................................
இதுதான் நான் சொல்ல வந்த இடம்.இதை ஜெமொ எதற்க்காக சுட்டியுள்ளாரோ எனக்கு தெரியாது. 

                                      என் பள்ளி விடுமுறை நாட்களில் வர்ணம்பூசும் வேலைக்கு செல்வது உண்டு . அப்படி ஒருமுறை எங்கள் பெயிண்டரிடம் ஒரு கோவில் சுத்தம் செய்யும் பணி கிடைத்தது. நானும் சென்று வேலை செய்தேன்.ஒருநாள் கருவறையை சுத்தம் செய்ய சொன்னார்கள்.நானும் சென்றேன்.மிக சிறிய அறை அது. நான்கு மூலைகளிலும் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக இருந்தது . அருகில் பார்த்தபோதுதான் தெரிந்த்து அது வெற்றிலை துப்பல் என்று.பூசை செய்பவரின் வாயில் எப்போதும் சிவப்பாக இருக்கும் அது வெற்றிலையா?பொன்பராக்கா? எனக்கு தெரியாது.அதை இங்கேதான் துப்பியுள்ளார் . மேலும் சிலைக்கு பின்புறம் ஒரு தவளை இறந்து கிடந்தது , மாலையில் இருந்து உதிர்ந்த பூ மற்றும் இன்ன பிற வஸ்துக்கள் காய்ந்து அழுகி கிடந்தன. கொஞ்ச நேரத்துக்கு மேல் அதற்க்குள் இருக்க முடியவில்லை. வேகமாக சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தேன் . அப்பாடா என்று இருந்தது .  திரும்பி சிலையை பார்தேன். "உன்னால் மட்டும்தான் இங்கே இருக்கமுடியும் உன்மையிலேயே நீ கடவுள்தான்" என்று  என் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்

                                           நடந்து 8 வருடத்துக்கு மேல் இருக்கும் . இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது . பலரும் புனிதமாக கருதும் இடம் , அதிலும் வேறு சாதிக்காரன் நுழைந்தாலே(?!!?) தீட்டு பட்டுவிடுமாம்,அப்படி பட்ட இடம் இப்படி இருக்கு.

                                             எல்லாம் சுத்தம் எதிலும் சுத்தம் என்று சொல்லும் அவர்களுக்கு அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஏன் தெரியவில்லை??,அல்லது விருப்பம் இல்லையா?

                                            போத்தி சொன்னது போல அது வெறும் கல்லு , பூசை செய்வது அவர் தொழில்.அதை அவர் உணர்ந்துள்ளார்.சமிபத்திய தேவனாதனும் அதை நன்கு உணர்ந்துள்ளார். இல்லாவிட்டால் அங்கே சில்மிசங்கள் செய்திருக்க மாட்டார். ஆக வேதம் படித்து கருவறை சென்று மந்திரம் ஓதும் இவர்களுக்கு தெளிவாக புரிந்தது மற்றவர்களுக்கு புரிவதெப்போ??
**********************
மேலும் இந்த நாவல் பற்றி சிலர்
ஜெமோவின் ஏழாம் உலகம் ! 

http://govikannan.blogspot.com/2009/09/blog-post_14.html 
  

http://koottanchoru.wordpress.com/2009/02/18/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/





***********************

ஐபிஎல் கோப்பை யாருக்கு??

அப்படியே ஓட்டு போட்டிருங்க......

**********************


நன்றி

என்றும்
பிரியமுடன் பிரபு...
.

17 comments:

  1. முதல் ஓட்டே மைனஸா

    நீங்க பிரபல பிரபு ஆயிட்டீங்க ...

    ReplyDelete
  2. அறிய தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நட்புடன் ஜமால் said...

    முதல் ஓட்டே மைனஸா

    நீங்க பிரபல பிரபு ஆயிட்டீங்க ...
    //////////
    நீங்க வேற ஜமால்
    நான் இன்னும் பிரபலம் ஆகல ஏன்னா அந்த மைனஸ் ஓட்டு அடியேன் போட்டது
    தவறுதலாக மவுசை அழுத்திவிட்டென் உடனே "உங்கள் ஓட்டு பதிவு செய்யபட்டது" என வருகிறது, பிறகுதான் கவனித்தேன் அது மைனஸ் ஒட்டு என
    அதை எப்[படி மாற்றுவது என் தெரியவில்லை

    ReplyDelete
  4. அபுஅஃப்ஸர் said...

    அறிய தந்தமைக்கு நன்றி

    ////

    நன்றிங்க

    ReplyDelete
  5. உண்மைதாங்க பிரபு...இந்து மதம்...ஆச்சாரம் என்று நமக்கு போதிக்கப்ப்டது எல்லாம் வெற்று மூட நம்பிக்கைகள்...எத்தனை கோயில் குருக்கள் காலையில குளிச்சுட்டு வர்றாங்கன்னு கூட நமக்கு தெரியாது......!

    சம்பிரதாய... பாடைக்குள்...
    ஏற்றப்பட்டது...என்னவோ...
    ஒப்பற்ற திராவிட இனம்தான்.

    அருமையான பதிவு....பிரபு!

    ReplyDelete
  6. நேற்று வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவில் சென்றிருந்தேன். கோவிலின் நிலை பற்றி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்த போது இதை படிக்க நேர்ந்தது.
    கோவில்கள் வியாபாரத் தளங்கள் ஆகிக் கொண்டும், வரவு குறைவாக இருக்கும் கோவில்கள் நிலை மோசமாகிக் கொண்டும் இருப்பதைக் காட்டுவது மனிதனின் இன்றைய நிலையத் தான். கோவில்கள் மனிதனின் உளம் காட்டும் கண்ணாடி.

    http://www.virutcham.com

    ReplyDelete
  7. Hi priyamudanprabu,

    Congrats!

    Your story titled 'ஜெயமோகனின் ஏழாம் உலகமும் கோவில் கருவறையும்..!!!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st March 2010 07:35:01 AM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/207313

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team
    ////////////
    எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  8. dheva said...

    உண்மைதாங்க பிரபு...இந்து மதம்...ஆச்சாரம் என்று நமக்கு போதிக்கப்ப்டது எல்லாம் வெற்று மூட நம்பிக்கைகள்...எத்தனை கோயில் குருக்கள் காலையில குளிச்சுட்டு வர்றாங்கன்னு கூட நமக்கு தெரியாது......!

    சம்பிரதாய... பாடைக்குள்...
    ஏற்றப்பட்டது...என்னவோ...
    ஒப்பற்ற திராவிட இனம்தான்.

    அருமையான பதிவு....பிரபு!

    ////

    நன்றி

    ReplyDelete
  9. Virutcham said...

    நேற்று வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவில் சென்றிருந்தேன். கோவிலின் நிலை பற்றி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்த போது இதை படிக்க நேர்ந்தது.
    கோவில்கள் வியாபாரத் தளங்கள் ஆகிக் கொண்டும், வரவு குறைவாக இருக்கும் கோவில்கள் நிலை மோசமாகிக் கொண்டும் இருப்பதைக் காட்டுவது மனிதனின் இன்றைய நிலையத் தான். கோவில்கள் மனிதனின் உளம் காட்டும் கண்ணாடி.
    ///////

    நன்றி

    ReplyDelete
  10. சில நேரங்களில் நாம் படிக்கும் ஒரு விஷயம் வாழ்க்கையின் சம்பவங்களில் வருவது தவிர்க்க முடியாதது. இது போல எனக்கும் சில இடங்களில் நடந்திருக்கிறது. Thanks for sharing

    ReplyDelete
  11. நல்ல பதிவு ..

    ReplyDelete
  12. உங்கள் பதிவு நாவலை தேட வைக்கிறது நன்றி

    ReplyDelete
  13. கிருஷ்ண பிரபு said...

    சில நேரங்களில் நாம் படிக்கும் ஒரு விஷயம் வாழ்க்கையின் சம்பவங்களில் வருவது தவிர்க்க முடியாதது. இது போல எனக்கும் சில இடங்களில் நடந்திருக்கிறது. Thanks for sharing
    ////

    நன்றி

    ReplyDelete
  14. பிச்சைக்காரன் said...

    நல்ல பதிவு ..

    ///

    நன்றி

    ReplyDelete
  15. Hisham Mohamed - هشام said...

    உங்கள் பதிவு நாவலை தேட வைக்கிறது நன்றி
    //////////

    ம்ம் நன்றி

    ReplyDelete
  16. இங்கே தான் மனிதன் சறுக்குகிறான், எங்கெல்லாம் தடையும் முகமூடியும் இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதம் இருப்பதில்லை . . . வருமானமற்ற கோவிலை விடுங்கள் . . . காலஹஸ்தி: அந்தக் கோயிலுக்கு வராத பணமா . . . இப்போது ஒரு கோபுரம் மட்டும் விழுந்துள்ளது மற்றதில் விரிசல் . . .

    ReplyDelete
  17. மார்கண்டேயன் said...

    இங்கே தான் மனிதன் சறுக்குகிறான், எங்கெல்லாம் தடையும் முகமூடியும் இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதம் இருப்பதில்லை . . . வருமானமற்ற கோவிலை விடுங்கள் . . . காலஹஸ்தி: அந்தக் கோயிலுக்கு வராத பணமா . . . இப்போது ஒரு கோபுரம் மட்டும் விழுந்துள்ளது மற்றதில் விரிசல் . . .
    /////////////

    ஆமாம்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...